ஓலாவுக்கு செக் வைக்கும் என்று பார்த்தால்... டிவிஎஸ் மோட்டாரின் நிலைமை என்ன இப்படி ஆகிடுச்சு!!

எலக்ட்ரிக் வாகனங்களை பொறுத்தவரையில், எலக்ட்ரிக் 2-வீலர்களை வாங்கவே தொடர்ந்து கஸ்டமர்கள் குவித்து வருகின்றனர். இதன் மூலமாக, ஓலா எலக்ட்ரிக், ஏத்தர் எனர்ஜி போன்ற எலக்ட்ரிக் 2-வீலர் உற்பத்தி நிறுவனங்கள் மார்க்கெட்டில் வலுவாக காலூன்ற ஆரம்பித்துவிட்டன. இதனை வெளிக்காட்டும் வகையில் நடந்து முடிந்த 2024 செப்டம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்த டாப்-10 நிறுவனங்கள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. இதற்கு முந்தைய ஆகஸ்ட் மாதத்தை காட்டிலும் செப்டம்பரில் எலக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனை எந்த அளவிற்கு இருந்தது? என்பது குறித்த விபரங்களை இனி பார்க்கலாம்.

மார்க்கெட்டில் நுழைந்து சில வருடங்கள் மட்டுமே ஆன போதிலும் எலக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்வதில் ஓலா எலக்ட்ரிக் முதலிடத்தில் உள்ளது. இது கடந்த பல மாதங்களாகவே தொடர்ந்துக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த செப்டம்பர் மாதத்திலும் இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் எலக்ட்ரிக் 2-வீலர்களை விற்பனை செய்த நிறுவனமாக ஓலா எலக்ட்ரிக் முதலிடத்தில் உள்ளது.

electric two-wheelers september sales report

பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் தற்போதைக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்படுகின்றன; எலக்ட்ரிக் பைக்குகள் எதுவும் விற்பனை செய்யப்படுவது இல்லை. கடந்த 2024 செப்டம்பர் மாதத்தில் ஓலா எலக்ட்ரிக்கில் இருந்து விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை 10,036 ஆகும்.

அதுவே, கடந்த 2024 ஆகஸ்ட் மாதத்தில் 12,405 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் விற்பனை செய்திருந்தது. இந்த வகையில் பார்க்கும்போது, ஆகஸ்ட்டை காட்டிலும் செப்டம்பரில் ஓலா எலக்ட்ரிக்கின் விற்பனை ஆனது 23.60% குறைந்துள்ளது. இவ்வாறு எலக்ட்ரிக் 2-வீலர்கள் விற்பனையில் முன்னணியில் இருந்தாலும், ஓலா எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை ஆனது ஏற்றமும், இறக்கமுமாய் இருந்து வருகிறது.

electric two-wheelers september sales report

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்திற்கு அடுத்து 2வது இடத்தில் ஏத்தர் எனர்ஜி உள்ளது. விலை குறைவான ரிஸ்டா எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் அறிமுகத்திற்கு பிறகு ஏத்தர் எனர்ஜி நிறுவனம் மீதான மக்களின் பார்வையே மாறியுள்ளது. இதன் விளைவாக, ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை மாதத்திற்கு மாதம் அதிகரித்து வருகிறது. இந்த வகையில், ஆகஸ்ட் மாதத்தில் 4,331 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்திருந்த ஏத்தர் எனர்ஜி நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதத்தில் 4,597 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்றுள்ளது.

இந்த வகையில், ஏத்தர் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை 5.78% அதிகரித்துள்ளது. இதற்கடுத்து 3வது இடத்தில் டிவிஎஸ் மோட்டார் உள்ளது. இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனங்களுள் ஒன்றாக விளங்கும் டிவிஎஸ் மோட்டாரில் இருந்து குறைவான எண்ணிக்கையிலேயே எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இன்னும் சொல்லப்போனால், ஆகஸ்ட் உடன் ஒப்பிடுகையில் செப்டம்பர் மாதத்தில் டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை ஆனது பாதிக்கும் மேல் குறைந்துள்ளது.

electric two-wheelers september sales report

அதாவது, ஆகஸ்ட் மாதத்தில் 9,492 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனை செய்திருந்த டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் கடந்த செப்டம்பரில் வெறும் 4,211 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்றுள்ளது. இதற்கடுத்து 4வது மற்றும் 5வது இடங்களிலும் முன்னணி 2-வீலர் நிறுவனங்களான ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் பஜாஜ் ஆட்டோ நிறுவனங்கள் முறையே 4,174 மற்றும் 2,826 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனை எண்ணிக்கை உடன் உள்ளன.

இதில் பஜாஜ் ஆட்டோவின் கடந்த ஆகஸ்ட் மாத விற்பனை எண்ணிக்கை ஆனது 4,866 ஆகும். 6வது இடத்தில் க்ரீவ்ஸ் எலக்ட்ரிக் நிறுவனம் 2,651 எலக்ட்ரிக் 2-வீலர்களின் விற்பனை உடன் உள்ளது. 7வது இடத்தில் உள்ள பிகாஸ் ஆட்டோ நிறுவனத்தில் இருந்து கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட எலக்ட்ரிக் 2-வீலர்களின் எண்ணிக்கை 1,109 ஆகும். இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி 3 இடங்களில் முறையே ரிவோல்ட் இண்டெல்லிகார்ப் (677), வார்ட்விசார்ட் இன்னோவேஷன்ஸ் (667) மற்றும் கைனெட்டிக் க்ரீன் (356) உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், இந்த லிஸ்ட்டில் முதலிடத்தை பிடித்து இருப்பினும், ஓலா எலக்ட்ரிக்கின் விற்பனை ஏற்றமும், இறக்கமுமாய் இருந்து வருகிறது. இதனால், ஓலாவை டிவிஎஸ் மோட்டார் விற்பனையில் முந்தும் என ஆகஸ்ட் மாத நிலவரத்தின்படி எதிர்பார்த்தோம். ஆனால், ஓலாவை காட்டிலும் டிவிஎஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 8, 2024, 8:00 [IST]
English summary
Electric two wheelers sales report 2024 september top 10 companies check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X