யமஹாவில் நம்ம ஆளுங்க விரும்பி வாங்குவது எந்த பைக்கை தெரியுமா? ஆர்15 கிடையாதுங்க...

யமஹா (Yamaha) நிறுவனத்தில் இருந்து கடந்த 2024 மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட இரு சக்கர வாகனங்கள் குறித்த விபரங்கள் வெளியாகியுள்ளன. அவற்றின்படி, கடந்த மார்ச்சில் எந்தெந்த யமஹா 2-வீலர்கள் அதிகம் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதையும், அவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகளையும் இனி இந்த தொகுப்பில் முழுமையாக பார்க்கலாம்.

ஜப்பான் நாட்டில் இருந்து வந்து இந்திய மார்க்கெட்டில் பல்வேறு ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தங்களது வெற்றிக்கொடியை நாட்டியுள்ளன. அத்தகைய ஜப்பானிய நிறுவனங்களுள் ஒன்றுதான் யமஹா ஆகும். பல வெளிநாடுகளில் 2-வீலர்கள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் யமஹா இந்தியாவில் சற்று பின்தங்கியே உள்ளது என சொல்ல வேண்டும்.

yamaha two wheelers sales report

இருப்பினும், கடந்த 2024 மார்ச் மாதத்தில் கிட்டத்தட்ட 60 ஆயிரம் 2-வீலர்களை இந்தியாவில் யமஹா விற்பனை செய்துள்ளது. சரியாக சொல்ல வேண்டுமென்றால், 58,528 யமஹா இரு சக்கர வாகனங்கள் கடந்த மார்ச் மாதத்தில் இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 43,561 இரு சக்கர வாகனங்களை மட்டுமே யமஹா இந்தியாவில் விற்பனை செய்திருந்தது.

வழக்கம்போல், கடந்த மாதத்திலும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட யமஹா 2-வீலராக முதலிடத்தை எஃப்.இசட் பிடித்துள்ளது. இந்தியாவில் யமஹா எஃப்.இசட் பைக்குகளுக்கு எப்போதுமே நல்ல வரவேற்பு உண்டு. கடந்த மார்ச் மாதத்திலும் 16,154 எஃப்.இசட் பைக்குகளை யமஹா விற்பனை செய்துள்ளது. ஆனால், 2023 மார்ச் மாதத்தில் 19,092 எஃப்.இசட் பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

yamaha two wheelers sales report

இந்த வகையில் பார்க்கும்போது, கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு மார்ச்சில் 2,938 எஃப்.இசட் பைக்குகள் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் யமஹா 2-வீலராக முதலிடத்தை பிடித்திருப்பினும், 2023 மார்ச்சை காட்டிலும் 2024 மார்ச்சில் குறைவாக விற்பனை செய்யப்பட்டுள்ள ஒரேயொரு யமஹா 2-வீலர் எஃப்.இசட் மட்டுமே ஆகும். ஏனெனில், மற்றவற்றின் விற்பனை கணிசமாக அதிகரித்துள்ளது.

எஃப்.இசட் பைக்குகளுக்கு அடுத்து 2வது இடத்தை ரே இசட்.ஆர் ஸ்கூட்டர் பிடித்துள்ளது. பொதுவாக, இந்த 2வது இடத்தை ஆர்15 பைக் பெறுவதே வழக்கம். ஆனால், கடந்த மாத விற்பனையில் ஆர்15 4வது இடத்திற்கு சரிந்துள்ளது. கடந்த மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை 11,531 ஆகும். ஆனால், 2023 மார்ச் மாதத்தில் வெறும் 5,026 ரே இசட்.ஆர் ஸ்கூட்டர்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.

yamaha two wheelers sales report

இந்த வரிசையில் 3வது இடத்தில் எம்டி15 உள்ளது. அதாவது, கடந்த மாதத்தில் ஆர்15 பைக்குகளை காட்டிலும் எம்டி15 பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. நடந்து முடிந்த இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட யமஹா எம்டி15 பைக்குகளின் எண்ணிக்கை 10,697 ஆகும். அதுவே, 2023 மார்ச்சில் 6,201 எம்டி15 பைக்குகள் மட்டுமே விற்கப்பட்டு இருந்தன.

4வது இடத்தில் உள்ள ஆர்15 கடந்த மாதத்தில் 10,095 பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 4வது இடத்திற்கு சரிந்துள்ள போதிலும், கடந்த ஆண்டு மார்ச்சை காட்டிலும் இந்த ஆண்டு மார்ச்சில் 2,514 ஆர்15 பைக்குகள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. 5வது மற்றும் 6வது இடங்களில் ஃபேஸினோ மற்றும் ஏரோக்ஸ் ஸ்கூட்டர்கள் உள்ளன. இவற்றின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 8,311 மற்றும் 1,704 ஆகும்.

yamaha two wheelers sales report

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை மட்டுமின்றி, 36 ஆர்3/ எம்டி3 பைக்குகளையும் இந்தியாவில் கடந்த மார்ச்சில் யமஹா விற்பனை செய்துள்ளது. அதேபோல், கடந்த மாதத்தில் 22,529 இரு சக்கர வாகனங்களை இந்தியாவில் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு யமஹா ஏற்றுமதி செய்துள்ளது. இருப்பினும், எஃப்.இசட் பைக்குகளின் விற்பனை குறைந்து வருவது யமஹாவுக்கு சற்று கவலையை ஏற்படுத்தும். பெரும்பாலானோர் வாங்கும் பஜாஜ் பல்சர், டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளில் இருந்து வித்தியாசமான பைக்கை வாங்க நினைப்போரின் தேர்வு யமஹா எஃப்.இசட் ஆக உள்ளது.

More from DriveSpark

Article Published On: Friday, April 26, 2024, 23:59 [IST]
English summary
Fz most selling yamaha two wheeler in india check all details here
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X