டிவிஎஸ் எந்திருச்சி நிக்க தொடங்கிருச்சு.. இனி ஓலா இருந்த தடம் தெரியாம போகபோது! இதுக்கு மேலயும் அடி விழ போகுதா!
இந்தியாவில் கார்கள் விற்பனையில் எப்படி நம்பர் 1 நிறுவனமாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) விளங்கிக் கொண்டிருக்கின்றதோ, அதைபோலவே, எலெக்ட்ரிக் டூ-வீலர் பிரிவில் ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் முன்னணி பிராண்டாக இருக்கின்றது. இந்த நிறுவனத்தின் மீது பலரும் புகார் மற்றும் குறை கூறியபடி இருக்கின்றபோதிலும் இதுவே மின்சார இரண்டு சக்கர வாகனங்கள் பிரிவில் நம்பர் 1 நிறுவனமாக உள்ளது. அதேவேளையில் இந்த இடத்தில் ரொம்ப நாட்களுக்கு ஓலா எலெக்ட்ரிக் நீடிக்காதோ என்கிற சந்தேகம் தற்போது எழும்ப தொடங்கி இருக்கின்றது.
ஏனெனில், ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு டஃப் கொடுக்கும் அளவிற்கு விற்பனையில் மிகப் பெரிய வளர்ச்சியைக் காண தொடங்கி இருக்கின்றது டிவிஎஸ் (TVS) நிறுவனம். தமிழகத்தை மையமாகக் கொண்டு இரண்டு சக்கர வாகனம் மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது டிவிஎஸ் நிறுவனம்.

இந்த நிறுவனம் நாட்டில் ஐக்யூப் (iQube) எனும் ஒற்றை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த மாடலுக்கே நாட்டு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக 2024 நவம்பர் மாதத்தின் எலெக்ட்ரிக் டூ-வீலர் விற்பனை புள்ளி விபரத்தை இந்திய ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு (FADA) வெளியிட்டு இருக்கின்றது.
இந்த தரவுகளின்படி நவம்பர் 2024 மாதத்திலும் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனமே மின்சார இரண்டு சக்கர வாகன விற்பனையில் முன்னணியில் இருப்பது தெரிய வந்திருக்கின்றது. ஆனால், அது ஆண்டு -டூ- ஆண்டு மற்றும் மாதம் -டூ- மாதம் இரண்டு உடன் ஒப்பிடுகையில் மாபெரும் விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்து இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
2023 நவம்பர் மாதத்தில் 30,073 யூனிட்டுகள் ஓலா மின்சார இரண்டு சக்கர வாகனங்கள் விற்பனையாகிய நிலையில், 2024 நவம்பரில் அது 29,204 யூனிட்டுகளாக குறைந்திருக்கின்றது. இது 2.89 சதவீதம் குறைவான விற்பனை ஆகும். இதேபோல், 2024 அக்டோபர் மாதத்துடன் ஒப்பிட்டு பார்த்தால் இது 29.88 சதவீதம் குறைவான விற்பனை ஆகும்.
இந்த மாதத்தில் 41,651 யூனிட்டுகள் வரை ஓலா மின்சார இரண்டு சக்கர வாகனங்கள் விற்பனையாகியிருந்தன என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த அதிர்ச்சியான தகவலுடனேயே ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்திற்கு மிக சிறந்த போட்டியாளனாக டிவிஎஸ் நிறுவனம் மாற தொடங்கி இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது. நிறுவனத்தின் மின்சார இரண்டு சக்கர வாகனங்கள் அதிகபட்சமாக 2024 நவம்பரில் 27,007 யூனிட்டுகள் விற்பனையாகி இருக்கின்றன.
ஓலா எலெக்ட்ரிக் மற்றும் டிவிஎஸ்-க்கும் இடையே 2,200 யூனிட்டுகள் மட்டுமே வித்தியாசமாக உள்ளது. அதேவேளையில், கடந்த காலங்களில் விற்பனையாகியதை விட இது மாபெரும் விற்பனை வளர்ச்சி என்பதும் தெரிய வந்திருக்கின்றது. இதே டிவிஎஸ் நிறுவனத்தின் மின்சார இரண்டு சக்கர வாகனங்கள் கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பரில் 19,155 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகின.
இதனுடன் ஒப்பிடுகையில் தற்போது 40.99 சதவீதம் வரை விற்பனை வளர்ச்சியை டிவிஎஸ் கண்டிருக்கின்றது. ஆனால், சோகம் என்வென்றால் 2024 அக்டோபரைக் காட்டிலும் இது சற்றே குறைவான விற்பனை ஆகும். அந்த மாதத்தில் பண்டிகைக் காலம் காரணமாக 29,915 யூனிட்டுகள் வரை டிவிஎஸ் இ-ஸ்கூட்டர்கள் விற்பனையாகின.
இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவில் மூன்றாவது இடத்தை பஜாஜ் (Bajaj) நிறுவனமே பிடித்திருக்கின்றது. இந்த நிறுவனமும் ஒரே ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை மட்டுமே நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. சேத்தக் (Chetak), மாடல்தான் அது ஆகும். இதுவும் ஓர் பிரீமியம் அம்சங்கள் தங்கிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும்.
