ராயல் என்பீல்டு குரில்லா 450 பைக்கின் எந்த வேரியண்ட் சிறந்தது? பைக் வாங்குறதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுக்கோங்க!

இந்தியர்களின் எதிர்பார்ப்பில் மிகப் பெரிய இடத்தைப் பிடித்திருந்த பைக் மாடல்களில் ராயல் என்பீல்டு குரில்லா 450 (Royal Enfield Guerrilla 450)-ம் ஒன்றாகும். இந்த பைக்கையே இன்றைய (ஜூலை 17) தினம் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தி வைத்தது ராயல் என்பீல்டு. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் வாயிலாகவே இந்த பைக் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் விலைகளையும் ராயல் என்பீல்டு தற்போது அறிவித்து விட்டது. ரூ. 2.39 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலேயே இந்த குவரில்லா 450 விற்பனைக்குக் கிடைக்கும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் மட்டுமே ஆகும்.

இந்த பைக்கிற்கான புக்கிங் பணிகள் எப்போது தொடங்கும் என்கிற விபரத்தை ராயல் என்பீல்டு இன்னும் அறிவிக்கவில்லை. விரைவில் அதுபற்றிய விபரங்கள் வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், டெலிவரி நாள் பற்றிய விபரங்களும் விரைவிலேயே அறிவிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த பைக் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்க உள்ளது.

Royal enfield guerrilla 450 variants

அனலாக் (Analogue), டேஷ் (Dash) மற்றும் ஃப்ளாஷ் (Flash) ஆகியவையே அவை ஆகும். இந்த மூன்று வேரியண்டுகளின் விலை மற்றும் அவற்றில் என்ன மாதிரியான சிறப்பு வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன? என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

அனலாக்: இதுவே ஆரம்ப நிலை தேர்வாகும். இதற்கே ரூ. 2.39 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விலை குறைவாக இருப்பதைப் போலவே மற்ற இரண்டு தேர்வுகளைக் காட்டிலும் சிறப்பம்சங்கள் விஷயத்திலும் சற்றே பின் தங்கியே இந்த தேர்வு இருக்கின்றது. இதனால்தான் இதற்கு மலிவு விலையை ராயல் என்பீல்டால் நிர்ணயிக்க முடிந்திருக்கின்றது.

ஸ்மோக் சில்வர் எனும் ஒற்றை-டோன் பெயிண்ட்டிங்கிலேயே இந்த வேரியண்ட் விற்பனைக்குக் கிடைக்கிறது. அதேவேளையில், வடிவமைப்பு மற்றும் ஹார்டுவேர் விஷயத்தில் மற்ற வேரியண்டுகளுடன் ஒத்துப் போகின்றது. மேலும், ​​அனலாக் எனும் பெயருக்கு ஏற்ப அரை டிஜிட்டல் கன்சோலே இந்த வேரியண்டில் வழங்கப்பட்டு இருக்கின்றது.

எல்சிடி திரை ஒரு அனலாக் டயல் உடனேயே கொடுக்கப்பட்டுள்ளது. இத்துடன், தனி டிரிப்பர் நேவிகேஷன் பாட் ஒன்றையும் இந்த தேர்வில் ராயல் என்பீல்டு வழங்குகிறது. இத்துடன், ஸ்மார்ட்போன் இணைப்பு வசதியும் இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதை செய்யும்பட்சத்தில் அழைப்பு மற்றும் எஸ்எம்எஸ் அறிவிப்புகள், திருப்பத்திற்கு திருப்பம் வழித்தடம் பற்றிய தகவலைப் பெறுதல் போன்றவற்றைப் பெற்றுக் கொள்ள முடியும்.

டேஷ்: இது ஓர் நடுநிலையான தேர்வாகும். இதற்கு ரூ. 2.49 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. அதேவேளையில், அதிகபட்ச சிறப்பம்சங்களை இந்த வேரியண்டில் நம்மால் காண முடிகின்றது. இந்த வேரியண்டை இரண்டு விதமான வண்ண விருப்பங்களில் வாங்கிக் கொள்ள முடியும். பிளேயா பிளாக் (Playa Black) மற்றும் கோல்ட் டிப் (Gold Dip) ஆகியவையே அவை ஆகும்.

பெயருக்கு ஆடம்பர லுக்கை இவைக் கொண்டிருக்கும். இரண்டு வண்ண தேர்வுகளுமே டூயல் டோன் நிற தேர்வுகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் ஃப்யூவல் டேங்கில் சிவப்பு நிறம் வழங்கப்பட்டு இருக்கும். இதே நிறத்தை முன் ஃபெண்டர் மற்றும் பின்புற பேனல்களிலும் காண முடிகின்றது. அதேசமயம், பிளேயா பிளாக் ஆப்ஷனில் சிவப்பு நிறத்துடன் மஞ்சள் நிற கோடுகளும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், ராயல் என்ஃபீல்டு இந்த வேரியண்டில் உள்ள அனலாக் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோலில் பிரத்யேக நிறங்களைக் கொண்டு அலங்கரித்து இருக்கின்றது. இதைத்தொடர்ந்து, டிஜிட்டல் அனுபவத்தை வழங்கும் நோக்கில் டேஷ் டிரிம்மில் முழு டிஜிட்டல் திரை வழங்கப்பட்டு இருக்கின்றது. ஸ்மார்ட்போன் இணைப்பு என ஏகப்பட்ட வசதிகளையும் இதன் வாயிலாகப் பெற்றுக் கொள்ள முடியும்.

ஃப்ளாஷ்: இதுதான் குவரில்லா 450 பைக் மாடலின் உயர் நிலை வேரியண்டாகும். இதற்கு ரூ. 2.54 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த வேரியண்டில் பிராவா ப்ளூ (Brava Blue) மற்றும் யெல்லோ ரிப்பன் (Yellow Ribbon) ஆகிய இரண்டு சூப்பரான வண்ண தேர்வுகளே வழங்கப்படுகின்றன.

இவை இரண்டும் டூயல் டோன் ஆப்ஷன் ஆகும். யெல்லோ ரிப்பன் நிற தேர்வில் முதன்மை நிறமாக மஞ்சளே இடம் பெற்றிருக்கின்றது. இத்துடன், ஊதா மற்றும் கருப்பு நிறமும் இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கும். இதேபோல், பிராவா ப்ளூ நிறத்தில் முதன்மை நிறம் நீலமும், அத்துடன், வெள்ளை நிறமும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மிகவும் கவர்ச்சியான வண்ண ஆப்ஷனாக இது காட்சியளிக்கின்றது. இத்துடன் முழு டிஜிட்டல் டிஃப்டி, ஸ்மார்ட்ஃபோன் இணைப்பு வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த மூன்று வேரியண்டுகளும் நிறத்தாலும், சிறப்பம்சங்களாலும் மாறுபட்டு காட்சியளிக்கலாம். ஆனால், எஞ்சின் விஷயத்தில் அனைத்தும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. மூன்றிலும், ஷெர்பா 452சிசி, ஒற்றை சிலிண்டர் எஞ்சின் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது 8,000 ஆர்பிஎம்-மில் 39.50 பிஎச்பி மற்றும் 5,500 ஆர்பிஎம்மில் 40 என்எம் ஆற்றலையும் வெளியேற்றும். மேலும், 6 ஸ்பீடு கியர்பாக்ஸே இந்த பைக்குடன் இணைக்கப்பட்டுள்ளது.

More from DriveSpark

Article Published On: Thursday, July 18, 2024, 5:00 [IST]
English summary
Exploring royal enfield guerrilla 450 variants and features details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+