தோனி பக்கத்துல நிற்பது மின்சார மிதிவண்டியா! ஃபுல் சார்ஜ்ல இவ்ளோ தூரம் பயணிக்குமா! விலைதான் கொஞ்சம் மிரட்டுது!
எலெக்ட்ரிக் சைக்கிள் உற்பத்தியில் முன்னணி நிறுவனமாக விளங்கிக் கொண்டிருக்கும் பிராண்டுகளில் இ-மோட்டாராட் (EMotorad)-ம் ஒன்றாகும். இந்த நிறுவனமே ஓர் புதுமுக எலெக்ட்ரிக் சைக்கிளை இந்தியாவில் தற்போது வெளியீடு செய்து உள்ளது. டி-ரெக்ஸ் பிளஸ் எனும் எலெக்ட்ரிக் சைக்கிள் மாடலையே அது வெளியீடு செய்திருக்கின்றது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 44 ஆயிரத்து 999 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது டி-ரெக்ஸ் மாடலின் அட்வான்ஸ்டு வெர்ஷன் என கூறப்படுகின்றது. மேலும், வெளியீட்டைத் தொடர்ந்து இ-சைக்கிளுக்கான ப்ரீ புக்கிங் பணிகளையும் இ-மோட்டாராட் நாட்டில் தொடங்கி இருக்கின்றது.
ரூ. 1,999 கட்டணத்தைச் செலுத்தி இ-மோட்டாராட் பிராண்டின் டி-ரெக்ஸ் பிளஸ் (T-rex+) எலெக்ட்ரிக் மிதிவண்டியை புக் செய்துக் கொள்ள முடியும். இதைத்தொடர்ந்து, ஆகஸ்டு 15 சிறப்பு சலுகையாக ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள அக்சஸரீஸ்களை இலவசமாக வழங்க இருப்பதாகவும் இ-மோட்டாராட் அறிவித்து இருக்கின்றது.

இது ஓர் குறுகிய கால சலுகை ஆகும். ஆகஸ்டு 15 ஆம் தேதி வரை மட்டுமே இது கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் அதிக விலைக் கொண்ட இ-சைக்கிளாக உங்களுக்கு தோன்றலாம், இதன் அதிக விலைக்கு ஏற்பவே அதில் அதிக சிறப்பம்சங்களை இ-மோட்டாராட் வாரி வழங்கி இருக்கின்றது.
அந்தவகையில், ஒருங்கிணைக்கப்பட்ட எல்சிடி திரை ஒன்று இந்த இ-சைக்கிளில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது சைக்கிளின் தண்டுடன் இணைக்கப்பட்டு இருக்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த மாதிரியான அம்சத்தை பெறும் முதல் இ-சைக்கிள் இதுவே என்பது குறிப்பிடத்தகுந்தது. இது பேட்டரியின் ரேஞ்ஜ் திறன், பேட்டரியின் மின்சார அளவு, வேகம் மற்றும் கிமீ என ரைடருக்கு தேவையான பல்வேறு முக்கிய தகவல்களை வழங்கும்.
இதுபோன்று இன்னும் பல சிறப்புகளை இந்த எலெக்ட்ரிக் சைக்கிள் தன்னுள் தாங்கி இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. குறிப்பாக, இ-சைக்கிளின் உருவாக்கத்தில் அலுமினியம் ஃப்ரேம் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது இ-சைக்கிளின் உறுதியையும், நீண்ட காலம் கட்டாயம் உழைக்கும் என்பதையும் வெளிக்காட்டும் வகையில் உள்ளது.
இந்த இ-சைக்கிளில் 36V 10.2 Ah லித்தியம் அயன் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 35 கிமீ தூரம் பயணிக்கலாம். அதேவேளையில், பெடல் அசிஸ்ட் உதவியுடன் 45 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
இந்த சைக்கிளை 80 சதவீதம் வரை சார்ஜ் செய்ய 3.5 மணி நேரங்கள் தேவைப்படும். மோட்டாரை பொருத்த வரை இந்த இ-சைக்கிளில் 250 W ஹப் வகை மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டாரை கட்டுப்படுத்தும் விதமாக 7 ஸ்பீடு ஷிமனோ அட்லஸ் கியர் வழங்கப்பட்டு இருக்கின்றது.
தொடர்ந்து, 5 விதமான பெடல் அசிஸ்ட் மோட்கள், முன் பக்கத்தில் லைட், ஹாரன் மற்றும் ஆட்டோ கட்-ஆஃப் டிஸ்க் பிரேக்குகள் ஆகியவை வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுமட்டுமில்லைங்க, இன்னும் பல வசதிகளை இந்த சைக்கிளில் இ-மோட்டாராட் வழங்கி இருக்கின்றது. ஆகையால், இது நகர்புற பயணங்களுக்கு உகந்த இ-சைக்கிளாகக் காட்சியளிக்கின்றது.
குறிப்பாக, அலுவலகம் செல்வோர், பள்ளி செல்லும் மாணவர்கள் என அனைவராலும் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. இது குறைந்த வேகத்திலேயே இயங்கும் திறன் கொண்ட இ-சைக்கிள் என்பதால் மாணவர்களால் மிக தாராளமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். மேலும், இதை பயன்படுத்த எந்தவொரு லைசென்ஸும் தேவையில்லை.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மிக சிறப்பான விற்பனை வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இ-சைக்கிளின் பக்கம் திருப்பும் நோக்கிலேயே இ-மோட்டாராட், தற்போது அட்வான்ஸ்டு தொழில்நுட்ப வசதிகள் கொண்ட டி-ரெக்ஸ் பிளஸ் எலெக்ட்ரிக் சைக்கிளை நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








