ஸ்கூட்டரை வாங்கிவிடலாம் இந்த விலையில்... பிரபாஸ் படத்தை வைத்து எத்தனை பிஸ்னஸ் நடக்குது பாருங்க!!

உலகம் வெப்பமயமாதலை தவிர்க்க வேண்டுமெனில், சைக்கிள்களை பயன்படுத்துவதை அதிகரிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துவரும் நிலையில், எலக்ட்ரிக் சைக்கிள் (Electric Cycle)-களுக்கு டிமாண்ட் அதிகரித்து வருகிறது. இதனால், புது, புது எலக்ட்ரிக் சைக்கிள்கள் தொடர்ச்சியாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. இந்த வகையில், புனேவை சேர்ந்த எலக்ட்ரிக் பை-சைக்கிள் நிறுவனமான இமோட்டாராட் (EMotorad) அதன் புதிய எலக்ட்ரிக் சைக்கிளை மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த எலக்ட்ரிக் சைக்கிளை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பாகுபலி திரைப்படம் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமாகிய தெலுங்கு நடிகர் பிரபாஸின் நடிப்பில் புதியதாக கல்கி: 2898AD என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில், விரைவில் இந்த திரைப்படம் திரைக்கு வரவுள்ளதை பற்றி அறிந்திருப்பீர்கள். இந்த படத்தை விளம்பரப்படுத்தும் விதமாக பல்வேறு விதமான செயல்களில் கல்கி: 2898AD திரைப்பட குழுவினர் ஈடுப்பட்டு வருகின்றனர்.

emotorad launches kalki doodle v3

அதன் ஒருபகுதியாக, கல்கி: 2898AD திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட 'புஜ்ஜி' என்கிற பெயரிலான வாகனம் ஒன்று கடந்த சில வாரங்களாக ஒவ்வொரு முக்கிய நகரமாக கொண்டு செல்லப்பட்டு, பொதுமக்களின் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வகையில், மும்பையில் காட்சிக்கு நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த புஜ்ஜி வாகனத்தை மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா நேரில் ஓட்டிப் பார்த்ததை பற்றி ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம்.

இவ்வாறு, கல்கி: 2898AD திரைப்படத்திற்கு வரவேற்பு அதிகரித்துவரும் சூழலில், இதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக இமோட்டாராட் நிறுவனம் அதன் பிரபலமான டூடில் வி3 எலக்ட்ரிக் சைக்கிளின் புதிய ஸ்பெஷல் எடிசனை 'கல்கி' என்கிற பெயரில் அறிமுகப்படுத்தி உள்ளது. பெயருக்கேற்ப இந்த புதிய எலக்ட்ரிக் சைக்கிள் ஆனது கல்கி: 2898AD திரைப்பட கதைக்களத்தில் பயன்படுத்தும் சைக்கிள் போன்று உருவாக்கப்பட்டுள்ளது.

emotorad launches kalki doodle v3

புதிய கல்கி டூடில் வி3 எலக்ட்ரிக் சைக்கிள் ஆனது லிமிடெட் எடிசன் ஆகும். அதாவது, குறுகிய காலத்திற்கு மட்டுமே இந்த எலக்ட்ரிக் சைக்கிள் விற்பனையில் இருக்கும். ஏற்கனவே கூறியதுபோல், இமோட்டாராட் நிறுவனம் மார்க்கெட்டில் பிரபலமான அதன் டூடில் வி3 எலக்ட்ரிக் சைக்கிளின் அடிப்படையில் இந்த புதிய லிமிடெட் எடிசனை உருவாக்கி உள்ளது.

இமோட்டாராட் டூடில் வி3 எலக்ட்ரிக் சைக்கிள் ஆனது மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதற்கு காரணம், இந்த சைக்கிளை நீங்கள் தேவைப்பட்டால் மடக்கி, எளிதாக கையில் எடுத்துச் செல்லலாம். புதிய கல்கி டூடில் வி3 எலக்ட்ரிக் சைக்கிளில் பெயிண்ட் & ஸ்டிக்கரை தவிர்த்து எந்த மாற்றமும் இல்லை. அதாவது, வழக்கமான டூடில் வி3 எலக்ட்ரிக் சைக்கிளை இமோட்டாராட் நிறுவனம் எவ்வாறு உருவாக்குமோ அவ்வாறே இந்த லிமிடெட் எடிசனை உருவாக்கி உள்ளது.

emotorad launches kalki doodle v3

ஆதலால், புதிய கல்கி டூடில் வி3 எலக்ட்ரிக் சைக்கிளில் 36 வோல்ட் 250 வாட்ஸ் மோட்டார் சைக்க்கிளின் பின்பக்கத்தில் பொருத்தப்படுகிறது. இந்த மோட்டாருக்கு பவரை வழங்க கொடுக்கப்படும் 12.75 ஆம்பியர் லித்தியம்-இரும்பு பேட்டரியை தேவைப்பட்டால் சைக்கிளில் இருந்து நீக்கிக் கொள்ள முடியும். இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் பெடலை உபயோகிக்காமல் எலக்ட்ரிக் பவரில் 60கிமீ-க்கும் அதிகமான தொலைவு பயணிக்க முடியும்.

இந்த இ-சைக்கிளின் பேட்டரி ஆனது ஐபி எக்ஸ்5 நீர்புகா தன்மை கொண்டதாக சான்றளிக்கப்பட்டுள்ளது. இதனை வெறும் 2- 3 மணிநேரங்களில் முழுவதுமாக சார்ஜ் நிரப்பிவிட முடியும். இந்த எலக்ட்ரிக் சைக்கிளின் டாப்-ஸ்பீடு 25kmph ஆகும். டூடில் வி3 எலக்ட்ரிக் சைக்கிளில் 7-ஸ்பீடு கியர் மற்றும் 4-இன்ச்சில் தட்டையான டயர்கள் வழங்கப்படுகின்றன. புதிய கல்கி டூடில் வி3 எலக்ட்ரிக் சைக்கிளின் விலை ரூ.55,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த இ-சைக்கிளை ரூ.2,898இல் முன்பதிவு செய்துக் கொள்ளலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: பாகுபலிக்கு பிறகு நடிகர் பிரபாஸின் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் இவ்வாறு பலத்த எதிர்பார்ப்புடன் தான் வெளிவருகின்றன. ஆனால், அந்த படங்களின் ரிசல்ட் என்ன என்பது உங்களுக்கே தெரியும். ஆனால், புதிய கல்கி: 2898AD திரைப்படம் அவற்றிற்கு எல்லாம் ஒருபடி மேலே போய், புதியதாக லிமிடெட் எடிசன் எலக்ட்ரிக் சைக்கிள் விற்பனை செய்யப்படும் அளவிற்கு சென்றுள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, June 21, 2024, 15:00 [IST]
English summary
Emotorad launches kalki doodle v3 electric cycle price features all details here
மேலும்... #electric vehicles #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X