மொபைல் போனை திறந்தாலே சலுகைகள் கொட்டி கிடக்கு!! அடிமாட்டு விலையில் ஹீரோ பைக்குகள்!

தீபாவளி, தசரா, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை நாட்கள் அடுத்தடுத்ததாக வர உள்ளன. இதனால், இன்னும் சில மாதங்களுக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகள் பண்டிகை விழாக்களில் ஜொலிக்க உள்ளன. ஆனால் உண்மையில், பண்டிகைகளினால் அதிக பலனை அனுபவிப்பது கார்ப்பிரேட் நிறுவனங்கள் தான். ஆடி மாசம், தீபாவளி உள்ளிட்ட பண்டிகை நாட்கள் வந்துவிட்டாலே சலுகைகளும், தள்ளுபடிகளும் அதிகமாக வெளிவருவதை பார்க்க முடியும். அந்த வகையில், வழக்கம்போல் ஃப்ளிப்கார்ட் (Flipkart) தனது பண்டிகை கால சலுகைகளை அறிவித்துள்ளது. ஆனால், இம்முறை இரு சக்கர வாகனங்களுக்கும் ஃபளிப்கார்டில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.

புதியதாக வாகனங்களை வாங்க வேண்டும் என்றாலே பல்வேறு ஆவண சமர்பிப்புகள் என நிறைய விஷயங்களை பின்பற்ற வேண்டியிருக்கும். ஆனால், அது சமீப காலமாக மெல்ல மெல்ல மாறி வருகிறது. இருக்கும் இடத்தில் இருந்தே பல கோடி ரூபாய் மதிப்பு கொண்ட கார்களை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். அதேபோல், 2-வீலர்களும் ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற மொபைல் செயலிகளில் விற்பனை செய்ய துவங்கப்பட்டுவிட்டன.

flipkart big billion days sales

சில வருடங்களுக்கு முன்பு வரையில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மட்டுமே ஃப்ளிப்கார்ட், அமேசான் போன்ற ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், சமீப காலமாக பெட்ரோல் 2-வீலர்களும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஹீரோ மோட்டோகார்ப், பஜாஜ் ஆட்டோ, டிவிஎஸ் மோட்டார், ஓலா எலக்ட்ரிக், ஜாவா, யெஸ்டி உள்ளிட்ட முன்னணி 2-வீலர் நிறுவனங்களில் இருந்து இரு சக்கர வாகனங்கள் ஃப்ளிப்கார்ட்டில் விற்பனை செய்யப்படுகின்றன.

அதாவது, இந்த நிறுவனங்களில் இருந்து ஸ்கூட்டர்கள் மட்டுமின்றி, பைக்குகள் மற்றும் பிரீமியம் தரத்திலான ஸ்போர்ட்ஸ் பைக்குகளையும் ஃப்ளிப்கார்டில் வாங்கலாம். அதேபோல், ஓட்டுவதற்கு லைசன்ஸ் தேவைப்படாத மித-வேக எலக்ட்ரிக் 2-வீலர்களில் இருந்து அதிவேக எலக்ட்ரிக் 2-வீலர்கள் வரையில் ஃப்ளிப்கார்டில் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த நிலையில், ஃப்ளிப்கார்டில் குறிப்பிட்ட சில 2-வீலர்களுக்கு தள்ளுபடி சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

'தி பிக் பில்லியன் டேஸ் சேல்' (The Big Billion Days Sale) என்கிற பெயரில் பண்டிகை கால சலுகைகளை ஃப்ளிப்கார்ட் வழங்கி வருவதை பற்றி நான் கூற வேண்டியது இல்லை. ஏனெனில், மொபைல் போனை திறந்தாலே இந்த சலுகை குறித்த அறிவிப்புகள் தான் சென்றுக் கொண்டிருக்கின்றன. ஃப்ளிப்கார்டில் இருந்து பல்வேறு பிராண்ட்களில் பெட்ரோல் 2-வீலர்கள் கிடைத்தாலும், இந்த தி பிக் பில்லியன் டேஸ் சலுகையில் ஹீரோ, பஜாஜ் மற்றும் ஜாவா நிறுவனங்களின் வாகனங்கள் மட்டுமே அடங்குகின்றன.

