டிவிஎஸ் எக்ஸ்எல் கொஞ்சம் பூசுனத போலிருக்கு.. பாக்கதான் உருவம் சிறுசு 265கி எடையா இருந்தாலும் அசால்டா இழுக்கும்
இந்தியாவை மையமாகக் கொண்டு மின்சார இரண்டு சக்கர வாகன (Electric Two Wheeler) உற்பத்தியை மட்டுமே மேற்கொண்டு வரும் நிறுவனங்களில் கிராவ்டன் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் (Gravton Motors Pvt Ltd)-ம் ஒன்றாகும். இது ஓர் தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்த நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் அதன் புகழ்பெற்ற தயாரிப்பான குவாண்டா (Quanta)-வை தற்போது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இது ஓர் டிவிஎஸ் எக்ஸ்எல் போன்ற வடிவமைப்பைக் கொண்ட மொபட் வகை எலெக்ட்ரிக் டூ-வீலர் ஆகும்.
இதற்கு அறிமுக விலையாக ரூ. 1.2 லட்சம் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். பார்க்க குட்டியாக இருக்கும் இந்த வாகனத்திற்கு இவ்வளவு விலையா என நீங்கள் நினைக்கலாம். ஆனால், பொடியன் போல இருக்கும் இந்த வாகனம் பல்வேறு சாதனைகளைச் செய்த ஒன்று இங்கே கவனிக்கத்தகுந்தது.

இந்த வாகனத்தை வழியில் சார்ஜ் செய்வதற்கு என்று நிறுத்தமாலேயே குமரி தொடங்கி கர்துங்-லா வரை என சுமார் 4,011 கிமீ தூரம் வரை இயக்கி இருக்கின்றனர். 6.5 நாட்களிலேயே இந்த இடைவெளியை அவ்வாகனம் கடந்திருக்கின்றது. இதற்கு முன்னதாக வேறு எந்த எலெக்ட்ரிக் டூ-வீலரும் இந்த சாதனையை முறியடிக்கவில்லை.
எனவேதான் 'ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ்' -லும் இந்த சாதனை இடம் பிடித்தது. பேட்டரி ஸ்வாப்பிங்-கை பயன்படுத்தியே இந்த வாகனத்தை இவ்ளோ தூரம் இயக்கி இருக்கின்றனர். அதாவது, ஒவ்வொரு முறையும் சார்ஜ் தீர்ந்துபோகும் போதும் முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை மாற்றி கன்னியாகுமரி முதல் கர்துங்-லா வரை குவாண்டாவில் பயணித்திருக்கின்றனர்.
இத்தகைய தரமான டூ-வீலரையே தற்போது ரூ. 1.2 லட்சத்திற்கு கிராவ்டன் மோட்டார்ஸ் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதேபோல், மிகவும் சிறிய உருவம் கொண்டிருக்கும் இந்த வாகனத்தை அதிகம் பாரம் தாங்கும் திறன் கொண்டதாகவும் தயார் செய்திருக்கின்றனர். அந்தவகையில், 265 கிலோ வரையிலான எடையை இது தாங்குமாம்.
ஆகையால், டிவிஎஸ் எக்ஸ்எல்-லைப் போலவே மிகவும் கடினமாக இந்த வாகனம் உழைக்கும் என தெரிகின்றது. மேலும், நிறுவனத்தின் அறிவிப்பின்படி இந்த வாகனத்தில் ஓர் முழு சார்ஜில் 130 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இந்த அதிகபட்ச ரேஞ்ச் திறனுக்காக குவாண்டா எலெக்ட்ரிக் டூ-வீலரில் 2.78 kWh திறன் கொண்ட லித்தியம் மக்னீசியம் அயர்ன் பாஸ்பேட் (Lithium Manganese Iron Phosphate) வகை பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த வகை பேட்டரி பேக்கைப் பெறும் முதல் எலெக்ட்ரிக் டூ-வீலர் குவாண்டா என்பது கவனிக்கத்தகுந்தது. இதுமட்டுமில்லைங்க, இந்த வாகனம் இந்தியாவின் அனைத்து விதமான சாலைகளையும் சமாளிக்கும் திறன் கொண்டது என்பதும் குறிப்பிடத்தகுந்தது. அதேநேரத்தில், இதை இலகு ரக எடைக் கொண்ட டூ-வீலராகவும் கிராவ்டன் தயார் செய்திருக்கின்றது.
இதுமட்டுமில்லைங்க, இதனை அதிக வேகத்தில் சார்ஜ் செய்யும் திறன் கொண்டதாகவும் கிராவ்டன் தயார் செய்துள்ளது. வெறும் 90 நிமிடங்களில் 80 சதவீதம் வரை சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். சார்ஜிங் செய்ய முடியவில்லை என்றாலும், பேட்டரி ஸ்வாப்பிங் நிலையங்கள் வாயிலாக முழுமையாக சார்ஜ் செய்யப்பட்ட பேட்டரியை இதில் பொருத்திக் கொள்ள முடியும்.
அதேவேளையில், இதை முழுமையாக சார்ஜ் செய்யவே வெறும் 2.7 யூனிட்டுகள் மின்சார போதுமானது ஆகும். அதாவது, 130 கிமீ தூரம் பயணிக்க இந்த யூனிட்டே போதுமானது. அதேவேளையில், இதற்கு ரூ. 15க்கும் குறைவாகவே செலவாகும் என்பதும் கவனிக்கத்தகுந்தது. அதேவேளையில், ஐசிஇ எஞ்சின் கொண்ட டூ-வீலரில் 130 கிமீ தூரம் வரை பயணிக்க 250 ரூபாக்கும் அதிகமாக செலவாகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே அதிக பயன்பாட்டு வசதிக் கொண்ட குவாண்டாவை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது, கிராவ்டன். இதற்கு இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஏற்கனவே இதற்கான புக்கிங் பணிகள் நாட்டில் தொடங்கிவிட்டன.


Click it and Unblock the Notifications








