யமஹா ஆர்15 எல்லாம் ஓரமா போ... ஹீரோ கரீஸ்மா பெயரை கேட்டாலே அதிர போகுது!!

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), இந்தியாவை சேர்ந்த உலகின் முன்னணி 2-சக்கர வாகன உற்பத்தி நிறுவனம். இந்தியாவை தாண்டி சில வெளிநாடுகளிலும் வணிகம் செய்துவரும் ஹீரோ மோட்டோகார்ப், எதிர்பார்த்ததை போன்று EICMA 2024 கண்காட்சியில் கலந்துக் கொண்டுள்ளது. இத்தாலி நாட்டின் மிலான் நகரில் நடைபெற்றுவரும் இந்த கண்காட்சியில் உலகின் பல பைக் நிறுவனங்கள் பங்கேற்று, தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தி உள்ள நிலையில், ஹீரோவும் தனது புதிய தயாரிப்புகளை பார்வையாளர்கள் முன் நிறுத்தி உள்ளது. அவற்றுள், புதிய ஹீரோ கரீஸ்மா பைக்கை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

EICMA, சுமார் 110 வருடங்களாக நடைபெற்றுவரும் உலகின் முக்கியமான பைக் கண்காட்சிகளுள் ஒன்றாகும். ஒவ்வொரு வருட இறுதியிலும் இத்தாலி நாட்டின் மிலான் நகரத்தில் நடைபெறும் இந்த கண்காட்சியில் இந்தியாவை சேர்ந்த முன்னணி பைக் நிறுவனங்களும் கலந்துக் கொள்வது வழக்கம். அந்த வகையில், 2024 EICMA கண்காட்சியில் கலந்துக் கொண்டு ஹீரோ மோட்டோகார்ப் அதன் புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்தி உள்ளது.

hero motocorp unveils karizma xmr250

இதில், புதிய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 210 பைக்கை பற்றி சமீபத்தில்தான் நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். இந்த வரிசையில் அடுத்ததாக, புதிய ஹீரோ கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் 250 பைக்கை பற்றி இனி பார்க்கலாம். ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் உருவாக்கிய தரமான பைக்குகளுள் ஒன்று கரீஸ்மா ஆகும். இந்த பெயருக்காகவே 2000ஆம் ஆண்டு துவக்கங்களில் நிறைய பேர் இந்த பைக்கை வாங்கினர்.

அதன்பின் சில வருடங்கள் கழித்து விற்பனை நிறுத்தப்பட்ட கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக்கை மீண்டும் சமீபத்தில் ஹீரோ மோட்டோகார்ப் மார்க்கெட்டில் அறிமுகம் செய்தது. இந்த நிலையில், விரைவில் 250சிசி என்ஜின் உடன் கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக் அறிமுகம் செய்யப்பட உள்ளது. தற்சமயம், ஹீரோ கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக்கில் 210சிசி என்ஜின் பொருத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

hero motocorp unveils karizma xmr250

இந்த வகையில் பார்த்தால், தற்போது வழங்கப்படுவதை காட்டிலும் பெரிய அளவிலான 250சிசி என்ஜின் உடன் இந்த பைக் விற்பனை செய்யப்பட உள்ளது. புதிய கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் 250 பைக்கில் புதிய லிக்யுடு-கூல்டு, 4-வால்வு, DOHC, சிங்கிள்-சிலிண்டர் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த 250சிசி என்ஜின் அதிகப்பட்சமாக 29.6 பிஎச்பி மற்றும் 25 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்டீல் ட்ரெல்லிஸ் ஃப்ரேமில் உருவாக்கப்பட்டுள்ள புதிய ஹீரோ கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் 250 பைக்கில் சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் யுஎஸ்டி ஃபோர்க்கும், பின்பக்கத்தில் 6 விதமாக அட்ஜெஸ் செய்யக்கூடிய மோனோஷாக்கும் வழங்கப்பட்டுள்ளன. பிரேக்கிங் பணியை கவனிக்க, இரு சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக் கொடுக்கப்பட்டுள்ளது.

hero motocorp unveils karizma xmr250

மேலும், பயணிகளின் கூடுதல் பாதுகாப்புக்காக ட்யூயல்-சேனல் ஏபிஎஸ் வசதியும் இடம்பெற்றுள்ளது. இந்த பைக்கில், முன் மற்றும் பின் சக்கரம் என இரண்டும் 17 இன்ச்சில் உள்ளன. தோற்றத்தை பொறுத்தவரையில், முழுவதும் பேனல்கள் நிரப்பப்பட்ட ஸ்போர்ட்ஸ் ரக பைக்காக புதிய கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர்250 விளங்குகிறது. இதற்கேற்ப இந்த பைக்கின் ஏரோடைனாமிக்ஸ் மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், பைக்கின் ஹெட்லைட் சிறப்பாக உருவாக்கப்பட்டு உள்ளது. புதிய கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக்கில் மற்ற சிறப்பம்சங்களாக ஆட்டோமேட்டிக் எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் எல்இடி டிஆர்எல்-கள், டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் டிஸ்பிளே மற்றும் உயரத்தை அட்ஜெஸ் செய்யக்கூடிய க்ளிப்-ஆன் ஹேண்டில்பார்ஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன. இதில், டிஎஃப்டி டிஸ்பிளே மூலமாக லேப் டைமர், டிராக் டைமர் உள்ளிட்ட வசதிகளை பெறலாம்.

hero motocorp unveils karizma xmr250

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹீரோ கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக்கிற்கு நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் வரவேற்பு கிடைக்க துவங்கியுள்ளது. இந்த நேரத்தில்தான், கரீஸ்மா எக்ஸ்.எம்.ஆர் பைக்கை மேலும் பவர்ஃபுல்லானதாக மாற்றும் பணிகளில் ஹீரோ மோட்டோகார்ப் ஈடுப்பட்டு வருகிறது. இது எந்த அளவிற்கு வொர்க்-அவுட் ஆகும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, November 6, 2024, 8:00 [IST]
English summary
Eicma 2024 hero motocorp unveils new karizma xmr250 check all details here
மேலும்... #hero motocorp #karizma zmr #karizma
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X