அதாவது, இந்த 3 நிறுவனங்களின் இரு சக்கர வாகனங்களை இந்த சலுகையின்படி குறைந்த விலையில் வாங்கலாம். குறிப்பாக, இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் 2-வீலரான ஹீரோ ஸ்பிளெண்டர் பிளஸ் பைக்கின் விலை ரூ.76,306-இல் இருந்து ரூ.67,999 ஆக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஹீரோவின் மாடர்ன் பைக்காக மிகுந்த வரவேற்பை பெற்றுவரும் எக்ஸ்ட்ரீம் 125ஆர் பைக்கின் ஆரம்ப விலை ரூ.95,800-இல் இருந்து அதிரடியாக ரூ.79,999 ஆக குறைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹீரோ மோட்டோகார்பின் இரு சக்கர வாகனங்கள் மட்டுமின்றி, பஜாஜ் ஆட்டோ மற்றும் ஜாவா நிறுவனங்களில் இருந்தும் சலுகை விலையில் கிடைக்கவுள்ள பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களையும் ஃப்ளிப்கார்ட்டில் காணலாம். அதேபோல், எலக்ட்ரிக் 2-வீலர்களையும் சலுகை விலையில் ஃப்ளிப்கார்டில் வாங்க முடியும். ஓலா, விடா, ஆம்பியர், ஒடிசி, ஒகாயா, லெக்ட்ரிக்ஸ், பிகாஸ், நியுமெரியஸ், பவுன்ஸ் இன்ஃபினிட்டி, ஜாய் எலக்ட்ரிக் மற்றும் கைனெட்டிக் க்ரீன் உள்ளிட்ட பிராண்ட்களில் இருந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் பைக்குகள் சலுகை விலையில் கிடைக்கும்.

அதேபோல், பஜாஜின் சேத்தக் 3202 எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும் சுமார் ரூ.17,000 வரையில் குறைந்த விலையில் பெற முடியும். இந்த சலுகைகள் இரு விதங்களாக உள்ளன. ஒன்று, ஃப்ளிப்கார்ட் நிறுவனம் வழங்குவது; மற்றொன்று ஃப்ளிப்கார்டில் மற்ற கூட்டணி வங்கிகள் வழங்கும் சலுகைகள் ஆகும். ஃப்ளிப்கார்டில் ஆக்ஸிஸ் பேங்க் க்ரெடிட் கார்ட் மூலம் வாகனத்தை வாங்கினால் 5% வரையில் அன்லிமிடெட் பணம் தள்ளுபடியை பெறலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் முன்னணி ஆன்லைன் ஷாப்பிங் தளமாக விளங்கும் ஃப்ளிப்கார்டில் இரு சக்கர வாகனங்களில் இந்த சலுகைகளை பெற வேண்டுமென்றால் இன்னும் சில நாட்கள் காத்திருக்க வேண்டும். ஏனெனில், இந்த சலுகைகள் செப்டம்பர் 27ஆம் தேதியில் இருந்துதான் அமலுக்குவர உள்ளன. எப்படியிருந்தாலும், குறிப்பிட்ட சில வாரங்களுக்கு மட்டுமே ஃப்ளிப்கார்ட் இந்த சலுகைகளை வழங்கும். ஆனால், அது எந்த நாள் வரையில் என்பது தற்போதைக்கு அறிவிக்கப்படவில்லை.

More from DriveSpark

Article Published On: Wednesday, September 25, 2024, 21:32 [IST]
English summary
Flipkart the big billion days sale offers on two wheelers check all details here
மேலும்... #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+