சார்ஜ் பண்ணதையே மறந்துடுவீங்க... 120கிமீ-க்கு நிற்காம ஓடும் - மார்க்கெட்டில் புது எலக்ட்ரிக் பைக்!!

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் எலக்ட்ரிக் பைக்குகளின் எண்ணிக்கையை விரல்விட்டு எண்ணி விடலாம். அந்த அளவிற்கு குறைவான எண்ணிக்கையிலேயே எலக்ட்ரிக் பைக்குகள் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. இருப்பினும், சமீப காலமாக புது, புது எலக்ட்ரிக் பைக்குகள் அவ்வப்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட வண்ணம் உள்ளன. அந்த வரிசையில், ஜிடி ஃபோர்ஸ் (GT Force) நிறுவனம் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதன் புத்தம் புதிய எலக்ட்ரிக் பைக்கை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த எலக்ட்ரிக் பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஜிடி ஃபோர்ஸ், இந்தியாவில் நீண்ட வருடங்களாக எலக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பில் ஈடுப்பட்டு வரும் நிறுவனம். இந்தியாவில் இரு உற்பத்தி தொழிற்சாலைகள் மூலம் மாதத்திற்கு 5 ஆயிரம் எலக்ட்ரிக் 2-சக்கர வாகனங்களை உற்பத்தி செய்யும் அளவிற்கு திறன் கொண்டது ஜிடி ஃபோர்ஸ் ஆகும். இந்த நிறுவனம் புதியதாக மார்க்கெட்டில் ஒரு எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்யவுள்ளதாக சமீப மாதங்களாக எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

gt force launches gt texa

இந்த நிலையில், அந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஜிடி டெக்ஸா (GT Texa) என்கிற பெயரில் புதிய எலக்ட்ரிக் பைக்கை ஜிடி ஃபோர்ஸ் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த புதிய எலக்ட்ரிக் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1,19,555 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அட்வான்ஸ்டு டெக்னாலஜிகள் உடன் மெல்லியதான உடலமைப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த எலக்ட்ரிக் பைக் போக்குவரத்து நெரிசல் மிகுந்த நகர்புற சாலைகளிலும் தினந்தோறும் பயன்படுத்துவதற்கு ஏற்றதாக இருக்கும் என ஜிடி ஃபோர்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புத்தம் புதிய எலக்ட்ரிக் பைக்கில் BLDC மோட்டார் பொருத்தப்பட்டுள்ளது. இதன் உதவியுடன் அதிகப்பட்சமாக மணிக்கு 80கிமீ வேகத்தில் செல்ல முடியும். இந்த எலக்ட்ரிக் மோட்டாருக்கு இயக்க ஆற்றலை வழங்குவதற்கு 3.5kWh லித்தியம்-இரும்பு பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. இதனை முழுவதுமாக சார்ஜ் நிரப்புவதன் மூலம் அதிகப்பட்சமாக 120 - 130கிமீ தொலைவிற்கு பயணிக்கலாம் எனவும் ஜிடி ஃபோர்ஸ் தெரிவித்துள்ளது.

gt force launches gt texa

புதிய ஜிடி டெக்ஸா பைக் உடன் மைக்ரோ சார்ஜர் கிடைக்கும். பேட்டரியில் சார்ஜ் முழுவதுமாக நிரம்பிய பின் தானாக ஆஃப் ஆகும் விதத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மைக்ரோ சார்ஜரின் உதவியுடன் பைக்கின் பேட்டரியை வெறும் 4- 5 மணிநேரங்களில் முழுவதுமாக சார்ஜ் நிரப்பிவிடலாம். இந்த எலக்ட்ரிக் பைக்கின் அதிகப்பட்ச சுமக்கும் திறன் 180 கிலோ ஆகும்.

18 டிகிரி சாய்வு கொண்ட சாலைகளிலும் ஜிடி டெக்ஸா எலக்ட்ரிக் பைக்கை ஓட்ட முடியும். கருப்பு அல்லது சிவப்பு நிறத்தில் இந்த இ-பைக்கை வாங்கலாம். ஜிடி டெக்ஸாவில் அலாய் சக்கரங்கள் முன்பக்கத்தில் 457.2மிமீ அளவிலும், பின்பக்கத்தில் 431.8மிமீ அளவிலும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த அலாய் சக்கரங்களில், 80-100/18 மற்றும் 120-80/17 அளவுகளில் ட்யூப்லெஸ் டயர்கள் வழங்கப்பட்டுள்ளன.

gt force launches gt texa

பயணிகளின் பாதுகாப்பிற்கு இந்த எலக்ட்ரிக் பைக்கில் முன் மற்றும் பின் சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவற்றுடன் கூடுதல் பாதுகாப்புக்கு இ-ஏபிஎஸ் கண்ட்ரோலரும் இந்த பைக்கில் இடம்பெற்றுள்ளது. இந்த பைக்கை ரிமோட் மூலமாகவும் அல்லது சாவி மூலமாகவும் ஸ்டார்ட் செய்யலாம். ரைடர் தனக்கு தேவையான தகவல்களை ஹேண்டில்பாருக்கு மத்தியில் 17.78 செ.மீ அளவில் வழங்கப்பட்டுள்ள எல்இடி டிஸ்பிளே மூலமாக பெற்றுக் கொள்ளலாம்.

இவற்றுடன், டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர், செண்ட்ரல் லாக்கிங் சிஸ்டம், எல்இடி ஹெட்லைட் & டெயில்லைட் மற்றும் டர்ன் சிக்னல் லேம்ப்களும் இந்த எலக்ட்ரிக் பைக்கில் இடம்பெற்றுள்ளன. சஸ்பென்ஷனுக்கு டெலஸ்கோபிக் ட்யூயல் சஸ்பென்ஷன் செட்-அப் இந்த பைக்கில் வழங்கப்பட்டுள்ளது. இந்த எலக்ட்ரிக் பைக்கின் எடை வெறும் 120 கிலோ மட்டுமே ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: புதிய ஜிடி டெக்ஸாவுக்கு முன்பாகவே, ஜிடி வேகாஸ், ஜிடி ரைடு பிளஸ் என 4 எலக்ட்ரிக் பைக் மாடல்களை ஜிடி ஃபோர்ஸ் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. ஆனால், அவை அனைத்தை காட்டிலும் காஸ்ட்லீயான எலக்ட்ரிக் பைக் ஆக புதிய ஜிடி டெக்ஸா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜிடி ஃபோர்ஸ் நிறுவனத்துக்கு தற்போதைக்கு வட இந்திய மாநிலங்களில் மட்டுமே சேல்ஸ் நெட்வொர்க் உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, June 26, 2024, 13:52 [IST]
English summary
Gt force launches gt texa electric bike check price features all details here
மேலும்... #electric vehicles #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X