ஓலாவ சமாளிக்க முடியல! நம்ப முடியாத அளவிற்கு விலையை குறைத்த இந்திய நிறுவனம்.. இ-ஸ்கூட்டர் வாங்க சரியான நேரம்!

இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் ஸ்டார்ட்-அப் (Startup) எலெக்ட்ரிக் வாகன (Electric Vehicle) உற்பத்தி நிறுவனங்களில் ஜெமோபாய் (Gemopai)-ம் ஒன்றாகும். இந்த நிறுவனமே அதன் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மாடல்களின் விலையை நம்ப முடியாத அளவிற்குக் குறைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நிறுவனத்தின் கீழ் அல்ட்ரைட் லைட் (Astrid Lite), ரைடர் (Ryder), ரைடர் சூப்பர்மேக்ஸ் (Ryder Supermax) மற்றும் மிஸோ (Miso) என நான்கு விதமான எலெக்ட்ரிக் டூ-வீலர் மாடல்கள் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இவற்றில் அல்ட்ரைட் லைட், ரைடர் மற்றும் ரைடர் சூப்பர்மேக்ஸ் ஆகியவற்றின் விலையே குறைக்கப்பட்டு இருக்கின்றது.

Gemopai astrid

ரூ. 1,11,195-க்கு விற்கப்பட்டு வந்த ரைடர் தற்போது ரூ. 99,195 ஆகவும், ரூ. 79,999க்கு விற்கப்பட்டு வந்த அஸ்ட்ரிட் லைட் தற்போது 69,999-க்கும் விற்கப்படுகின்றது. இதேபோல், ரூ. 70,850 ஆக இருந்த ரைடர் சூப்பர்-மேக்ஸ் மாடலின் விலை தற்போது ரூ. 59,850 ஆகவும் குறைந்திருக்கின்றது.

கேஷ்பேக் வாயிலாக இந்த விலை குறைப்பை நிறுவனம் செய்திருக்கின்றது. இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனமே ஜாம்பவானாக விளங்கிக் கொண்டிருக்கின்றது. இதற்கு அடுத்த இடத்திலேயே டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக் மற்றும் ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இருக்கின்றன. இந்த நிலையிலேயே தான் வழங்கிக் கொண்டிருக்கும் போட்டியை சற்று கடுமையானதாக மாற்றும் பொருட்டே நிறுவனம் விலை குறைப்பைக் கேஷ்பேக் திட்டத்தின் வாயிலாக செய்திருக்கின்றது.

Gemopai astrid

அஸ்ட்ரைட் லைட்: இது ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. 1.7 KW, 2.16 KW மற்றும் 2.88 KW ஆகியவையே அவை ஆகும். ஓர் முழு சார்ஜில் 90 கிமீ தொடங்கி 200 கிமீ வரையில் இதில் ரேஞ்ஜைப் பெற்றுக் கொள்ள முடியும்.

மூன்று விதமான ரைடுங் மோட்கள் அஸ்ட்ரைட் லைட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஸ்போர்ட், சிட்டி, எகனாமி ஆகியவையே அவை ஆகும். 2400 வாட் எலெக்ட்ரிக் மோட்டாரே இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 65 கிமீ ஆகும்.

Gemopai ryder

மேலும், வெறும் 3 செகண்டுகளிலேயே இதனால் பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 40 கிமீ வேகத்தை எட்டிவிட முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, சென்ட்ரல் லாக், யுஎஸ்ஜி, டிஜிட்டல் வண்ண திரை, சாவியில்லாமல் பயணிக்கும் வசதி, சைடு ஸ்டாண்டு சென்சார் போன்ற அம்சங்களும் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ரைடர்: இதிலும் மூன்று விதமான பேட்டரி பேக் தேர்வுகளே வழங்கப்படுகின்றன. 1.7KW, 2.16KW, 2.88KW ஆகியவையே அவை ஆகும். மூன்றும் லித்தியம் அயன் பேட்டரி பேக் தேர்வுகள் ஆகும். முன் மற்றும் பின் வீலில் ஹைட்ராலிக் சஸ்பென்ஷன், டிஸ்க் பிரேக் (முன் வீலில் மட்டும்), சாவியில்லாமல் ரைடு செய்யும் வசதி, எல்இடி லைட், யுஎஸ்பி சார்ஜர் மற்றும் டிஜிட்டல் திரை என ஏகப்பட்ட அம்சங்கள் இந்த மாடலில் வழங்கப்பட்டு இருக்கின்றன.

இதில் ஓர் முழு சார்ஜில் 90 கிமீ முதல் 120 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். ஆனால், இதில் பயணிக்க லைசென்ஸ் வைத்திருக்க வேண்டியதில்லை. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ ஆகும். இந்த வேகத்தில் இயங்கும் வாகனங்களை பதிவு செய்யவும் தேவையில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது.

ரைடர் சூப்பர் மேக்ஸ்: நிறுவனத்தின் அதிகம் தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கி எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாக இது இருக்கின்றது. ஆண்டி தெஃப்ட் அலாரம், லைவ் டிராக்கிங், 150கிலோ எடையைத் தாங்கும் திறன் மற்றும் 100கிமீ ரேஞ்ஜ் திறன் பலதரப்பட்ட வசதிகளை இது தாங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 60கிமீ ஆகும். டிஜிட்டல் ஸ்பீடோ மீட்டர், செல்போன் சார்ஜிங் போர்ட் உள்ளிட்ட சிறப்புகளையும் இது தாங்கி இருப்பது குறிப்பிடத்தகுந்தது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இத்தகைய அம்சங்களைத் தாங்கிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களுக்கே ஜெமோபாய் நிறுவனம் தற்போது சிறப்பு கேஷ்பேக் தள்ளுபடியை அறிவித்து இருக்கின்றது. ஆகையால், வரும் நாட்களில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் விற்பனை கணிசமான அளவு உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Wednesday, April 10, 2024, 18:02 [IST]
English summary
Gemopai announced price cut for ryder astrid lite and ryder supermax e scooter models
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X