டிவிஎஸ் எக்ஸ்எல்-க்கு மாடர்ன் லுக் கொடுத்ததபோல இருக்கு.. 30 நிமிஷம் சார்ஜ் பண்ணா 120 கிமீ போகலாம்!

கர்நாடகா மாநிலம் பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் இ-மொபி (Emobi). இது ஓர் ஸ்டார்ட்-அப் மின்சார வாகன (EV) உற்பத்தி நிறுவனம் ஆகும். எலெக்ட்ரிக் டூ-வீலர் (Electric Two Wheeler) உற்பத்தியை மட்டுமே மையமாகக் கொண்டு இந்த நிறுவனம் இயங்கி வருகின்றது. இந்த நிலையிலேயே இ-மொபி ஓர் தினசரி பயன்பாட்டிற்கு உகந்த மொபட் வகை எலெக்ட்ரிக் டூ-வீலரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்து இருக்கின்றது. ஏகேஎக்ஸ் (AKX) எனும் வாகனத்தையே அது அறிமுகம் செய்திருக்கின்றது.

டிவிஎஸ் எக்ஸ்எல் மொபட்டிற்கு மாடர்ன் லுக்கை வழங்கியதை போல இந்த வாகனம் காட்சியளிக்கின்றது. இது ஓர் மேட் இன் இந்தியா எலெக்ட்ரிக் டூ-வீலர் ஆகும். ஆனால், பயன்பாடு மற்றும் சிறப்பம்சங்கள் விஷயத்தில் சர்வதேச தரத்திற்கு இருக்கும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

Emobi launches akx commuter electric two-wheeler front view

குறிப்பாக, வெறும் 30 நிமிடங்களில் முழுமையாக சார்ஜாகும் திறனை இந்த வாகனத்திற்கு நிறுவனம் வழங்கி இருப்பது அசத்தலான தகவல் ஆகும். ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) மையத்தை பயன்படுத்தி சார்ஜ் செய்யும்போதே அதிக வேகத்தில் இ-மொபி ஏகேஎக்ஸ் எலெக்ட்ரிக் மொபட்டை தயார் செய்திருக்கின்றது.

அதேசமயம், இந்த வாகனத்தை மிக முக்கியமாக டெலிவரி சேவையைக் கருத்தில் கொண்டே இ-மொபி தயாரித்து இருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதன் அடிப்படையிலேயே பின் பக்கத்தில் பெரிய கேரியர் வசதி வழங்கப்பட்டு இருக்கின்றது. இதில் டெலிவரி பொருட்களை ஏற்றி செல்ல முடியும்.

Emobi launches akx commuter electric two-wheeler

அதிக வேகத்தில் சார்ஜாகும் திறன், சர்வதேச தரத்திற்கு இணையான அம்சங்கள் உள்ளிட்டவற்றை எல்லாம் டெலிவரி சேவைக்கான வாகனத்தினால என்றே பலரையும் ஆச்சரியமடையச் செய்திருக்கின்றது. இந்த வாகனத்தை இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றனர். ஒன்றில் 1.5 kWh பேட்டரி பேக்கும், மற்றொன்றில் 2.3 kWh பேட்டரி பேக்கும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

முதல் ஒன்று ஓர் முழு சார்ஜில் 75 கிமீ ரேஞ்சையும், இரண்டாவது பேட்டரி பேக் ஓர் முழு சார்ஜில் 120 கிமீ ரேஞ்சையும் வழங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. டெலிவரி சேவையில் நீண்ட நேரம் பணியாற்றி அதிக வருமானம் ஈட்ட வேண்டும் என நினைப்பவர்களுக்கு 2.3 kWh பேட்டரி பேக் கொண்ட ஆப்ஷன் பெரும் உதவியாக இருக்கும்.

இதற்கு கூடுதல் சிறப்பு சேர்க்கும் விதமாக வேகமாக சார்ஜாகும் திறனும் இந்த வாகனத்திற்கு வழங்கப்பட்டு உள்ளது. ஆகையால், முழுமையாக சார்ஜ் தீர்ந்துபோனாலும் ஃபாஸ்ட் சார்ஜிங் கருவியை பயன்படுத்தி 30 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிட்டு அடுத்த டெலிவரியை நோக்கில் டெலிவரி பாயால் புறப்பட முடியும்.

இமொபி நிறுவனம் இந்த பேட்டரி பேக்கை லிவா இன்னோவேஷன் உடன் இணைந்தே தயார் செய்திருக்கின்றது. குறிப்பாக, இந்த பேட்டரி பேக்கை மின்சார வாகனங்களுக்கு மட்டுமல்ல வீடுகளுக்கான இன்வெர்டர் பேட்டரி பேக்காகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆகையால் வீட்டில் மின்சாரம் இல்லாத வேளையில் மொபட்டில் இருந்து பேட்டரி தனியாக பிரித்தெடுத்து வீட்டுக்கு தேவையான மின்சாரத்தைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த வசதி மட்டுமில்லைங்க அட்வான்ஸ்டு அம்சங்களையும் இந்த இ-வாகனத்தில் நிறுவனம் வாரி வழங்கி இருக்கின்றது. ஜியோ ஃபென்சிங், லைவ் டிராக்கிங், வாகனத்தை அசையாமல் செய்யும் திறன் உள்ளிட்டவையே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த அம்சங்கள் வாகனம் திருட்டுப் போவதை தவிர்க்கவும், பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் பெரும் உதவியாக இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் முன்னணி நிறுவனங்கள் பல தங்களின் டெலிவரி சேவையில் எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்த தொடங்கிவிட்டன. இந்த நிலையிலேயே அட்வான்ஸ்டு அம்சங்கள் கொண்ட வாகனத்தை பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனம் டெலிவரி சேவைக்காக களமிறக்கி இருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் குறிப்பாக, டெலிவரி சேவையை நம்பி பணியாற்றி வருபவர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, October 29, 2024, 5:00 [IST]
English summary
Emobi launches akx commuter electric two wheeler aimed at enhancing last mile delivery
மேலும்... #electric bike #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+