எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கும் விலைக்கும் சம்பந்தமே இல்ல.. 120 கிமீ ரேஞ்ஜ் தரும் இதன் விலை ரூ. 80 ஆயிரமாம்!
ஃபுஜியமா இவி (Fujiyama EV) நிறுவனம் இந்தியாவில் புதுமுக எலெக்ட்ரிக் டூ-வீலர் (Electric Two-Wheeler) மாடல் ஒன்றை வெளியீடு செய்திருக்கின்றது. கிளாசிக் (Classic) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலையே அது அறிமுகம் செய்திருக்கின்றது. மிக சிறந்த ரைடிங் அனுபவத்தை வழங்கும் விதமாக இந்த இரண்டு சக்கர வாகனத்தைத் தயார் செய்திருப்பதாக ஃபுஜியமா இவி தெரிவித்து இருக்கின்றது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
ஃபுஜியமா இவி அறிமுகம் செய்திருக்கும் கிளாசிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பவர்ஃபுல் எலெக்ட்ரிக் மோட்டார் (Powerful Electric Motor) பொருத்தப்பட்டு இருப்பதாக நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. இந்த மோட்டாரே நகர்ப்புற பயன்பாட்டை அடுத்த நிலைக்கு எடுத்துச் செல்லும் அனுபவத்தை உங்களுக்கு (வாடிக்கையாளர்களுக்கு) வழங்கும் என கூறப்படுகின்றது.

மோட்டார் மட்டுமல்ல இதில் கொடுக்கப்பட்டு இருக்கும் சிறப்பம்சங்களும் மிக சிறந்த ரைடு அனுபவத்தை வழங்கும் வகையிலேயே இருப்பதாக தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக, மிகவும் வேகமாக சார்ஜ் ஆகும் வசதி இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு வழங்கப்பட்டு இருப்பதாக ஃபுஜியமாக தெரிவித்து இருக்கின்றது.
நிறுவனத்தின் கூற்றின்படி, கிளாசிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெறும் 4 மணி நேரத்திலேயே முழுமையாக சார்ஜ் செய்துக் கொள்ள முடியும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இதுமட்டுமல்ல ட்வின்-பேரல் வகை எல்இடி லைட் செட்-அப்பே கிளாசிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த செட்-அப் முன்னாடி மட்டுமின்றி பக்கவாட்டு பகுதியையும் தெளிவாகக் காணும் வகையில் வெளிச்சத்தை வீசும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஆகையால், இரவு நேரங்களில் பாதுகாப்பான பயணத்தை இந்த லைட் வாயிலாகப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது தெரிகின்றது. இத்துடன், பாதுகாப்பான நிறுத்தத்தை வழங்கும் நோக்கில் காம்பி டிரம் பிரேக் வசதியை கிளாசிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஃபுஜியமா இவி வழங்கி இருக்கின்றது. சிறப்பம்சங்கள் விஷயத்தில் மட்டுமில்லைங்க இந்த வாகனம் அழகிலும் மிக சிறந்ததாக உள்ளது.
இதற்கு கிளாசிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் முகப்பு பகுதியே சான்றாக இருக்கின்றது. அதிக கட்டுமஸ்தான பாடி பேனல்களே இதன் முகப்பு பக்கத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. முன் பக்கத்தில் மட்டுமல்ல பக்கவாட்டு பகுதிகளிலும் அதே கட்டுமஸ்தான பாடி பேனல்களே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3000 வாட் திறன் எலெக்ட்ரிக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த மோட்டார் கிளாசிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அதிகபட்சமாக மணிக்கு 60 கிமீ வேகத்தில் இயங்க உதவியாக இருக்கின்றது. மேலும், ஓர் முழு சார்ஜில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 120 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதற்காக, 2.05 kWh திறன் கொண்ட பேட்டரி பேக்கே எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இது ஓர் ஐஓடி வசதிக் கொண்ட லித்தியம் அயன் பாஸ்ஃபேட் (Lithium Iron Phosphate) வகை பேட்டரி பேக் ஆகும். அறிமுகமாக ஃபுஜியமா கிளாசிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ. 79,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. மேலும், அறிமுகத்தைத் தொடர்ந்து எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான புக்கிங் பணிகளையும் ஃபுஜியமா இந்தியாவில் தொடங்கி இருக்கின்றது.
ரூ. 1,999 முன் தொகையில் விற்பனையாளர்கள் புக்கிங்கை ஏற்று வருகின்றனர். விரைவில் இதன் டெலிவரி பணிகள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அந்த துள்ளியமான நாள் பற்றிய விபரம் அறிவிக்கப்படவில்லை. விரைவில் இந்த நாள் பற்றிய விபரமும், கிளாசிக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பற்றிய இன்னும் பல முக்கிய தகவல்களையும் ஃபுஜியமா இவி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே குறைவான விலையில் அதிகம் ரேஞ்ஜ் தரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை ஃபுஜியமா இவி இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் நிலவும் கடுமையான போட்டியில் தாக்கு பிடிக்குமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








