2 வருஷத்துக்கு சர்வீஸ் செலவு கிடையாது... தீபாவளி ஆஃப்பர் என்றால் இப்படி இருக்கணும்! ரூ.30,000 வரை காசு மிச்சம்
தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டாலே புதிய வாகனங்களின் வருகையும், சலுகை & தள்ளுபடிகளும் குவிய ஆரம்பித்துவிடும். ஏனெனில், இந்தியாவில் பண்டிகை காலத்தின் போதுதான் நிறைய பேர் வாகனங்களை வாங்க விரும்புகின்றனர். ஆதலால், இந்த சூழலை பயன்படுத்தும் விதமாக ஆதிஷ்வர் ஆட்டோ ரைடு இந்தியா நிறுவனம் அதன் கீழ் விற்பனை செய்யப்படும் பெனெல்லி (Benelli) மற்றும் சோண்டெஸ் (Zontes) பைக்குகளுக்கு சூப்பரான சலுகைகளை அறிவித்துள்ளது. அவை என்னென்ன என்பதை பற்றியும், சலுகைகளை பெறும் பைக்குகளை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.
சீன குழுமத்தில் செயல்படும் பெனெல்லி மற்றும் சோண்டெஸ் நிறுவனங்கள் இந்தியாவில் ஆதிஷ்வர் ஆட்டோ ரைடு இந்தியா நிறுவனத்தின் கீழ் செயல்படுகின்றன. இந்த நிலையில், ஆதிஷ்வர் ஆட்டோ ரைடு இந்தியா நிறுவனம் குறிப்பிட்ட சில பெனெல்லி மற்றும் சோண்டெஸ் பைக்குகளுக்கு சலுகைகளை தற்போது அறிவித்து உள்ளது.

தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலத்தை முன்னிட்டு பெனெல்லி மற்றும் சோண்டெஸ் பைக்குகளுக்கு ரூ.30,000 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, பெனெல்லியின் டி.ஆர்.கே பைக்குகள் ரூ.30,000 மதிப்பிலான 2 வருடத்திற்கான விரிவான சர்வீஸ் பேக்கேஜ் உடன் கிடைக்கும். அதேநேரம், சோண்டெஸ் 350சிசி பைக்குகளில் ரூ.20,000 மதிப்பிலான 2 வருடத்திற்கான விரிவான சர்வீஸ் பேக்கேஜை பெறலாம்.
பெனெல்லி பிராண்டில் இருந்து டி.ஆர்.கே 502 மற்றும் டி.ஆர்.கே 502எக்ஸ் என இரு விதமான டி.ஆர்.கே பைக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.5.85 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. டி.ஆர்.கே502 மற்றும் டி.ஆர்.கே502 எக்ஸ் என இரு பைக்குகளிலும் 500சிசி இணையான-இரட்டை சிலிண்டர் லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது.

அதிகப்பட்சமாக 6,000 ஆர்பிஎம்-இல் 46 என்.எம் டார்க் திறன் மற்றும் 8,500 ஆர்பிஎம்-இல் 47 பிஎச்பி இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. டி.ஆர்.கே502 பைக்கில் அலுமினியத்திலான அலாய் சக்கரங்களும், அட்வென்ச்சர் பைக்கான 502எக்ஸ் -இல் ஸ்போக்டு சக்கரங்களும் வழங்கப்படுகின்றன.
இந்த 500சிசி பெனெல்லி பைக்குகளுக்கு இந்தியாவில் விற்பனையில் மோட்டோ மோர்னி எக்ஸ-கேப், கவாஸாகி வெர்சஸ் 650 மற்றும் ஹோண்டா சிபி500எக்ஸ் உள்ளிட்ட பைக்குகள் போட்டியாக உள்ளன. மறுப்பக்கம், சோண்டெஸ் பிராண்டில் இருந்து 350சிசி பைக்குகளாக 350ஆர், 350எக்ஸ், ஜிகே350, 350டி மற்றும் 350டி அட்வென்ச்சர் பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன.

இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.2.79 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. சோண்டெஸ் 350சிசி பைக்குகளில் 348சிசி சிங்கிள்-சிலிண்டர் ஃப்யுல்-இன்ஜெக்டட் லிக்யுடு-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 37.5 பிஎச்பி மற்றும் 32 என்.எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பைக்கிற்கு வழங்கக்கூடியதாக உள்ளது.
சோண்டெஸ் 350சிசி பைக்குகளில் முக்கியமான அம்சங்களாக கீலெஸ் கண்ட்ரோல் சிஸ்டம், டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம், டிஎஃப்டி இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி, பேக்லைட் ஸ்விட்ச் கியர், ட்யூயல்-சேனல் ஏபிஎஸ், ஸ்லிப்பர் க்ளட்ச், 4 ரைட் மோட்கள் மற்றும் முழு-எல்இடி விளக்குகள் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களை கவர இவ்வாறான சலுகைகள் அவசியமான ஒன்றே. எப்படியிருந்தாலும், இந்த இலவச சர்வீஸ் பேக்கேஜ் சலுகை ஆனது பண்டிகை காலம் முடியும் வரையில் குறுகிய காலத்திற்கு மட்டுமே வழங்கப்படும். ஆனால், எந்த நாள் வரையில் இந்த சலுகையை பெறலாம் என்பது அறிவிக்கப்படவில்லை. ஆதலால், இந்த சலுகை குறித்த கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள ஆதிஷ்வர் ரைடு இந்தியா டீலர்ஷிப் ஷோரூமை அணுகவும்.


Click it and Unblock the Notifications









