குறிச்சி வெச்சிக்கோங்க... எலக்ட்ரிக் பைக்காக மார்க்கெட்டில் பந்தயம் அடிக்க போவது இதுதான்!! ஓலா தயாரிக்குது!

எலக்ட்ரிக் பைக்குகள் அடுத்தடுத்த விற்பனைக்குவர உள்ளன. குறிப்பாக, ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் தயாராகிக் கொண்டிருக்கும் எலக்ட்ரிக் பைக்குகளுக்கு பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக்காக இவை வெளிவரவுள்ளன. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, ஒரு எலக்ட்ரிக் பைக்காக இல்லாமல், தொடர்ச்சியாக 4 எலக்ட்ரிக் பைக்குகளாக அறிமுகம் செய்ய ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் தயாராகி வருகிறது. இந்த நிலையில், முதல் ஓலா எலக்ட்ரிக் பைக்குகளின் அறிமுகம் எப்போது இருக்கும் என்பது குறித்த விபரங்கள் கிடைத்துள்ளன. அவற்றை பற்றி இனி விரிவாக இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் நிறுவனம் ஓலா எலக்ட்ரிக் (Ola Electric) ஆகும். பெங்களூரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனம் இந்தியாவில் எலக்ட்ரிக் 2-வீலர்கள் மார்க்கெட்டில் 30% பங்கை கொண்டுள்ளன. அதாவது, இந்தியாவில் விற்பனையாகும் மொத்த எலக்ட்ரிக் 2-வீலர்களில் 30% வாகனங்கள் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்துடையது ஆகும்.

first ola electric bike launch

இந்த அளவிற்கு வேறெந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனமும் குறுகிய காலத்தில் இவ்வளவு பெரிய வளர்ச்சியை பெறவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். இன்னும் சொல்லப்போனால், ஓலா எலக்ட்ரிக்கில் இருந்து எஸ்1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே தற்போதைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. மற்றப்படி, வேறெந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரோ அல்லது எலக்ட்ரிக் பைக்கோ தற்சமயம் விற்பனையில் இல்லை.

இந்த நிலையில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் பைக் 2026ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் அறிமுகம் செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அதன் பங்குகளை பொது விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இதற்காக, சம்பந்தப்பட்ட வங்கிகளிடம் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டுள்ள ஆவணங்களில், "ஓலா எஸ்1 எக்ஸ்+ எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவிரிகளை 2023 டிசம்பரில் நாங்கள் துவங்கினோம்.

first ola electric bike launch

ஓலா எஸ்1 எக்ஸ் (2kWh) மற்றும் ஓலா எஸ்1 எக்ஸ் (3kWh) எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் டெலிவிரிகளை 2025இன் முதல் பாதியில் இருந்து துவங்கவுள்ளோம் மற்றும் டைமண்ட்ஹெட், அட்வென்ச்சர், ரோட்ஸ்டர் மற்றும் க்ரூஸர் உள்ளிட்ட புதிய மோட்டார்சைக்கிள் மாடல்களை 2026இன் முதல் பாதியில் இருந்து துவங்குவோம்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

அதாவது, ஓலா எலக்ட்ரிக் பைக்குகளை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகளை 2026ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் மேற்கொள்ள துவங்கிவிடுவோம் என ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதலால், இந்த எலக்ட்ரிக் பைக்குகளை அதற்கு முன்னரே ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் அறிமுகம் செய்துவிடும். புக்கிங்கையும் துவங்கிவிடும்.

first ola electric bike launch

எதிர்பார்த்ததை போன்று முதற்கட்டமாக டைமண்ட்ஹெட், அட்வென்ச்சர், ரோட்ஸ்டர் மற்றும் க்ரூஸர் என்கிற 4 எலக்ட்ரிக் பைக்குகளை ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் களமிறக்குகிறது. இவை நான்கும் இப்படியான தோற்றத்தில்தான் இருக்கும் என ஏற்கனவே ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் இந்த எலக்ட்ரிக் பைக்குகளின் மாதிரிகளை நிகழ்ச்சி ஒன்றில் காட்சிப்படுத்திவிட்டது.

இன்னும் சொல்லப்போனால், ஓலா ரோட்ஸ்டர் எலக்ட்ரிக் பைக்கின் டிசைனுக்கான காப்புரிமையை பெற ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஏற்கனவே விண்ணப்பித்துவிட்டது. இந்த 4 புதிய எலக்ட்ரிக் பைக்குகளை ஒரே மாதிரியான பிளாட்ஃபாரத்தில் உருவாக்க ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதனால், இவை நான்கிலும் ஒரே மாதிரியான பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் பொருத்தப்படலாம். இருப்பினும், இந்த பைக்குகள் ஒவ்வொன்றின் பெர்ஃபார்மன்ஸும் நிச்சயமாக வேறுப்படும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: முதல் எலக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்வதற்கு முன்னரே, இந்தியாவின் முன்னணி 2-வீலர் பிராண்ட்களுள் ஒன்றாக ஓலா எலக்ட்ரிக் மாறிவிட்டது. ஆதலால், எலக்ட்ரிக் பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்ட பின்பு அவற்றை விளம்பரப்படுத்துவதிலும், விற்பனை செய்வதிலும் இந்த நிறுவனத்துக்கு பெரியதாக பிரச்சனை இருக்காது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 19, 2024, 14:39 [IST]
English summary
First ola electric bike launch date revealed design features all details here
மேலும்... #ola #electric bike #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X