தல முதலீடு செய்த நிறுவனம்.. எந்த காலத்திலும் துவண்டு போயிட கூடாது.. அவங்களோட தயாரிப்புகளை வாங்கு குவிக்குறாங்க

மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள புனேவை மையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் இ-மோட்டாராட் (EMotorad), இது ஓர் எலெக்ட்ரிக் சைக்கிள் (Electric Cycle) உற்பத்தி நிறுவனம் ஆகும். இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு இந்தியாவில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் நிதியாண்டு 2024 முழுக்க செய்த விற்பனையை, நிதியாண்டு 2025 இன் முதல் பாதியிலேயே பெற்றிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கின்றது. இது ஒட்டுமொத்த வாகன உலகிற்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது.

மேலும், ஆண்டு -டூ- ஆண்டு உடன் ஒப்பிடுகையில் இப்போதே 200 சதவீத விற்பனை வளர்ச்சியை நிறுவனம் பெற்றிருப்பதும் தெரிய வந்திருக்கின்றது. நிறுவனத்தின் இந்த விற்பனை வளர்ச்சிக்கு அதன் விரிவாக்கப் பணிகளே முக்கிய காரணமாக உள்ளது. ஆமாங்க, இந்த நிறுவனம் மக்களைக் கவரும் பொருட்டு, அதாவது, தங்களுடைய தயாரிப்புகள் மக்களுக்கு எளிதில் கிடைக்கும் பொருட்டு அதன் விற்பனையகங்களை மிக தீவிரமாக விரிவாக்கம் செய்து வருகின்றது.

Emotorad reports remarkable growth

கடந்த சில வாரங்களில் மட்டுமே சுமார் 12 புதிய பிரத்யேக எக்ஸ்பீரியன்ஸ் மையங்களை அது திறந்து வைத்தது. மேலும், ஏற்கனவே நிறுவனம் 550-க்கும் அதிகமான விற்பனையகங்களை நாடு முழுக்க திறந்து இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய நடவடிக்கையின் காரணமாகவே இ-மோட்டாராட் பிராண்டின் தயாரிப்புகளுக்கு அனல் பறக்கும் விற்பனைக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

இதுதவிர, 'தல' என்று கிரிக்கெட் விளையாட்டு ரசிகர்களால் பிரியமாக அழைக்கப்படும் பிரபல கிரிக்கெட் விளையாட்டு வீரர் மஹேந்திர சிங் தோனி-யின் பக்க துணையுடனும் இந்த நிறுவனம் இயங்கி வருகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. ஆமாங்க இந்த நிறுவனத்தின் மீது பெரும் தொகையை அவர் முதலீடு செய்திருக்கின்றார்.

இதுவும், இந்த நிறுவனத்திற்கு இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்க ஓர் முக்கிய காரணமாக உள்ளது. ஏற்கனவே இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலில் அதிகம் தரம்மிக்க எலெக்ட்ரிக் சைக்கிள்களை, சற்றே குறைவான விலையில் விற்பனைக்கு வழங்கியே இந்த நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கவர்ந்து வருகின்றது.

இந்த பிராண்டின்கீழ் ஏகப்பட்ட மிதிவண்டி மாடல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. அனைத்தம் மின்சாரத்தில் இயங்கும் திறன் கொண்ட எலெக்ட்ரிக் மிதிவண்டிகள் ஆகும். தொடர்ந்து, இரண்டு பிரிவுகளின்கீழ் இந்த நிறுவனம் இ-சைக்கிள்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. டிசையர் ரேஞ்ச் (Desire Range) மற்றும் எக்ஸ்-ஃபேக்டர் ரேஞ்ச் (X-Factor Range) ஆகியவையே அவை ஆகும்.

அந்தவகையில், லில் இ, டூடுள் வி3, டி-ரெக்ஸ் ஏர், டிரெக்ஸ் ப்ரோ, டிரெக்ஸ் பிளஸ் வி3, இஎம்எக்ஸ் பிளஸ், இஎம்எக்ஸ், டூடுள் வி2, ஆகிய இ-சைக்கிள்களையே அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இவை அனைத்தும் டிசையர் ரேஞ்சின்கீழ் விற்பனைக்குக் கிடைக்கக் கூடிய இ-சைக்கிள்கள் ஆகும்.

இதேபோல், எக்ஸ்-ஃபேக்டர் ரேஞ்சின்கீழும் சில எலெக்ட்ரிக் சைக்கிள் மாடல்களை இ-மோட்டாராட் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. எக்ஸ்1, எக்ஸ்3, நியோ, லெஜண்ட் 07 (எம்எஸ்டி எடிசன்), எஸ்டி-எக்ஸ் ஆகியவையே அவை ஆகும். இந்த எலெக்ட்ரிக் சைக்கிள்களின் பக்கம் வாடிக்கையாளர்களை ஈர்க்கும் பொருட்டு இ-மோட்டாராட் நிறுவனம் 11 சதவீதம் முதல் 29 சதவீதம் வரையிலான தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார எலெக்ட்ரிக் கார், பைக் மற்றும் ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே மின்சாரத்தில் இயங்கும் இ-சைக்கிள்களுக்கும் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது உறுதியாகி இருக்கின்றது. மேலும், தோனியின் துணை மற்றும் மக்களின் வரவேற்பு இருப்பதாலேயே இ-மோட்டாராட் மிக சிறப்பான விற்பனை வளர்ச்சியைச் சந்தித்துள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, November 7, 2024, 17:52 [IST]
English summary
Emotorad backed by dhoni reports remarkable growth in india as h1 fy25 sales
மேலும்... #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+