குறைவான வேகத்தில் போக கூடிய இ-ஸ்கூட்டரை வாங்கணுமா.. தண்டர் பிளஸ் அறிமுகம்..
இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter)-களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஃபுஜியமா (Fujiyama), மின்சார வாகன உற்பத்தி நிறுவனம் ஓர் புதுமுக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது. தண்டர் பிளஸ் (Thunder+) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரையே அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.
இதற்கு ரூ. 64,990 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது சந்தையில் இரண்டு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கும். தண்டர் விஎல்ஆர்ஏ (Thunder VLRA) மற்றும் தண்டர் எல்ஐ (Thunder LI) ஆகியவையே அவை ஆகும். தண்டர் விஎல்ஆர்ஏ வேரியண்ட் ஓர் குறைந்த வேகத்தில் செல்லும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும்.

இதன் டாப் ஸ்பீடு மணிக்கே வெறும் 25 கிலோ மீட்டர் மட்டும்தான் என்பது குறிப்பிடத்தகுந்தது. 250 WATT மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் ஓர் முழு சார்ஜில் 60 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
இதற்காக 48V 28AH விஎல்ஆர்ஏ ரக பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த ரக பேட்டரி பேக் பயன்படுத்தப்பட்ட காரணத்தினாலேயே பேட்டரியின் பெயர் வேரியண்ட்டுன் ஒட்டப்பட்டுள்ளது. மேலும், இது ஓர் குறைந்த வேகத்தில் செல்லும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் என்பதால் இதை சாலையில் வைத்த பதிவெண்ணோ அல்லது ஓட்டுநர் உரிமமோ தேவைப்படாது.
ஆவணம் எதுவும் இன்றி இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்திக் கொள்ள முடியும். தண்டர் எல்ஐ வேரியண்ட் இதுவும் குறைந்த வேகத்திலேயே செல்லும் வேரியண்டாக உள்ளது. தண்டர் விஎல்ஆர்ஏ வேரியண்டில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் அதே 250 WATT மோட்டாரே இதிலும் பயன்படுத்தப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ மட்டுமே ஆகும். ஆகையால், இதையும் சாலையில் இயக்க லைசென்ஸ் மற்றும் வாகன பதிவு என எந்த ஆவணும் தேவைப்படாது. இதில் ஓர் முழு சார்ஜில் 90 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
60V 30AH விஎல்ஆர்ஏ பேட்டரியே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதை முழுமையாக சார்ஜ் செய்ய 4 முதல் 5 மணி நேரங்களே போதும் என கூறப்படுகின்றது. இந்த இரண்டு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வேரியண்டுகளிலும் அதிக தொழில்நுட்ப வசதிகளை ஃபுஜியமா வாரி வழங்கி இருக்கின்றது.
அந்தவகையில், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர்கள், எல்இடி டிஆர்எல் உடன் கூடிய எல்இடி ஹெட்லைட், ரிமோட் லாக் மற்றும் அன்-லாக் அம்சம், திருட்டைத் தவிர்க்கும் தொழில்நுட்பம் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, யுஎஸ்பி சார்ஜிங் போர்ட், ரைடருக்கு பாதுகாப்பை வழங்கும் அம்சங்கள் சிலவும் ஃபுஜியமாவின் தண்டர் பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றன.
ஃபுஜியமா நிறுவனம் இந்தியாவில் தன்னுடைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை இரண்டு விதமான பிரிவுகளின் கீழ் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. குறைந்த வேகம் மற்றும் அதிக வேகம் இந்த பிரிவுகளின்கீழே அது தன்னுடைய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டுள்ளது. குறைந்த வேகம் பிரிவுகளின்கீழ் ஸ்பெக்ட்ரா மற்றும் புதிய தண்டர் பிளஸ் மாடலையும், ஹை ஸ்பீடு தேர்வின்கீழ் கிளாசிக் மற்றும் ஓசோன் ஆகிய மாடல்களையும் ஃபுஜியமா விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இதில் கிளாசிக் மாடலே நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பாக உள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 60 கிமீ ஆகும். 3000 வாட் மோட்டாரே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கன்றது. இதில் ஓர் முழு சார்ஜில் 100 கிமீ ரேஞ்ஜைப் பெற்றுக் கொள்ள முடியும். 2.05 kWh பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஃபுஜியமா தண்டர் பிளஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தினசரி பயன்பாட்டிற்கு உகந்த தயாரிப்பு ஆகும். குறிப்பாக, அருகாமையில் இருக்கும் இடங்களுக்கு சென்று ஏதுவான தயாரிப்பாக இது காட்சியளிக்கின்றது. வயதானவர் தொடங்கி பதின் பருவத்தில் இருப்பவர்களாலும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்திக் கொள்ள முடியும்.


Click it and Unblock the Notifications