இதற்கும் இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பது ஃபடாவின் தரவுகளின் வாயிலாக தெரிய வந்திருக்கின்றது. குறிப்பாக, ஆண்டு -டூ- ஆண்டுடன் ஒப்பிடுகையில் 121.25 சதவீதம் விற்பனை வளர்ச்சியை அது பெற்றிருப்பது தெரிய வந்திருக்கின்றது. 2023 நவம்பரில் 11,843 யூனிட்டுகள் பஜாஜ் எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் விற்பனையாகிய நிலையில், 2024 நவம்பரில் 26,203 யூனிட்டுகளா உயர்ந்திருக்கின்றது.
அதேவேளையில், இது 2024 அக்டோபரைக் காட்டிலும் சற்றே குறைவான விற்பனை ஆகும். 28,232 யூனிட்டுகள் வரை அது கடந்த அக்டோபரில் விற்பனையாகி இருந்தது என்பது கவனிக்கத்தகுந்தது. இவற்றிற்கு அடுத்தபடியாக நான்காவது இடத்தில் ஏத்தர் எனெர்ஜி (Ather Energy) நிறுவனமும், ஐந்தாவது இடத்தில் ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனமும் உள்ளன.
நான்காவது இடத்தில் இருக்கும் ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் மின்சார இரண்டு சக்கர வாகனங்கள் 2024 நவம்பரில் மொத்தமாகவே 12,760 யூனிட்டுகள் மட்டுமே விற்பனையாகி இருக்கின்றன. இதே நிறுவனத்தின் தயாரிப்புகள் கடந்த அக்டோபர் மாதத்தில் 15,993 யூனிட்டுகள் விற்பனையாகி இருந்தன. இதைவிட 2024 நவம்பரில் விற்பனையாகி இருப்பது 20.22 சதவீதம் குறைவான விற்பனை ஆகும்.
அதேவேளையில், ஆண்டு -டூ- ஆண்டுடன் ஒப்பிடுகையில் இதுவும் மற்ற நிறுவனங்களைப் போலவே நல்ல விற்பனை வளர்ச்சியைப் பெற்றிருக்கின்றது. 36.59 சதவீத விற்பனை வளர்ச்சியை அது பெற்றிருக்கின்றது. 9,342 யூனிட்டுகளே 2023 நவம்பரில் ஏத்தர் இ-ஸ்கூட்டர்கள் விற்பனையாகின. ஐந்தாவது இடத்தில் இருக்கும் ஹீரோ மோட்டோகார்ப்பே நிறுவனமே 'டாப் 5' எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் பிராண்டுகள் பட்டியலில் ஆண்டு -டூ- ஆண்டு மற்றும் மாதம் -டூ- மாதம் என இரண்டிலும் விற்பனை வளர்ச்சியைப் பெற்ற பிராண்டு ஆகும்.
2023 நவம்பரில் 3,047 யூனிட்டுகள் மட்டுமே ஹீரோ எலெக்ட்ரிக் டூ-வீலர்கள் விற்பனையாகிய நிலையில், 2024 நவம்பரில் 7315 யூனிட்டுகளாக அது உயர்ந்திருக்கின்றது. இந்த விற்பனை வளர்ச்சியின் காரணமாக ஹீரோ மோட்டோகார்ப் தற்போது மகிழ்ச்சியின் உச்சியில் உள்ளது. இந்த நிறுவனம் விடா எனும் பிராண்டின்கீழே தன்னுடைய எலெக்ட்ரிக் டூ-வீலர் மாடல்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.
ஃபடா அமைப்பு வெளியிட்ட புள்ளி விபரங்கள் பட்டியலாக:
| Rank | 2W EV Sales | Nov'24 | Nov'23 | Growth (%) YoY |
| 1 | Ola Electric | 29,204 | 30,073 | -2.89 |
| 2 | TVS | 27,007 | 19,155 | 40.99 |
| 3 | Bajaj | 26,203 | 11,843 | 121.25 |
| 4 | Ather Energy | 12,760 | 9,342 | 36.59 |
| 5 | Hero | 7,315 | 3,047 | 140.07 |
| 6 | Greaves Electric | 4,469 | 4,416 | 1.20 |
| 7 | Revolt | 1,996 | 671 | 197.47 |
| 8 | BGauss | 1,878 | 1,609 | 16.72 |
| 9 | Kinetic Green | 1,095 | 427 | 156.44 |
| 10 | Lectrix EV | 991 | 1,258 | -21.22 |
| 11 | Wardwizard | 975 | 1,188 | -17.93 |
| 12 | Bounce | 858 | 246 | 248.78 |
| 13 | Okaya EV | 501 | 1,297 | -61.37 |
| 14 | Others | 3,795 | 7,544 | -49.70 |
| Total | 1,19,047 | 92,116 | 29.24 |
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலே பார்த்தவையே இந்தியாவின் டாப் 5 எலெக்ட்ரிக் டூ-வீலர் பிராண்டுகள் ஆகும். 2024 நவம்பர் மாத விற்பனை புள்ளி விபரங்களின் அடிப்படையிலேயே இந்த பட்டியல் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஒட்டுமொத்தமாக இந்த மாதத்தில் 1,19,047 யூனிட்டுகள் மின்சார டூ-வீலர்கள் விற்பனையாகி இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், தற்போதைய புள்ளி விபரங்கள் வாயிலாக டிவிஎஸ் விரைவிலேயை ஓலாவிற்கு மிகப் பெரிய சவாலை விடுக்கும் பிராண்டாக மாறும் என்பதும் தெரிய வந்திருக்கின்றது.


Click it and Unblock the Notifications








