இவ்ளோ கம்மி விலையா! ஓலாவுக்கே டஃப் கொடுக்கும் நம்ம பெங்களூரு நிறுவனம்.. குடும்பங்களுக்கான இ-ஸ்கூட்டர் அறிமுகம்
இந்திய குடும்பதஸ்களின் பெரும் எதிர்பார்ப்பான ஏத்தர் ரிஸ்தா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Ather Rizta Electric Scooter) இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருடன் சேர்த்து ஹாலே (Halo) எனும் ஸ்மார்ட் ஹெல்மெட் (Smart Helmet)டையும் அது அறிமுகம் செய்திருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
இந்தியர்களின் எதிர்பார்ப்பில் மிகப் பெரிய அளவில் இடம் பிடித்திருந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களில் ஏத்தர் ரிஸ்தா (Ather Rizta)-வும் ஒன்றாகும். இது ஓர் குடும்பங்களுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Family Electric Scooter) மாடல் ஆகும். குடும்பங்களுக்கான வாகனம் என்பதால் குடும்பஸ்தர்களுக்கு பயன்படுத்தும் வசதிகள் பலவற்றை இந்த ஸ்கூட்டரில் வழங்கி இருக்கின்றது ஏத்தர் எனெர்ஜி.

அந்தவகையில், மிகப் பெரிய இருக்கையை இந்த ஸ்கூட்டரில் அந்நிறுவனம் வழங்கி இருக்கின்றது. இது ஹோண்டா ஆக்டிவாவுடையதைவிட பெரியது என்பது குறிப்பிடத்தகுந்தது. கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தன்னுடைய 'இரண்டாவது பதிப்பு ஏத்தர் கம்யூனிட்டி நாள்' (Second Edition Of The Ather Community Day) கொண்டாட்டத்திலேயே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏத்தர் அறிமுகம் செய்து வைத்தது.
முழுக்க முழுக்க இது ஓர் குடும்ப பயன்பாட்டிற்கான ஸ்கூட்டர் என்பதால் அதிக கம்ஃபோர்ட் (Comfort), வசதி (convenience) மற்றும் பாதுகாப்பு (safety) வழங்கக் கூடியதாகவும் ரிஸ்தாவை ஏத்தர் தயார் செய்திருக்கின்றது. அதேவேளையில் தொழில்நுட்ப வசதிகளையும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஏத்தர் வாரி வழங்கி இருக்கின்றது.

மேலும், நவீன கால தொழில்நுட்பங்களும் மிக தாராளமாக இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன. அந்தவகையில், மிக முக்கியமானதாக இ-ஸ்கூட்டரின் டேஷ்போர்டு (dashboard) இருக்கின்றது. இதில் இடம் பெற்றிருக்கும் திரையில் வாட்ஸ்-ஆப் (WhatsApp) போன்ற முக்கியமான செயலிகளைக்கூட அனுபவித்துக் கொள்ள முடியும். இத்துடன், ஸ்கிட் கன்ட்ரோலும் ரிஸ்தாவில் வழங்கப்பட்டு இருக்கின்றது.
விலை மற்றும் வேரியண்ட் விபரம்: எனவே அவ்வளவு எளிதில் இந்த ஸ்கூட்டர் சாலையில் சறுக்கிவிழாது என எதிர்பார்க்கலாம். இத்தகைய சூப்பரான எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஏத்தர் நிறுவனம் ரூ. 1,09,999 விலையை நிர்ணயம் செய்திருக்கின்றது. இது ஆரம்ப நிலை தேர்வின் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். புதிய ரிஸ்தா எஸ் (Rizta S) மற்றும் ரிஸ்தா இசட் (Rizta Z) ஆகிய இரண்டு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

ரேஞ்ஜ் திறன்: இதில் ரிஸ்தா எஸ் மாடலை 2.9kWh பேட்டரி பேக் எனும் ஒற்றை ஆப்ஷனிலம், ரிஸ்தா இசட் மாடலில் 2.9kWh மற்றும் 3.7kWh ஆகிய இரண்டு விதமான பேட்டரி பேக் ஆப்ஷனிலும் வாங்கிக் கொள்ள முடியும். இதில், 2.9kWh பேட்டரி பேக்கை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 123கிமீ ரேஞ்ஜையும், 3.7kWh பேட்டரி பேக் தேர்வில் 160கிமீ ரேஞ்ஜையும் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
நிற தேர்வு: தொடர்ந்து, ஏத்தர் ரிஸ்தா எஸ்-ஐ மூன்று விதமான நிற தேர்வுகளில் வாங்கிக் கொள்ள முடியும். மூன்றுமே ஒற்றை வண்ணத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும். அதேவேளையில், ஏத்தர் ரிஸ்தா இசட்-இல் 7 விதமான வண்ண தேர்வுகள் வழங்கப்படுகின்றன. அதில், 3 ஒற்றை நிறத்தாலும், 4 இரட்டை நிறங்களாலும் அலங்கரிக்கப்பட்டவை ஆகும்.

