இத்தாலியை மிரள வைத்த 10 இந்திய பைக்குகள்! அடேங்கப்பா ஒன்னொன்னும் வேற மாதிரி இருக்குதே!
மிகப்பெரிய ஆட்டோமொபைல் கண்காட்சியான EICMA கண்காட்சி இத்தாலியில் நடந்து வருகிறது. இங்கே இந்தியாவில் உள்ள பல வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புகளை அங்கு புதிதாக காட்சிப்படுத்தியுள்ளார்கள். இப்படியாக இந்தியாவுக்கு தொடர்பு கொண்ட பல்வேறு வாகனங்கள் அங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே நாம் தெளிவாக காண போகிறோம்.
ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் தனது எக்ஸ்ட்ரீம் 250 ஆர் பைக்கை இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தியுள்ளது. இது மட்டுமல்லாமல் நிறுவனம் தனது தயாரிப்புகளையும் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த பைக்கை பொறுத்தவரை அந்நிறுவனத்தின் எக்ஸ்டெண்ட் 2.5 ஆர் கான்செப்ட் பைக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 250 சிசி டிஓஹெச்சி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 29.5 பிஎச்பி பவரையும் 25 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஹீரோ நிறுவனம் கரீஷ்மா எக்ஸ்எம்ஆர் 250 என்ற பைக்கை இந்த நிகழ்ச்சியை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த பைக் கடந்த ஆகஸ்ட் மாதம் தான் இந்திய மார்க்கெட்டில் அறிமுகமானது. இந்த பைக்கில் 250 சிசி சிங்கிள் சிலிண்டர் லிக்யூட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 29.5 பிஎச்பி பவரையும் 25 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது.
அடுத்ததாக ஹீரோ நிறுவனம் தனது எக்ஸ்பல்ஸ் 210 என்ற பைக்கை இந்தியா மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு அட்வெஞ்ச்சர் ரக பைக் ஆகும். இதில் 210 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 24.5 பிஎச்பி பவரையும் 20.4 என்எம் டார்க் திறணையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸுடன் ஸ்லீப் மற்றும் அசிஸ்ட் கிளட்ச் ஆகிய அம்சங்களுடன் விற்பனைக்கு வருகிறது.

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான ஃப்ளையிங் ஃப்ளே என்ற புதிய பிராண்டை உருவாக்கி அதில் முதல் தயாரிப்பாக சி6 என்ற எலெக்ட்ரிக் பைக் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த பெயர் இரண்டாம் உலகப் போரின் போது அந்நிறுவனம் தயாரித்த குறைந்த எடை கொண்ட வாகனத்தின் பெயராகும். இந்த c6 பைக்கை அந்நிறுவனம் விரைவில் விற்பனைக்கு கொண்டு வரும் எனது பார்க்கலாம்.
கேடிஎம் நிறுவனம் தனது 390 அட்வெஞ்சர் பைக்கை இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த பைக் விரைவில் இந்தியாவிற்கு அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பல்வேறு விதமான அப்டேட்கள் இடம் பெற்றுள்ளன. முக்கியமாக இந்த பைக்கில் 399 சிசி லிக்யூட் கூல்டு எல்சி4சி இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது புதிய தலைமுறை 390 டியூக் பைக்கில் உள்ள இன்ஜின் ஆகும். இது 453 பிஎச்பி பவரையும், 39.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

அல்ட்ராவைலட் நிறுவனம் தனது கான்செப்ட் எக்ஸ் என்ற பைக்கை இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தியுள்ளது. இது அல்ட்ராவைலட் எஃப்77 பைக்கை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பைக் ஆகும். இதில் பல்வேறு விதமான மாற்றங்களை செய்து இந்த பைக்கை வெளியிட்டுள்ளது. இந்த பைக்கில் உள்ள அம்சங்கள் குறித்த விபரங்களை எதுவும் அந்நிறுவனம் வெளியிடவில்லை. ஆனால் பெரும்பாலும் தற்போது உள்ள எஃப் 77 பைக்கில் உள்ள அதே அம்சங்கள் தான் இதிலும் இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஹீரோ நிறுவனம் தனது அப்டேட் செய்யப்பட்ட மேவரிக் 440 பைக்கை இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தியுள்ளது. இதில் புதிய கலர் ஆப்ஷன்கள் தங்க நிறத்திலான போர்க் டிஎஃப்டி டிஸ்ப்ளே உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த பைக்கின் எடையும் சற்று குறைக்கப்பட்டுள்ளது. இதில் 440cc ஆயில்/கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 27 பிஎச்பி பவரையும் 36 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிஎம்டபிள்யூ மோட்டார் நிறுவனம் தனது புதிய எஃப் 450 ஜிஎஸ் என்ற கான்செப்ட் பைக்கை இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தியுள்ளது. இது தனது ஃப்ளாக்ஷிப் பைக்கான பிஎம்டபிள்ய ஆர் 1350 ஜிஎஸ் பைக் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட பைக் ஆகும். இந்த பைக் அறிமுகமாகும் போது ஏற்கனவே விற்பனையாகி வரும் பிஎம்டபிள்யூ ஜி 350 ஜிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ எஃப் 800/900 ஆகிய பைக்களுக்கு இடையே பொசிஷன் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். இந்த பைக் 2025- 26 ஆண்டில் விற்பனைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
ஹீரோ நிறுவனம் தனது விடா இசட் என்ற புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தியுள்ளது. இது விடா வி ஒன் டிசைன் மொழியை கொண்டு உருவாக்கப்பட்ட பைக்காக இருக்கிறது. இதில் 2.2கிலோ வாட் ஹவர் மற்றும் 4.4 கிலோ வாட் ஹவர் என இரண்டு விதமான பேட்டரி ஆப்ஷன்கள் உள்ளன. இந்த ஸ்கூட்டரின் ரேஞ்ச் மற்றும் மற்ற விபரங்களை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இந்த ஸ்கூட்டர் 2025ம் ஆண்டு 2ம் பாதியில் வெளியாக வாய்ப்புகள் உள்ளன.
அப்ரிலியா டியூனோ 457 என்ற பைக்கை அந்நிறுவனம் இந்த நிகழ்ச்சியை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த பைக் அப்ரிலியா ஆர்எஸ்457 என்ற பைக்கில் உள்ள அதே இன்ஜினை வைத்து உருவாக்கப்பட்டுள்ள பைக்காக இருக்கிறது. இருந்தாலும் இந்த பைக்கில் பவர் மற்றும் எடை ரேஷியோ மாறுபடும் என எதிர்பார்க்கலாம். இந்த பைக்கில் 457 சிசி லிக்யூட் கூல்டு இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் 47.6 பிஎச்பி பவரையும் 43.5 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் விற்பனையாக உள்ள பல்வேறு பைக்குகள் சர்வதேச அளவில் நடக்கும் ஆட்டோமொபைல் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படுவது இந்தியா எந்த அளவுக்கு ஆட்டோமொபைல் துறையில் வளர்ச்சி அடைந்துள்ளது என்பதை காட்டுகிறது. இது நிச்சயம் மிகப்பெரிய வளர்ச்சியாக இந்தியாவுக்கு இருக்கிறது. எதிர்காலத்தில் இது போன்ற சர்வதேச கண்காட்சிகள் இந்தியாவிலும் நடக்கும்.


Click it and Unblock the Notifications









