வீட்டிலேயே சார்ஜ் போட்டுக்கலாம்... 100கிமீ-க்கு மாடு மாதிரி உழைக்கும் - விலை ரூ.1 லட்சத்துக்கும் குறைவு!!
கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸ் (Godawari Electric Motors), இந்தியாவில் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுள் ஒன்று. இந்தியாவில் முதல்முறையாக எலக்ட்ரிக் இரு சக்கர வாகனங்களை ஒப்பந்த முறையில் வழங்கிய நிறுவனங்களுள் ஒன்றும் கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸ் ஆகும். 2019ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்த நிறுவனத்தில் இருந்து அதிகம் விற்பனை செய்யப்படும் இப்ளு ஃபியோ எக்ஸ் (Eblu Feo X) எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
எலக்ட்ரிக் 3 சக்கர வாகனங்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்துவரும் நிறுவனமான கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸ் கடந்த 2024 பிப்ரவரி மாதத்தில் டெல்லியில் நடைபெற்ற பாரத் க்ளோபல் மொபைலிட்டி எக்ஸ்போவில் அதன் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இப்ளு ஃபியோ எக்ஸ் மாடலை காட்சிக்கு நிறுத்தியது.

இந்தியாவின் முதல் ஃபேமலி எலக்ட்ரிக் ஸ்கூட்டராக இப்ளு ஃபியோ எக்ஸ் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது, கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸின் 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆகும். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் 28 லிட்டர்கள் கொள்ளவில் ஸ்டோரேஜ் பகுதி வழங்கப்பட்டு உள்ளது.
இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் பொருத்தப்பட்டுள்ள 2.36kWh பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 110கிமீ தொலைவிற்கு ஸ்கூட்டரை ஓட்டி செல்லலாம். இந்த அளவிற்கு ரேஞ்ச் கிடைப்பதற்கு உதவியாக, ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரில் வழங்கப்பட்டுள்ளது. பேட்டரியை சார்ஜ் செய்ய 60 வோல்ட் ஹோம் சார்ஜர் கொடுக்கப்படும். இதன் மூலமாக 5 மணிநேரம் 25 நிமிடங்களில் பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பிவிடலாம்.

சியான் நீலம், வைன் சிவப்பு, ஜெட் பிளாக், டெலி கிரே, டிராஃபிக் வெள்ளை என மொத்தம் 5 கவர்ச்சிக்கரமான பெயிண்ட் ஆப்ஷன்களில் இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம். சஸ்பென்ஷனுக்கு முன்பக்கத்தில் டெலெஸ்கோபிக் ஃபோர்க்கும், பின்பக்கத்தில் ட்யூயல் ட்யூப் ஷாக்கரும் கொடுக்கப்பட்டுள்ளது. பிரேக் பணியை கவனிக்க, முன் மற்றும் பின் சக்கரங்களில் சிபிஎஸ் டிஸ்க் பிரேக் உள்ளது.

ஸ்கூட்டரின் முன்பக்கத்தில் ஹை-ரிசொல்யூஷன் ஏஎச்ஓ எல்இடி ஹெட்லேம்ப்களும், பின்பக்கத்தில் எல்இடி டெயில்லேம்ப்களும் வழங்கப்பட்டுள்ளன. ஸ்கூட்டர் இயக்கத்தில் இருக்கும்போது சைடு ஸ்டாண்ட் போடப்பட்டு இருந்தால் அதுகுறித்த எச்சரிக்கையை வழங்க சென்சார் இண்டிகேட்டர் வழங்கப்பட்டுள்ளது. ஸ்கூட்டரின் 12 இன்ச் சக்கரங்களில் ட்யூப்லெஸ் டயர்கள் பொருத்தப்பட்டுள்ளன.
ஹேண்டில்பாருக்கு மத்தியில் 7.4 இன்ச்சில் டிஜிட்டல் முழு வண்ண டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. ஓட்டுனருக்கு தேவையான விபரங்களை வழங்கக்கூடிய இந்த திரையை ப்ளூடூத் மூலமாக மொபைல் போன் உடன் இணைத்துக் கொள்ள முடியும். இதன் மூலமாக பயணத்திற்கு தேவையான நேவிகேஷனை பெறலாம். இத்துடன், மொபைல் போனை சார்ஜ் செய்துக் கொள்வதற்கான வசதி கொடுக்கப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸ் நிறுவனத்துக்கு இந்தியா முழுவதும் 74 டீலர்ஷிப் ஷோரூம் மையங்கள் உள்ளன. இதனை 2025 மார்ச் மாதத்திற்குள் 100ஆக அதிகரிக்கும் முனைப்பில் இந்த நிறுவனம் உள்ளது. ஆதலால், இப்ளு ஃபியோ எக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதும், அதற்கான சர்வீஸ்களை பெறுவதும் எளியதாக இருக்கும். அதுமட்டுமின்றி, இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு 3 வருட & 30 ஆயிரம் கிமீ உத்தரவாதம் கிடைக்கும்.


Click it and Unblock the Notifications









