டிவிஎஸ் எக்ஸ்எல் எல்லாம் ஓரமா போ! வெறும் ரூ500 கொடுத்து இந்த இ-லூனாவை புக் பண்ணலாம்!

கைனடிக் நிறுவனம் தனது இ-லூனா என்ற எலெக்ட்ரிக் மொபட்டை விரைவில் அறிமுகப்படுத்த உள்ளது. இதற்கான புக்கிங்கும் துவங்க உள்ளது. வெறும் ரூபாய் 500 இருந்தால் போதும் இந்த வாகனத்தை நீங்கள் புக் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பலர் இந்த வாகனத்தை வாங்க ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இந்த வாகனம் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கைனடிக் நிறுவனத்தின் லூனா என்பது சுமார் 20-30 ஆண்டுகளுக்கு முன்னர் சிறப்பான விற்பனையில் இருந்த ஒரு வாகனமாக இருந்தது. பெருநகரங்கள் முதல் சிறு கிராமங்கள் வரை சிறிய தூர பயணம் மற்றும் குறுகிய பாதைகள் வழியாக பயணிப்பதற்கு இது ஏற்ற வாகனமாக இருந்தது. கிட்டத்தட்ட சைக்கிள் பயன்படுத்துபவர்கள் ஒரு பைக் வாங்க வேண்டும் என நினைத்தால் முதலில் அவர்களது தேர்வு இந்த லூனாவாக தான் இருக்கும்.

E Luna Booking

இப்படியாக இந்தியர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த லுனா பின்னர் பல்வேறு காரணங்களுக்காக அதன் விற்பனை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது இந்தியா முழுவதும் எலெக்ட்ரிக் வாகன புரட்சி நடந்து வரும் நிலையில் இந்த புரட்சியின் ஒரு பலனாய் மீண்டும் லூனா வாகனம் மக்கள் மத்தியில் பயன்பாட்டிற்கு வர ஏற்ற தருணமாக இது மாறி உள்ளது.

இந்நிலையில் இந்நிறுவனம் வரும் பிப்ரவரி மாதம் முதல் பாதியில் தனது இ-லூனா என்ற எலெக்ட்ரிக் மொபட்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கான புக்கிங் விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த எலெக்ட்ரிக் மொபட்டை வாங்க நினைப்பவர்கள் வெறும் ரூபாய் 500 கொடுத்து இதை புக் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான புக்கிங் வரும் வெள்ளிக்கிழமை முதல் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

லூனா என்ற பெயருக்காகவே மக்கள் மத்தியில் இந்த வாகனம் மிகப்பெரிய அளவில் பிரபலமடையும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. ஆனால் இதன் பேட்டரி மற்றும் இதன் பயன்பாடு குறித்த தகவல்கள் எல்லாம் வெளியானால் நிச்சயம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பிரபலமாக இதன் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் எலெக்ட்ரிக் வாகன உலகில் மிகப்பெரிய புரட்சி ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த இ-லூனா என்ற மொப்பட் இந்தியாவில் அனைத்து விதமான பகுதிகளிலும் விற்பனையாகும் ஒரு வாகனமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மலை பிரதேசமாக இருந்தாலும் சரி, பாலைவனப் பிரதேசமாக இருந்தாலும் சரி, கடும் குளிர் உள்ள பிரதேசமாக இருந்தாலும் சரி, அல்லது கடல் பகுதியில் உள்ள பிரதேசமாக இருந்தாலும் சரி, அங்கு இந்த வாகனத்தை சுலபமாக பயன்படுத்த முடியும் என எதிர்பார்க்கலாம்.

இந்தியாவில் பெரு நகரங்களில் மட்டுமல்லாமல் சிறு, குறு கிராமங்களில் கூட இந்த எலெக்ட்ரிக் லுனா வாகனங்கள் நிச்சயிக்க மிகப்பெரிய அளவில் வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சாலை கண்டிஷனுக்கு ஏற்றவாறு இந்த இந்த டிசைன் செய்யப்பட்டிருப்பதால் தற்போது பயன்பாட்டில் உள்ள டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட்டிற்கு மாற்றாக இது ஒரு எலெக்ட்ரிக் வெர்ஷன் மொப்பாட்டாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இது ஒரு எலெக்ட்ரிக் வாகனம் என்பதால் இதை பயன்படுத்துவதற்கான செலவு என்பது மிகக் குறைவாகவே இருக்கும். கிராம மக்களுக்கு இப்படியான வாகனங்கள் மிகப்பெரிய அளவில் பலன் உள்ளதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தெருக்களில் பொருட்களை எடுத்து வந்து விற்பனை செய்யும் வியாபாரிகள் முதல் விவசாயிகள் வரை பலர் இதை வாங்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அதிக சரக்குகளை எடுத்துச் செல்லும் திறனும் இதற்கு இருக்கும்.

கைனடிக் கிரீன் நிறுவனம் இந்த இ-லூனா என்ற மொப்பாட்டை மகாராஷ்டிராவில் உள்ள ஆமதுநகர் பகுதியில் அந்நிறுவனத்துக்கு சொந்தமான ஆலையில் தயாரித்து விற்பனைக்கு கொண்டுவர திட்டமிட்டுள்ளது. தற்போது அந்த ஆலையில் ஆண்டுக்கு 5000 வாகனங்களை தயாரிக்கும் அளவிற்கு கொள்ளளவு கொண்டதாக இந்த ஆலை நிறுவப்பட்டுள்ளது. இது விற்பனைக்கு வருடம் வந்த பின்பு இதன் விற்பனையை பொறுத்து தயாரிப்பு அதிகப்படுத்தப்படலாம்.

டிரைவ்ஸ்பார்க்க கருத்து: லூனா என்ற முப்பாட்டிற்கு இந்தியாவில் மிகப் பெரிய பெயர் இருந்தது. அந்த பெயரை வைத்து தற்போது எலெக்ட்ரிக் வாகனம் ஒன்று அறிமுகமாகுவது நிச்சயம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கலாம். இதன் பேட்டரி மற்றும் பெர்ஃபார்மன்ஸ் பொறுத்து நிச்சயம் இதன் வெற்றி இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Thursday, January 25, 2024, 12:51 [IST]
English summary
E luna booking opens soon get ready to book with rs500
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+