சாய்ந்துக் கொண்டு பயணிக்கலாம்: முன்னதாக கூறியதைப் போலவே இந்த ரிஸ்தா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மிகவும் சௌகரியமான ரைடு அனுபவத்தை பெற வேண்டும் என்பதற்காக ஏத்தர் பல்வேறு சிறப்பு வசதிகளை ஏத்தர் வழங்கி இருக்கின்றது. அந்தவகையில், பேக்ரெஸ்ட், பின் இருக்கையாளர்கள் சாய்ந்துக் கொண்டு சௌகரியமாக பயணிக்கும் பொருட்டு 'குஷன் பேட்' உடன் வழங்கப்பட்டு இருக்கின்றது.
ஸ்டோரேஜ் விபரம்: இத்துடன், 34 லிட்டர் மற்றும் 22 லிட்டர் என இரண்டு தனி தனி ஸ்டோரேஜ் அறைகளும் இருக்கைக்கு அடியில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதில் ஒன்றில் ஹெல்மெட் மற்றும் வீட்டுக்கு தேவையான பொருட்களையும், மற்றொன்றில் செல்போன் மற்றும் ஆவணங்கள் போன்றவற்றையும் வைத்துக் கொள்ள முடியும்.

அத்துடன் இந்த குட்டி அறையில் 18 வாட் திறன் கொண்ட செல்போன் சார்ஜிங் பாயிண்டும் வழங்கப்பட்டு இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. அதில் செல்போன் மட்டுமல்ல டேப்-களையும் சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். இதேபோல் பாதுகாப்பு அம்சங்களும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன.
பாதுகாப்பு அம்சங்கள் விபரம்: மிக முக்கியமான ஓர் பாதுகாப்பு அம்சமாக ஸ்கிட் கன்ட்ரோல் வழங்கப்பட்டு இருப்பது இருக்கின்றது. இது ஏத்தரே உருவாக்கிய சொந்த இழுவைக் கட்டுப்பாட்டு சிஸ்டம் ஆகும். இந்த சிஸ்டம் மணல், நீர் மற்றும் வழவழப்பான சாலையில் பயணிக்கும்போது ஏற்படும் இழுவை இழப்பை சீர் செய்ய உதவும். குறிப்பாக, சிறந்த முறுக்கு விசையை இந்த நேரத்தில் வழங்கி வாகனத்தைக் கன்ட்ரோலாக வைத்துக் கொள்ளும்.

இத்துடன், ஃபால் சேஃப் (FallSafe) எனும் அம்சத்தையும் இந்த ஸ்கூட்டரில் ஏத்தர் வழங்கி இருக்கின்றது. இது ஸ்கூட்டரை யாரேனும் திருட நேரிட்டாலோ அல்லது காவல்துறை டோவ் செய்தாலோ அதுகுறித்த எச்சரிக்கையை உரிமையாளருக்கு வழங்கும். இத்துடன், ஸ்கூட்டர் இருக்கும் இடத்தையும் இந்த சிஸ்டம் காண்பித்துக் கொடுக்கும்.
ஏத்தர் ரிஸ்தா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் டாப் ஸ்பீடு மணிக்கு 80 கிமீ மட்டுமே ஆகும். இது ஓர் குடும்பங்களுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பதால் இந்த வேகமே போதுமானது ஆகும். இரண்டு விதமான ரைடிங் மோட்களை இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஏத்தர் வழங்கி இருக்கின்றது. ஜிப் (Zip) மற்றும் ஸ்மார்ட் ஈகோ (SmartEco) ஆகியவையே அவை ஆகும்.
இத்துடன், மேஜிக் ட்விஸ்ட் (MagicTwist), ஆட்டோ ஹோல்டு (AutoHold) மற்றும் ரிவர்ஸ் மோட் (Reverse Mode) ஆகியவையும் ரிஸ்தாவில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சங்கள் நிறுவனத்தின் 450 சீரிஸ் இ-ஸ்கூட்டர்களிலும் நம்மால் பார்க்க முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருடன் சேர்த்து நிறுவனம் அதன் ஸ்மார்ட் ஹெல்மெட்மெட்டான ஹாலோ மற்றும் தன்னுடைய புதிய சாஃப்ட்வேர் ஏத்தர் ஸ்டேக் 6.0 -வையும் இந்தியாவில் அறிமுகம் செய்திருக்கின்றது.
முழு விலை விபரம்: 2.9 kWh பேட்டரி பேக்குடன் விற்பனைக்குக் கிடைக்கும் ஏத்தர் ரிஸ்தா எஸ் தேர்விற்கு ரூ. 1 லட்சத்து 09 ஆயிரத்து 999-ம், 2.9 kWh பேட்டரி பேக்குடன் விற்பனைக்குக் கிடைக்கும் ஏத்தர் ரிஸ்தா இசட் தேர்விற்கு ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 999-ம் விரை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.
இவை இரண்டைக் காட்டிலும் சற்று காஸ்ட்லியான தேர்வாக 3.7 kWh பேட்டரி பேக்குடன் விற்பனைக்குக் கிடைக்கும் ஏத்தர் ரிஸ்தா இசட் தேர்வு காட்சியளிக்கின்றது. இதற்கு ரூ. 1 லட்சத்து 44 ஆயிரத்து 999-ம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் குடும்பஸ்தர்களை நம்பியே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஏத்தர் எனெர்ஜி விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு என்ன மாதிரியான வரவேற்புக் கிடைக்கும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும். ஹோண்டா ஆக்டிவா மற்றும் ஓலா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகியவற்றிற்கு போட்டியாகவே ரிஸ்தா இந்தியாவில் களமிறக்கப்பட்டு இருக்கின்றது.


Click it and Unblock the Notifications









