நம்ப முடியாத அளவிற்கு விலையை குறைத்த ஓலா.. சைக்கிள் வாங்குறதபோல எல்லாரும் இந்த இ-ஸ்கூட்டர வாங்க போறாங்க!
ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மாடல் ஒன்றின் விலையை நம்ப முடியாத அளவிற்கு குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எந்த மாடலின் விலை எவ்வளவு ரூபாய் வரை குறைக்கப்பட்டு இருக்கின்றது என்பது பற்றிய விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
ஓலா நிறுவனத்தின் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக எஸ்1 எக்ஸ் (S1 X) இருக்கின்றது. இதன் விலையையே நம்ப முடியாத அளவிற்கு ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போது குறைத்திருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் எஸ்1 எக்ஸ் பிளஸ் (S1 X+) மற்றும் எஸ்1 எக்ஸ் (S1 X) இரண்டு விதமான ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

இத்துடன், மூன்று விதமான பேட்டரி பேக் ஆப்ஷன்களும் அதில் வழங்கப்படுகின்றன. அதில் 2 kWh பேட்டரி பேக்கைக் கொண்ட தேர்விற்கு ரூ. 69,999ம் (இது அறிமுக விலை ஆகும்), 3 kWh பேட்டரி பேக் கொண்ட தேர்விற்கு ரூ. 84,999ம் மற்றும் 4 kWh பேட்டரி பேக் கொண்ட தேர்விற்கு ரூ. 99,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.
எஸ்1 எக்ஸ் பிளஸ் தேர்வின் விலை ரூ. 84,999 ஆகும். இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குற்ப்பிடத்தகுந்தது. ஆன்-ரோடில் இதைவிட சற்றே அதிக விலையை இவைக் கொண்டிருக்கும். ரூ. 11 ஆயிரம் முதல் ரூ. 12 ஆயிரம் வரையில் அதிக விலையைக் கொண்டதாக இருக்கும்.

எஸ்1 எக்ஸ் மாடலின் விலை குறைப்பைத் தொடர்ந்து ஓலா எலெக்ட்ரிக் நிறுவனம் தற்போது அதன் எஸ்1 (S1) வரிசையில் விற்பனைக்குக் கிடைக்கும் அனைத்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்கள் அனைத்திற்கும் 8 ஆண்டுகள் / 80 ஆயிரம் கிமீ வாரண்டி திட்டத்தை வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றது.
இந்த திட்டத்தை கூடுதல் கட்டணம் இன்றி இலவசமாக வழங்க இருப்பதாக நிறுவனம் அறிவித்து இருப்பது ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரியர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி ஓலா நிறுவனம் அதன் எஸ்1 வரிசையில், எஸ்1 ப்ரோ (S1 Pro) , எஸ்1 ஏர் (S1 Air) மற்றும் எஸ்1 எக்ஸ் (S1 X) ஆகிய மூன்று விதமான மாடல்களையே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதில், எஸ்1 ப்ரோ 1,29,999 ரூபாய்க்கும், எஸ்1 ஏர் 1,04,999 ரூபாய்க்கும் விற்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. விலை குறைப்பால் நிறுவனத்தின் மிக மிக விலை குறைவான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக எஸ்1 எக்ஸ்-இன் 2 kWh பேட்டரி பேக் தேர்வு மாறி இருக்கின்றது.
இது ஓர் முழு சார்ஜில் 95 கிமீ தூரம் வரை ரேஞ்ஜ் தரும். மேலும், இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 85 கிமீ ஆகும். இதுதவிர வெறும் 4.1 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ எனும் வேகத்தை எட்டும் திறனையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
அதேவேளையில், எஸ்1 எக்ஸ் மாடலின் 3 kWh பேட்டரி பேக் தேர்வு ஓர் முழு சார்ஜில் 143 கிமீ ரேஞ்ஜையும், 4 kWh தேர்வு ஓர் முழு சார்ஜில் 190 கிமீ ரேஞ்ஜையும் மற்றும் எஸ்1 எக்ஸ் பிளஸ் தேர்வு ஓர் முழு சார்ஜில் 151 கிமீ ரேஞ்ஜையும் வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
அதேவேளையில், இவை அனைத்தும் டாப் ஸ்பீடு மற்றும் பிக்-அப்பில் ஒரே மாதிரியானதாக இருக்கின்றன. டாப் ஸ்பீடு மணிக்கு 90 கிமீ ஆகும். மேலும், வெறும் 3.3 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை இவை எட்டிவிடும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஓலா எலெக்ட்ரிக் தற்போது போர்டபிள் ஃபாஸ்ட் சார்ஜிங் கருவியையும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அதன் விலை ரூ. 29,999 ஆகும். இத்துடன், வாரண்டி கிமீட்டர்களை அதிகப்படுத்திக் கொள்ளும் வசதியையும் ஓலா வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றது. வழக்கமான வாரண்டியாக 8 ஆண்டுகள் / 80 ஆயிரம் கிமீ வழங்கப்படுகின்றது.
இந்த கிமீட்டரையே 1.25 லட்சமாக உயர்த்திக் கொள்ளும் ஆப்ஷனை வாடிக்கையாளர்களுக்கு ஓலா வழங்குகின்றது. இதற்கு கட்டணமாக ரூ. 4,999 வசூல் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் பெட்ரோல் டூ-வீலர்களின் விற்பனைக்கு முழுமையான முற்று புள்ளியை வைக்கும் பொருட்டே இதுமாதிரியான சிறப்பு சலுகைளை ஓலா வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஏற்கனவே அறிவிக்கப்படாத மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவின் தலைவனாக ஓலா எலெக்ட்ரிக் விளங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த இடத்தைத் தக்க வைத்துக் கொள்ளும் பொருட்டும், இப்போது கிடைத்துக் கொண்டிருக்கும் விற்பனை வரவேற்பை இரட்டிப்பாக்கும் பொருட்டும் தன்னுடைய எஸ்1 எக்ஸ் மாடலின் விலையை ஓலா குறைத்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








