விலையுயர்ந்த பைக்குகளுக்கே சவால்விடும் இ-சைக்கிள் அறிமுகம்.. 14 சதவீதம் ஆஃபரில் விற்பனைக்கு வந்திருக்கு!
இந்தியாவில் மின்சாரத்தில் இயங்கும் சைக்கிள் (Electric Bi-Cycle)-களை விற்பனைச் செய்து வரும் நிறுவனம் இ-மோட்டாராட் (EMotorad). இந்த நிறுவனமே எஸ்டி-எக்ஸ் (ST-X) எனும் பேட்டரியில் இயங்கும் புதிய மிதிவண்டியை விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இதற்கு அறிமுகமாக ரூ. 29,999 நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதன் உண்மை விலை ரூ. 34,999 என நிறுவனம் தெரிவித்துள்ளது. அறிமுக சிறப்பு சலுகை விலையாகவே ரூ. 29,999 அதற்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதேநேரம், குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே இந்த விலையில் அது விற்கப்படும் என்றும் அது கூறியிருக்கின்றது.
இதுதவிர, வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு எஸ்டி-எக்ஸ் இ-சைக்கிளுக்கு 5 ஆண்டுகள் வாரண்டியையும் இ-மோட்டாராட் நிறுவனம் அறிவித்து இருக்கின்றது. ஆகையால், இந்த சைக்கிள் சில முன்னணி பிராண்டுகளின் எலெக்ட்ரிக் பைக் மற்றும் ஸ்கூட்டர்களுக்கேகூட போட்டியாக அமையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த இ-மிதிவண்டியின் தயாரிப்பில் உயர் அழுத்தத்தை தாங்கும் திறன் கொண்ட ஸ்டீலையே இ-மோட்டாராட் பயன்படுத்தி இருக்கின்றது.

இதுமட்டுமில்லைங்க, குறைந்த வேக திறன் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு இணையான வேகத்தில் இயங்கும் திறனையும் இதற்கு அது வழங்கியுள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ ஆகும். இதேபோல், இதில் ஓர் முழு சார்ஜில் 35 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
இதற்காக 7.65 Ah திறன் கொண்ட லித்தியம் அயன் பேட்டரி பேக்-கே எஸ்டி-எக்ஸ் இ-சைக்கிளில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த பேட்டரியை தனியாக கழட்டி மாட்ட முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. எனவே அதனை சார்ஜ் செய்வது மிகவும் சுலபம். இருக்கும் இடத்திற்கே எடுத்துச் சென்று அதை சார்ஜ் செய்துக் கொள்ள முடியும்.
மின்சார சைக்கிளுக்கான மின்சார மோட்டார் பின் வீலிலேயே பொருத்தப்பட்டு உள்ளது. இது ஓர் 36 வோல்ட் 250 வாட் திறன் கொண்ட ஹப் வகை மோட்டார் ஆகும். இத்துடன், ஓர் சிறிய கிளஸ்டர் சி2 திரையும் இந்த இ-சைக்கிளில் வழங்கப்பட்டு உள்ளது.
இது சைக்கிளின் வேகம், ஏற்கனவே பயணித்த கிமீ பற்றிய தகவல் மற்றும் பேட்டரியின் சார்ஜ் அளவு போன்ற முக்கிய தகவல்களை அது வழங்கும். மேலும் சைக்கிளின் இயக்கத்தை சுவாரஷ்யமானதாக மாற்றும் பொருட்டு 5 வகையான பெடல் அசிஸ்ட், 12 மேக்னட் சென்சார்களுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.
தொடர்ந்து, ஹாரன், டிஸ்க் பிரேக்குகள் உள்ளிட்ட அம்சங்களும் ரைடர்களின் பாதுகப்பிற்காக வழங்கப்பட்டு உள்ளன. இந்த மின்சார சைக்கிளை முழுமையாக சார்ஜ் செய்ய 4 மணி நேரம் முதல் 5 மணி நேரம் வரை தேவைப்படும் என்பது கவனிக்கத்தகுந்தது. பீஜ் மற்றும் டீல் ப்ளூ என்கிற இரண்டு விதமான வண்ண தேர்வுகளில் இந்த எலெக்ட்ரிக் சைக்கிள் விற்பனைக்குக் கிடைக்கும்.
இந்த எலெக்ட்ரிக் சைக்கிளை ஆண் மற்றும் பெண் என இருபாலரும் பயன்படுத்தும் வகையிலேயே இ-மோட்டாராட் தயார் செய்திருக்கின்றது. இதன் அடிப்படையிலேயே தாழ்வான ஃப்ரேம் அமைப்பு அதற்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. மற்றுமொரு சுவாரஷ்யமான தகவல் என்னவென்றால் இ-மோட்டாராட் நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களில் தல தோனியும் ஒருவர் ஆவார். பெரும் தொகையையே இந்த நிறுவனத்தில் தோனி முதலீடு செய்திருக்கின்றார்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இ-மோட்டாராட் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் சைக்கிள்களுக்கு இந்தியாவில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆண்டு -டூ- ஆண்டு உடன் ஒப்பிடுகையில் 200 சதவீத விற்பனை வளர்ச்சியை நோக்கி இந்த நிறுவனம் தற்போது பயணித்துக் கொண்டிருக்கின்றது. அந்த அளவிற்கே நல்ல வரவேற்பை இ-மோட்டாராட் நிறுவனம் இந்தியாவில் பெற்று வருகின்றது.


Click it and Unblock the Notifications








