5 வருஷத்துக்கு எந்தவொரு பிரச்சனையும் இல்லாமல் ஓட்டலாம்!! வாரண்டியை வாரி வழங்கும் இவி நிறுவனம்!
கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸ் (Godawari Electric Motors) அதன் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் மற்றும் எலக்ட்ரிக் 3-வீலர்களுக்கான பேட்டரி உத்தரவாத காலத்தை அதிகரித்துள்ளது. இதுகுறித்தும், விற்பனையில் உள்ள கோதாவரி எலக்ட்ரிக் வாகனங்கள் குறித்தும் விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
இந்தியாவின் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸ் ஆகும். இந்த நிறுவனம் அதன் எப்லு எலக்ட்ரிக் 2-வீலர்கள் மற்றும் 3-வீலர்களில் பொருத்தும் பேட்டரிகளுக்கான உத்தரவாத காலத்தை நீட்டித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது கோதாவரி கஸ்டமர்களுக்கு மன அமைதியை வழங்கக்கூடிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.

மேலும், கோதாவரி நிறுவனத்தின் இந்த செயல் இந்த நிறுவனத்தின் பேட்டரி தொழிற்நுட்பத்தின் உயர்ந்த தரம் மற்றும் நீண்ட ஆயுளில் நம்பிக்கையை வழங்குவதற்கான உறுதிப்பாட்டை காட்டுகிறது. இன்று (ஏப்ரல் 25) முதல் அமலுக்கு வந்துள்ள கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனத்தின் இந்த நடவடிக்கையின்படி, கோதாவரி எப்லு ஃபியோ எலக்ட்ரிக் 2-வீலர்களின் பேட்டரிக்களுக்கான உத்தரவாத காலம் 5 வருடங்கள் அல்லது 50,000கிமீ ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
இதில் எது முதலில் வருகிறதோ அதுவரையில் உத்தரவாத காலம் இருக்கும். அதாவது, 3 வருடங்களிலேயே 50,000கிமீ-க்கு கோதாவரி எப்லு ஃபியோ எலக்ட்ரிக் 2-வீலரை பயன்படுத்திவிட்டீர்கள் எனில், 3 வருடத்திலேயே உத்தரவாதம் முடிந்துவிடும். மறுப்பக்கம், கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸின் எப்லு ரோஸீ மற்றும் எப்லு ரெய்னோ எலக்ட்ரிக் 3-வீலர்களின் பேட்டரிகளுக்கான உத்தரவாதம் 5 வருடங்கள் அல்லது 80,000கிமீ ஆக தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனத்தின் சிஇஓ ஹைடர் கான் கூறுகையில், "சுற்றுச்சூழலுக்கு உகந்தது மட்டுமின்றி, நம்பகமான, மலிவான மற்றும் தொந்தரவில்லாத எலக்ட்ரிக் வாகனங்களை கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸில் வழங்குவதன் மூலம் நிலையான மொபைலிட்டிக்கான மாற்றத்தை விரைவுப்படுத்துவதே எங்கள் பார்வை.

தொழிற்துறைக்கு சிறந்த பேட்டரி உத்தரவாதத்தை வழங்குவதன் மூலம், எலக்ட்ரிக் மொபைலிட்டியின் எதிர்காலத்தில் எங்கள் அசைக்க முடியாத நம்பிக்கையையும், அதன் பரவலான அடாப்ஷனுக்கான இடையூறுகளை அகற்றுவதற்கான எங்கள் உறுதிப்பாட்டையும் நாங்கள் நிரூப்பிக்கிறோம். இந்த நடவடிக்கை எங்களின் முன்னோடி மனப்பான்மைக்கும், எங்கள் கஸ்டமர்களுக்கான மதிப்பை வழங்குவதற்கான இடைவிடாத கண்டுப்பிடிப்பு முயற்சிக்கும் ஒரு சான்றாகும்" என்றார்.
கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனம் அதன் ஆராய்ச்சி & மேம்பாட்டில் தொடர்ச்சியாக முதலீடுகளை செய்து வருகிறது. இதன் விளைவாக கோதாவரி எலக்ட்ரிக் வாகனங்களில் பயன்படுத்தப்படும் பேட்டரிகள் செயல்திறன் மிக்கவைகளாகவும், நீண்ட ஆயுளை கொண்டவைகளாகவும் விளங்குகின்றன. அதன் மூலம் கிடைத்த தைரியத்திலேயே, எலக்ட்ரிக் வாகனங்களுக்கான உத்தரவாதத்தை கோதாவரி நிறுவனம் நீட்டித்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: எந்தவொரு ஆட்டோமொபைல் வாகனத்திலும் பேட்டரி முக்கியமான பாகமாக விளங்குகிறது. எலக்ட்ரிக் வாகனங்களில் இன்னும் இன்றியமையாத பாகமாக பேட்டரிகள் உள்ளன. இன்னும் சொல்லப்போனால், எலக்ட்ரிக் வாகனங்கள் பேட்டரியையே பெரியளவில் சார்ந்துள்ளன. ஆதலால், தங்களது எலக்ட்ரிக் வாகனங்களின் மீது வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தும் பொருட்டு, பேட்டரிகளுக்கான உத்தரவாதத்தை கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனம் நீட்டித்துள்ளது. இது கோதாவரியின் எலக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








