ரூ.70,000க்கும் குறைவான விலையில் விற்பனைக்கு கிடைக்கும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள்.. லூனா முதல் ஆப்டிமா வரை!

இந்தியாவில் எலெக்ட்ரிக் டூ-வீலர் (Electric Two Wheeler)-களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. ஆனால், பெரும்பாலான மின்சார இரண்டு சக்கர வாகனங்களின் விலை ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமாகவே இருக்கின்றன. அதேவேளையில், நம் நாட்டில் ரூ. 70 ஆயிரத்திற்கும் குறைவான விலையிலும் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன.

அதில் டாப் இரண்டு எலெக்ட்ரிக் டூ-வீலர் மாடல்களையும், 1 லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக சிறந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஒன்றை பற்றிய தகவலையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். அதாவது, பட்ஜெட் விலையில் எலெக்ட்ரிக் டூ-வீலரை வாங்க விரும்புபவர்களுக்கு ஏற்ற சூப்பரான மூன்று மின்சார இரண்டு சக்கர வாகனங்களின் லிஸ்ட்டையே இந்த பதிவில் தொகுத்து வழங்கி இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

Electric two-wheelers available for sale under rs 70k

கோமகி எக்ஸ்ஜிடி எக்ஸ் ஒன் (Komaki XGT X One): இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இதுவாகும். இதன் விலை ரூ. 50,855 மட்டும் ஆகும். இந்த விலையிலேயே அதிக சிறப்பம்சங்களை இந்த எலெக்ட்ரிக் வாகனத்தில் கோமகி வழங்குகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

அந்தவகையில், இலகு ரக எடைக் கொண்ட ஃப்ரேமைக் கொண்டே இந்த வாகனத்தை கோமகி தயார் செய்திருக்கின்றது. இதுவே இந்த இ-ஸ்கூட்டரின் மிக முக்கியமான அம்சமாகும். இது தினசரி பயன்பாட்டிற்கு உகந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். இதனை நான்கு விதமான தேர்வுகளில் கோமகி விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

ரூ. 50,855என்பது ஆரம்ப நிலை தேர்வின் விலையே ஆகும். விலை குறைவாகவே இருப்பதைப் போலவே அது ரேஞ்ஜையும் சற்று குறைவாகவே இது வழங்கும். ஓர் முழு சார்ஜில் 50 கிமீ முதல் 55 கிமீ வரையில் மட்டுமே அது ரேஞ்ஜ் தரும்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரங்கள் முதல் 5 மணி நேரங்களே போதுமானது. சிறப்பம்சங்களாக மிகவும் பிரகாசமாக ஒளிரும் எல்இடி லைட், பிஎல்டிசி ஹைப் மோட்டார், பார்க்கிங் அசிஸ்ட், க்ரூஸ் கன்ட்ரோல் மற்றும் ரிவர்ஸ் அசிஸ்ட் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன.

கைனடிக் இ-லூனா (Kinetic e-Luna): இ-லூனா இந்தியாவில் ரூ. 69,990 தொடங்கி ரூ. 74,990 வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது சென்னை எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும். எக்ஸ்1 மற்றும் எக்ஸ்2 என இரண்டு விதமான தேர்வுகளிலேயே இந்த ஸ்கூட்டர் தற்போது விற்பனைக்குக் கிடைக்கிறது.

இ-லூனா எக்ஸ்1 ஓர் முழு சார்ஜில் 90 கிலோ மீட்டர் ரேஞ்ஜையும், எக்ஸ்2 ஓர் முழு சார்ஜில் 110 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மொபட்டில் 1.2 kW மோட்டார் மற்றும் 2 kWh பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இதன் பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்ய அதிகபட்சமாக நான்கு மணி நேரங்கள் எடுத்துக் கொள்ளும். இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 50 கிலோ மீட்டர் ஆகும். இ-லூனாவை பயணிகள் வாகனமாக மற்றும் சரக்குகளை ஏற்றிச் செல்லக் கூடிய வாகனமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். அதாவது, டிவிஎஸ் எக்ஸ்எல்-ஐபோல இதனை பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமா (Hero Electric Optima): இந்த லிஸ்ட்டின் சற்று அதிக விலைக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். சொல்லப் போனால் இதன் விலை ரூ. 1 லட்சத்தைத் தொடும். அதற்கேற்ப அதிக ரேஞ்ஜை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

ஓர் முழு சார்ஜில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் 135 கிமீ வரை ரேஞ்ஜ் தரும். இத்துடன், ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் என ஏகப்பட்ட அம்சங்களை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தாங்கி இருக்கின்றது. இதனால், இந்தியாவின் மலிவு விலை எலெக்ட்ரிக் டூ-வீலர் மாடல்கள் லிஸ்ட்டில் ஹீரோ எலெக்ட்ரிக் ஆப்டிமாவும் இடம் பெற்றிருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் உள்ள அடித்தட்டு மக்களும் பயன்படுத்தும் நோக்கில் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களே இந்த மூன்றும் ஆகும். கம்மி விலையில் அதிக ரேஞ்ஜ் மற்றும் அதிக தொழில்நுட்ப வசதிகளை இந்த மூன்று மின்சார இரண்டு சக்கர வாகனங்களும் தாங்கி இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.

More from DriveSpark

Article Published On: Wednesday, March 27, 2024, 19:29 [IST]
English summary
E luna to hero optima electric two wheelers available for sale under rs 70000
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+