ஓலா இ-ஸ்கூட்டரவிட கம்மி விலை! 4புது ஜிடி ஃபோர்ஸ் மின்சார ஸ்கூட்டர்கள் அறிமுகம்! லைசென்ஸ், பதிவு 2ம் வேண்டாம்!

ஜிடி ஃபோர்ஸ் (GT Force), இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் எலெக்ட்ரிக் இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் இதுவும் ஒன்றாகும் இந்த நிறுவனம் அதன் மலிவு விலை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ஒன்றல்ல, ரெண்டல்ல மொத்தமாக நான்கு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்களை அது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

ஜிடி வேகாஸ் (GT Vegas), ஜிடி ரைட் பிளஸ் (GT Ryd Plus), ஜிடி ஒன் பிளஸ் ப்ரோ (GT One Plus Pro) மற்றும் ஜிடி டிரைவ் ப்ரோ (GT Drive Pro) ஆகியவையே அவை ஆகும். அதிக வேகத்தில் பயணிக்கும் வெர்ஷன் மற்றும் குறைவான வேகத்தில் செல்லும் வெர்ஷன் இரண்டும் கலந்த வண்ணம் விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டிருக்கின்றது. ரூ.55,555 தொடங்கி 84,555ரூபாய் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.

Gt force e-scooters

மேலும், ஆண் மற்றும் பெண் இரு பாலரும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பயன்படுத்திக் கொள்ள முடியம் என ஜிடி ஃபோர்ஸ் தெரிவித்து இருக்கின்றது. குறிப்பாக, இல்லத் தரசிகள், கல்லூரி செல்லும் மாணவர்கள், ஐடி நிறுவன ஊழியர்கள், இதர அலுவலக பணிக்கும் செல்லும் பணியாளர்கள் என அனைவருக்கும் பயன்படும் வாகனமாகவும் இந்த வாகனங்களைத் தயார் செய்திருப்பதாக ஜிடி ஃபோர்ஸ் நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது.

ஜிடி வேகாஸ்: இது ஓர குறைந்த வேகத்தில் செல்லும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். பிஎல்டிசி மோட்டாரே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதன் டாப் ஸ்பீடு மணிக்கு 25 கிமீ மட்டுமே ஆகும். இத்தகைய மிக குறைவான வேகத்தில் பயணிக்கும் என்பதால் இதனை பதிவு செய்யவோ அல்லது ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவோ வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

1.5 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த பேட்டரி பேக்கை முழுமையாக சார்ஜ் செய்ய 4-5 மணி நேரங்களே தேவைப்படும். இதை முழுமையாக சார்ஜ் செய்தால் 70 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். மேலும், இதில் 150 கிலோ வரையிலான பொருட்களை ஏற்றிச் செல்ல முடியும். இருசக்கர வாகனத்தின் மொத்த எடையே 88 கிலோ மட்டுமே ஆகும்.

இதன் விரை ரூ. 55,555 ஆகும். இந்த இ-ஸ்கூட்டர் மாடலை ஆரஞ்சு, சிவப்பு மற்றும் கிரே ஆகிய நிற தேர்வுகளில் வாங்கிக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. 5 ஆண்டுகள் அல்லது 60 ஆயிரம் கிமீ வாரண்டி ஜிடி வேகாஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு வழங்கப்படுவது குறிப்பிடத்தகுந்தது.

ஜிடி ரைடு பிளஸ்: மிகவும் ஒல்லியான ஸ்போர்ட்டி லுக் கொண்ட இ-ஸ்கூட்டர் மாடலே இதுவாகும். இதில் 2.2 kWh லித்தியம் அயன் பேட்டரி பேக்கே பயன்படுத்தப்பட்டு உள்ளது. இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 95 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடும் மணிக்கு 25 கிமீ மட்டுமே ஆகும். ஆகையால், இதையும் ஓட்ட டிரைவிங் லைசென்ஸ் தேவையில்லை. அத்துடன், பதிவு செய்யவும் தேவையில்லை.

இதன் விலை ரூ. 65,555 ஆகும். ப்ளூ, சில்வர் மற்றும் கிரே ஆகிய நிற தேர்வுகளில் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஒட்டுமொத்த 90 கிலோவாகும். நிறைய தொழில்நுட்ப வசதிகளைத் தாங்கிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலாகவும் இது காட்சியளிக்கின்றது.

ஜிடி ஒன் பிளஸ் ப்ரோ: நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் அதி வேக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இதுவாகும். இது மணிக்கு 70 கிமீ பயணிக்கும் திறன் கொண்டது. மேலும், இதனால் 180 கிலோ வரையில் தாங்க முடியும். மேலும், ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்தால் 110 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இதை ஒரு முறை முழுமையாக சார்ஜ் செய்ய 4 முதல் 5 மணி நேரங்களே போதுமானது ஆகும். இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலின் விலை ரூ. 76,555 ஆகும். இதனை கருப்பு, நீலம் மற்றும் பழுப்பு ஆகிய நிற தேர்வுகளில் ஜிடி ஃபோர்ஸ் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது.

ஜிடி டிரைவ் ப்ரோ: ஜிடி ஃபோர்ஸ் விற்பனைக்குக் கொண்டு வந்திருப்பதிலேயே அதிக விலைக் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் இதுவாகும். இதன் விற்பனை விலை ரூ. 84,555 ஆகும். ஓர் முழு சார்ஜில் எந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 110 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். இதன் டாப் ஸ்பீடு 70 கிமீ ஆகும். 2.5 kWh பேட்டரி பேக்கே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஜிடி ஃபோர்ஸ் இந்திய வாடிக்கையாளர்களைக் கவரும் பொருட்டு அதிக வேகத்தில் பயணிக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மற்றும் அதிக வேகத்தில் பயணிக்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை நாட்டில் விற்பனைக்குக் களமிறக்கி இருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Wednesday, May 15, 2024, 18:49 [IST]
English summary
Gt force launches 4 new electric scooters
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+