ஸ்கூல் பசங்க கூட இந்த எலெக்ட்ரிக் சைக்கிளை ஓட்டிட்டு போகலாம்.. மணிக்கு 25 கிமீ வேகத்துல மட்டுமே போகும்!
இ-சைக்கிள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக விளங்கிக் கொண்டிருக்கின்றது இ-மோட்டாராட் (EMotorad). இந்த நிறுவனத்தின் புகழ்பெற்ற பேட்டரியில் இயங்கும் சைக்கிள் மாடல்களில் டி-ரெக்ஸ் ஏர் (T-Rex Air)-ம் ஒன்றாகும். இந்த மாடலிலேயே இரண்டு புதிய நிற தேர்வுகளை விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது இ-மோட்டாராட் நிறுவனம். ஸ்ட்ரைக்கிங் ஆரஞ்சு பிளேஸ் (Striking Orange Blaze) மற்றும் ட்ராபிக்கள் கிரீன் (Tropical Green) ஆகிய நிற தேர்வுகளே டி-ரெக்ஸ் ஏர் இ-சைக்கிள் மாடலில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. நிறுவனத்தின் இந்த சைக்கிளுக்கு தோனியின் சைக்கிள் என்கிற பெயரும் சந்தையில் உண்டு.
இந்த இ-சைக்கிளின் விளம்பரத்தில் அவர் இடம் பெற்றதை அடுத்தே இப்பெயர் அந்த எலெக்ட்ரிக் சைக்கிளுக்கு கிடைத்தது. மேலும், சைக்கிள் விரும்பிகள் பலரின் பிரியமான இ-சைக்கிளாகவும் அது மாறி இருக்கின்றது. மிக சிறந்த ரைடு அனுபவத்தை வழங்கும் திறன் கொண்டதாக இது இருப்பதால் சைக்கிள் விரும்பிகளை அது வெகுவாக கவர்ந்து வருகின்றது.

இந்த நிலையிலேயே இதன் பக்கம் மேலும் வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு புதிய நிற தேர்வுகளை இ-மோட்டாராட் அறிமுகம் செய்திருக்கின்றது. டி-ரெக்ஸ் ஏர் ஓர் மிக சிறந்த ரைடு அனுபவத்தை வழங்கக் கூடிய எலெக்ட்ரிக் சைக்கிள் ஆகும். இதற்காக அதில் ஏகப்பட்ட சிறப்பம்சங்களை இமோட்டாராட் வழங்கி இருக்கின்றது.
அந்தவகையில், 27.5 அங்குல டயர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. மிக சிறந்த வடிவமைப்பைக் கொண்ட ஓர் டயரே இதுவாகும். குறிப்பாக, இந்தியாவின் அனைத்து விதமான சாலைகளையும் சமாளிக்கும் திறன் கொண்டதாக அது உருவாக்கப்பட்டு இருக்கின்றது. 10.2 AH கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட பேட்டரி பேக்கே வழங்கப்பட்டு இருக்கின்றது.
எனவே இந்த பேட்டரி பேக்கை தனியாகக் கழட்டிக் கொண்டு போயும் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும்.
இந்த பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்தால் சுமார் 50 கிமீட்டருக்கும் அதிகமான தூரம் ரேஞ்ஜைப் பெற்றுக் கொள்ள முடியும். மேலும், 5 லெவல் பெடல் அசிஸ்ட் வசதியும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ ஆகும். இதுதவிர, ஒரு சிறிய திரையும் இந்த இ-சைக்கிளில் வழங்கப்பட்டு இருக்கும். அது பேட்டரியின் சார்ஜ் அளவு, வேகம் மற்றும் ரேஞ்ஜ் பற்றிய விபரங்களை வழங்கும். இந்த டி-ரெக்ஸ் ஏர் எலெக்ட்ரிக் சைக்கிள் மாணவர்கள், உடல் மீது அதிகம் அக்கறைக் கொண்டவர்கள் மற்றும் அருகில் உள்ள அலுவலகங்களுக்குச் செல்வோருக்கு ஏற்ற ஒன்றாகும்.
இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ மட்டுமே என்பதால் இதை இயக்க ஓட்டுநர் உரிமம் தேவைப்படாது. எனவே சிறுவர்களாலும் இதை தடையில்லாமல் பயன்படுத்திக் கொள்ள முடியும். தற்போது சலுகை விலையாக இந்த இ-சைக்கிளுக்கு ரூ. 34,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.
நகர்புற பயன்பாட்டிற்கு மிக மிக உகந்த இ-சைக்கிள் இதுவாகும். இ-மோட்டாராட் நிறுவனத்தின் இந்த தயாரிப்பை நிறுவனத்தின் விற்பனையகங்கள் வாயிலாக வாங்கிக் கொள்ள முடியும். மேலும், வாடிக்கையாளர்கள் சுலபமாக இதை பெற வேண்டும் என்பதற்காக சில ஆன்-லைன் வர்த்தக தளங்களிலும் இந்த இ-சைக்கிளை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது, இ-மோட்டாராட்.
அமேசான் (Amazon), ஃப்ளிப்கார்ட் (Flipkart) மற்றும் இ-மோட்டாராட் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ வலைதள பக்கம் வாயிலாகவும் வாங்கிக் கொள்ள முடியும். டி-ரெக்ஸ் ஏர் எலெக்ட்ரிக் சைக்கிள் மட்டுமின்றி நிறுவனத்தின் மற்ற தயாரிப்புகளும் இந்த தளங்களின் வாயிலாக விற்பனைக்கு வழங்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்குக் கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு நாளுக்கு நாள் இரட்டிப்பாகிக் கொண்டு இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே தன்னுடைய இ-சைக்கிளின் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக புதிய வண்ண தேர்வை இ-மோட்டாராட் நிறுவனம் அறிமுகம் செய்து இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








