அடுத்த 90நாளில் 5 புதிய பைக்குகளை அறிமுகம் செய்வதாக அறிவிப்பு.. சந்தையை மிரள விட்ட அந்த பிராண்டு எது தெரியுமா?

உலக புகழ்பெற்ற மற்றும் முன்னணி இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று அடுத்த 90 நாட்களில் ஐந்து புதிய பைக் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கின்றது. டுகாட்டி, நிறுவனமே இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கும் பிராண்டு ஆகும். நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் போட்டி நிறுவனங்கள் அனைத்தும் தற்போது அதிர்ச்சியில் உறைந்திருக்கின்றன. அதேவேளையில், இந்த தகவல் பலருக்கு வியப்பை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. டுகாட்டி நிறுவனம் '2025 டுகாட்டி வேர்ல்டு பிரீமியர்'-இன் ஒரு பகுதியாகவே இந்த ஐந்து புதிய பைக்குகளை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

அதேவேளையில், இந்த ஐந்து புதிய பைக்குகளும் புதுமுக மாடல்களாக இருக்காது என்பதும் தற்போது தெரிய வந்திருக்கின்றது. அதில், சில மட்டுமே புதிய பைக்குகளாக இருக்கும் என்றும், மற்றவை ஏற்கனவே விற்பனையில் இருக்கும் பைக் மாடலில் புதிய தேர்வாகவே இணைக்கப்பட இருக்கின்றன. மேலும், அடுத்த 90 நாட்களுக்குள் அவை அனைத்தும் ஒன்றன் பின் ஒன்றாக அறிமுகம் செய்யப்படும் உள்ளன.

Ducati to debut 5 new bikes

இதை உறுதிப்படுத்தக் கூடிய டீசர் வீடியோவையே தற்போது டுகாட்டி வெளியிட்டு இருக்கின்றது. ஆனால், அந்த பைக்குகளின் தெளிவான படங்களை அது வெளியிடவில்லை. நிழல்படங்களை மட்டுமே அது வெளியிட்டுள்ளது. இந்த படத்தின் வாயிலாக டுகாட்டி நிறுவனம் டெசர்ட் எக்ஸ் (Desert X), டயவல் வி4 (Diavel V4), பனிகேல் வி4 (Panigale V4), மல்டிஸ்ட்ரடா வி4 (Multistrada V4) ஆகிய பைக் மாடல்களின் புதிய தேர்வை விற்பனைக்குக் கொண்டு வர இருப்பது கணிக்கப்பட்டு இருக்கின்றது.

இதேபோல், ஓர் புதுமுக ஸ்கிராம்ப்ளர் (Scrambler) வகை பைக் மாடலையும் அது அறிமுகம் செய்ய இருப்பது தெரிய வந்திருக்கின்றது. மேலும், ஒரு சில தினங்களில் ஓர் பைக் மாடலும், அக்டோபர் 7, அக்டோபர் 17, நவம்பர் 5 மற்றும் டிசம்பர் 5 என இந்த தேதிகளில் ஒவ்வொரு பைக் மாடல்களும் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகின்றது.

ஆகையால், இரண்டு சக்கர வாகன காதலர்களுக்கு டுகாட்டி சார்பில் மிகப் பெரிய விருந்து காத்திருப்பது தற்போது உறுதியாகி இருக்கின்றது. புதிய தேர்வுகள் விலை குறைவானதாக இருக்கலாம், அல்லது, சிறப்பு பதிப்புகளாக இருக்கலாம் என்றே கூறப்படுகின்றது. மிக முக்கியமாக வரும் பண்டிகைக் காலங்களை சிறப்பிக்கும் பொருட்டே இவை அறிமுகம் செய்யப்பட இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது.

டுகாட்டி நிறுவனம் கடந்த சமீபத்தில் மல்டிஸ்ட்ரடா வி4 ஆர்எஸ் (Multistrada V4 RS) எனும் பைக் மாடலை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. உலக அளவில் சென்ற ஆண்டே அறிமுகம செய்துவிட்டநிலையில் போன மாதமே இதை இந்தியாவில் டுகாட்டி அறிமுகப்படுத்தியது. இதற்கு அறிமுக விலையாக ரூ. 38 லட்சத்து 40 ஆயிரம் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மிகவும் கட்டுமஸ்தான தோற்றத்தில் காட்சியளிக்கும் இந்த பைக் ஓர் அட்வென்சர் வகை பைக் மாடல் ஆகும். நீண்ட தூர பயணங்கள் மற்றும் கரடு-முரடான ஆஃப்-ரோடு பயணங்களுக்கு உகந்த டூ-வீலராக இதனை டுகாட்டி தயார் செய்திருக்கின்றது. இதற்கேற்ப அம்சங்களையும் அது மிக அதிகளவில் தாங்கியிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: டுகாட்டி நிறுவனம் அடுத்தடுத்து என ஐந்து பைக் மாடல்களை அறிமுகம் செய்ய இருப்பதாக அறிவித்திருப்பது மற்ற இரண்டு சக்கர வாகன உற்பத்தியாளர்களுக்கு பேரிடியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது. இந்த புதிய வேரியண்டுகள் மற்றும் சிறப்பு பதிப்புகளின் வாயிலாக நிறுவனத்தின் விற்பனை சதவீதம் வரும் நாட்களில் சற்றே உயரும் என நம்பப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Thursday, September 19, 2024, 23:20 [IST]
English summary
Explore the 5 new ducati bikes set to debut in the next 90 days
மேலும்... #ducati #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+