ஏத்தருக்கு ஏற்பட்ட பரிதாப நிலைமை! முதலிடத்தை தக்க வைத்த ஓலா! அடுத்த இடம் யாருக்கு தெரியுமா?

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களில் விற்பனை படிப்படியாக அதிகரித்து வருகிறது. தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் விற்பனையான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் குறித்த விபரங்கள் தற்போது வெளியாகி உள்ளன. இதன்படி ஒவ்வொரு நிறுவனங்களும் எவ்வளவு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது? எவ்வளவு வளர்ச்சியை பெற்றுள்ளது என்ற விவரங்களை காணலாம் வாருங்கள்.

நமது ஜனவரி மாதம் மொத்தம் 81,608 எலெக்ட்ரிக் டூவீலர்கள் விற்பனையாகியுள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 64,694 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் விற்பனையாகி இருந்தது. ஒரே ஆண்டில் 26.14 சதவீத விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது. இதுவே கடந்த 2023 டிசம்பர் மாதம் 75,522 என்ட்ரி ஸ்கூட்டர்கள் விற்பனையாகி இருந்தது. அதை ஒப்பிடும்போது தற்போது 8.0 சதவீதம் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.

Electric two wheeler Sales Jan 2024

இந்த பட்டியலில் முதலிடத்தில் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் இருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 32,252 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30,263 தான் விற்பனையாகி இருந்தது. தற்போது கூடுதலாக 1989 ஸ்கூட்டர் விற்பனையாகி 6.57 சதவீத விற்பனை வளர்ச்சியை பெற்றுள்ளது.

இரண்டாவது இடத்தில் டிவிஎஸ் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் ஐ-க்யூப் என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனை செய்து வரும் நிலையில், கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 15,254 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையாக உள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 12,244 விற்பனையாக இருந்தது. தற்போது கூடுதலாக 2950 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையாகி உள்ளது. இது 24.34 சதவீத வளர்ச்சியாகும்.

Electric two wheeler Sales Jan 2024

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் பஜாஜ் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் சேர்த்தக் என்ற எலெக்ட்ரிக் உடலை விற்பனை செய்து வருகிறது. கடந்த ஜனவரி மாதம் மொத்தம் 10,829 ஸ்கூட்டர் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 10,377 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனையாகி இருந்தது. தற்போது கூடுதலாக 452 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி 4.36 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளது.

அடுத்ததாக ஏத்தர் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் 9247 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2023-ம் ஆண்டு ஜனவரி மாதம் 6493 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விலை விற்பனை செய்திருந்தது. தற்போது கூடுதலாக 2754 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையாகி 42.41% விற்பனை வளர்ச்சி பெற்று உள்ளது.

Electric two wheeler Sales Jan 2024

இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் அம்பியர் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் 2352 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்துள்ளது. ஆறாவது இடத்தில் ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் 1491 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்துள்ளது. ஏழாவது இடத்தில் பிஜிஹவுஸ் என்ற நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் 1485 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்துள்ளது.

இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் வார்டுவிசார்டு நிறுவனம் 975 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை செய்துள்ளது. ஒன்பதாவது இடத்தில் உள்ள கைனிட்டிக் இவி நிறுவனம் 820 எலெக்ட்ரிக் பொருட்களை விற்பனை செய்துள்ளது. பத்தாவது இடத்தில் தான் ஒக்கினவா என்ற நிறுவனம் இருக்கிறது. இந்நிறுவனம் 683 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை தான் விற்பனை செய்துள்ளது.

தற்போது எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் பெரும்பாலான புதிய நிறுவனங்கள் தங்கள் விற்பனை வளர்ச்சியை பெற்று வருகின்றன. சில சிறிய நிறுவனங்கள் மட்டும் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. தரமான தயாரிப்புகளை மட்டுமே மக்கள் வாங்குகிறார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல உதாரணமாக இருக்கிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மீதான டிரெண்ட் சமீப நாட்களாக இந்தியாவில் அதிகமாக படித்து வரும் நிலையில் மக்கள் மத்தியில் தரமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மட்டுமே வரவேற்பு இருக்கிறது. மற்ற சாதாரண எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு பெரிய அளவில் வரவேற்பு இல்லை. பார்க்கவும் நன்றாக இருக்க வேண்டும், நல்ல ரேஞ்ச் தர வேண்டும், சிறப்பான பெர்ஃபார்மன்ஸ் தரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு தான் நல்ல வரவேற்பு இருக்கிறது என்பது இதில் தெளிவாக தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, February 22, 2024, 12:55 [IST]
English summary
Electric two wheeler sales jan 2024 ola tvs bajaj ather hero electric
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X