இந்தியாவிலேயே யாருக்கும் இந்த சேன்ஸ் கிடைக்கல... இவர்தான் ஃபர்ஸ்ட்!! ரூ.5 லட்சம் மதிப்பிலான சூப்பர் பைக்!
இந்தியாவில் முதல் அப்ரிலியா ஆர்.எஸ்457 (Aprilia RS457) மோட்டார்சைக்கிள் ஹைதராபாத்தில் ஒரு கஸ்டமருக்கு டெலிவிரி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ பலரை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த பைக்கில் அப்படி என்ன சிறப்பம்சங்கள் உள்ளன? வாருங்கள் அதனை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இத்தாலியன் ஸ்டைல் கார்கள் மட்டுமின்றி பைக்குகளும் உலகம் முழுவதும் பிரபலமானவை. இந்த வகையில், அப்ரிலியா பைக்குகள் நம் இந்தியாவிலும் விற்பனையில் உள்ளன. இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலை குறைவான அப்ரிலியா பைக் ஆர்.எஸ்457 ஆகும். இந்த பைக்கை அப்ரிலியா நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் இந்திய மார்க்கெட்டில் அறிமுகம் செய்தது.

ஆனால் இந்த பைக்கின் டெலிவிரிகள் சமீபத்தில்தான் துவங்கியுள்ளன. முதல் அப்ரிலியா ஆர்.எஸ்457 பைக்கை தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த கஸ்டமர் டெலிவிரி பெற்றுள்ளார். இதனை அந்த ஹைதராபாத் கஸ்டமர் யூடியூப்பில் வீடியோ ஒன்றின் வாயிலாக தெரிவித்துள்ளார். மேலும், இந்த வீடியோவில் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் மற்றும் ஆன்-ரோடு விலைகள் குறித்தும் அவர் தெரிவித்துள்ளார்.
இவர் கூறியதுபடி பார்த்தால், ஹைதராபாத்தில் அப்ரிலியா ஆர்.எஸ்457 பைக்கின் ஆன்-ரோடு விலை ரூ.4.95 லட்சம் ஆகும். இதில் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.4.11 லட்சம். மீதி, இன்ஸ்சூரன்ஸ், ஆர்டிஓ பதிவு கட்டணம் உள்ளிட்டவை ஆகும். நாடு முழுவதும் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலையில் மாற்றம் இருக்காது, ஆனால் ஆன்-ரோடு விலையில் மாற்றம் இருக்கும். இது ஆர்.எஸ்457 பைக்கிற்கு மட்டுமில்லை, எந்தவொரு மோட்டார் வாகனத்துக்கும் பொருந்தும்.

பிரகாஷ் சுராஜ் என பெயர் கொண்ட இந்த முதல் ஆர்.எஸ்457 பைக் கஸ்டமர் கடந்த ஆண்டு டிசம்பரில் இந்த பைக்கிற்கான புக்கிங் துவங்கிய உடனேயே பைக்கை முன்பதிவு செய்துவிட்டார். அந்த சமயத்தில், பைக்கை புக் செய்வதற்கு 2 ஆப்ஷன்களை அப்ரிலியா நிறுவனம் வழங்கியதாக இந்த நபர் கூறுகிறார். அதாவது ஒன்று, ரூ.10,000இல் பைக்கை முன்பதிவு செய்வதாகும்.
மற்றொன்று முழு ரூ.4.11 லட்சத்தையும் செலுத்தி பைக்கை வாங்குவதாகும். முழு பணத்தையும் ஆரம்பத்திலேயே செலுத்தி விடுபவர்களுக்கு அப்ரிலியா நிறுவனம் கூடுதல் முன்னுரிமை அளித்து பைக்கை விரைவாக டெலிவிரி செய்வதாக பிரகாஷ் சுராஜ் வீடியோவில் தெரிவித்துள்ளார். இவர் ஆர்.எஸ்457 பைக்கை புக் செய்த சமயத்தில் 3 - 4 பேர் மட்டுமே இந்த பைக்கை புக் செய்து இருந்துள்ளனர்.

டெலிவிரி எடுத்த பின் வீட்டிற்கு கொண்டு சென்ற பிரகாஷ் சுராஜ், அதன்பின்னர் புதிய பைக்கை 40கிமீ தொலைவில் உள்ள அவர் வேலை செய்யும் அலுவலகத்துக்கு கொண்டு சென்றுள்ளார். இந்த 40கிமீ பயணத்தின்போது, தனது ஆர்.எஸ்457 பைக்கை பற்றிய மேலும் சில விபரங்களையும் சுராஜ் தெரிவித்துள்ளார். அதாவது, என்னென்ன ஆக்ஸஸரீகளை பைக்குடன் அப்ரிலியா வழங்குகிறது, அவற்றுள் இவர் எதை எதை வாங்கியுள்ளார் என்பது போன்ற விபரங்களை தெரிவித்துள்ளார்.
பைக்கை டெலிவிரி எடுப்பதற்கு முன், ஷோரூமில் இவருக்கு டெஸ்ட் ரைடு செய்வதற்காக கொடுக்கப்பட்ட ஆர்.எஸ்457 பைக்கில் அட்ஜெஸ்டபிள் பிரேக் லிவர் மற்றும் க்ளட்ச் லிவர் இருந்துள்ளன. ஆனால், டெலிவிரி கொடுக்கப்பட்ட பைக்கில் அவை இல்லை. ஐரோப்பாவில் ஆர்.எஸ்457 பைக்குடன் வழங்கப்படும் குயிக் ஷிஃப்டர் இந்தியாவில் கூடுதல் ஆக்ஸஸரீயாகவே கொடுக்கப்படுகிறது. அதாவது, இதனை கூடுதல் தொகை செலுத்தி தனியாக வாங்க வேண்டும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவ்வாறான ஒரு அப்ரிலியா பைக்கை வாங்குவதே நம்மில் பெரும்பாலானோருக்கு பெரிய கனவாக இருக்கும். ஆனால், ஹைதராபாத்தை இந்த கஸ்டமர் இந்தியாவிலேயே முதல் ஆளாக ஆர்.எஸ்457 பைக்கை வாங்கி உள்ளார். அதாவது, தற்போதைக்கு இந்தியாவிலேயே யாரிடமும் இல்லாத பைக் இவரிடத்தில் உள்ளது. இதனை நிச்சயமாக வாழ்நாள் முழுக்க இவர் மறக்க மாட்டார்.


Click it and Unblock the Notifications









