ஹார்லிடேவிட்சன்ல எலெக்ட்ரிக் பைக்கா? இதை பத்தி நீங்க கேள்விபட்டிருக்கவே மாட்டீங்க!

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக் தயாரிப்பு நிறுவனமான லைவ் ஒயர் நிறுவனம் எஸ்2 முல்ஹாலேண்ட் என்ற எலெக்ட்ரிக் பைக்கை காட்சிப்படுத்தியுள்ளது. இது அந்நிறுவனத்தின் மூன்றாவது எலெக்ட்ரிக் பைக் ஆகும். இந்த பைக்கில் உள்ள அம்சங்கள் என்னென்ன என்பது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக் விலை தயாரிக்கும் நிறுவனமாக லைவ் ஒயர் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் ஏற்கனவே இரண்டு எலெக்ட்ரிக் பைக்குகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. அதன்படி எஸ்2 டெல் மார் மற்றும் எஸ்2 டெல் மார் லே ஆகிய இரண்டு பைக்குகள் தற்போது மார்க்கெட்டில் விற்பனையாகி வருகின்றன.

harley davidson livewire s2 mulholland

ஏற்கனவே இரண்டு பைக்குகள் தயாரான அதே எஸ்2 பிளாட்ஃபார்மை பயன்படுத்தி இந்நிறுவனம் தற்போது மூன்றாவதாக எஸ்2 முல் ஹாலேண்ட் என்ற பைக்கை தற்போது பொதுவெளியில் காட்சிப்படுத்தியுள்ளது. இந்த பைக்கை பொறுத்தவரை நிறுவனம் 10.5 கிலோ வாட் ஹவர் பேட்டரி பேக்கை பொருத்தி உள்ளது. இது 84 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் வகையில் பிஎம்எஸ் எலெக்ட்ரிக் மோட்டாரை பொருத்தியுள்ளது. இது 263 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த பைக்கின் ஃபெர்பார்மென்ஸை விட 0 முதல் 96 கிலோ மீட்டர் வேகத்தை வெறும் 3.3 நொடியில் பிக்கப் செய்துவிடும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த பைக் அதிகபட்சமாக 159 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. டெல் மார் பைக்கை விட இதன் வேகம் என்பது குறைவுதான். நீண்ட நாட்களாக இப்படியான பைக்கை தான் மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

harley davidson livewire s2 mulholland

புதிதாக காட்சிப்படுத்தப்பட்டுள்ள எஸ்2 முல் ஹாலேண்ட் பைக்கை பொறுத்தவரை ஒரு தடவை சார்ஜ் போட்டால் சிட்டியில் 195 கிலோமீட்டர் வரை ரேஞ்ச் தரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதுவே தேசிய நெடுஞ்சாலையில் பயணிக்கும் போது 116 கிலோமீட்டர் மட்டுமே ரேஞ்ச் தரும், இரண்டு ரோடுகளிலும் மாறி மாறி பயன்படுத்தும் போது சராசரியாக 107 கிலோ மீட்டர் வரை ரேஞ்ச் தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ரேஞ்சை எஸ்2 டெல் மார் பைக்கின் ரேஞ்சுடன் ஒப்பிடும்போது அந்த பைக் சிட்டியில் 180 கிலோமீட்டர் ரேஞ்சும், ஹைவேயில் 137 கிலோமீட்டர் ரேஞ்சும், இரண்டும் கலந்த சாலையில் 112 கிலோமீட்டர் சராசரி ரேஞ்சும் தரும் என தெரிவிக்கப்பட்டு இருந்தது. புதிய எஸ்2 முல் ஹாலேண்ட் பைக் ஹைவே மற்றும் ஹைவே மற்றும் சிட்டி கலந்த ரோடுகளின் ரேஞ்ச்களை ஒப்பிடும்போது குறைவாக இருக்கிறது.

harley davidson livewire s2 mulholland

பைக்கின் பேட்டரியை சார்ஜ் செய்ய இரண்டு விதமான சார்ஜிங் ஆப்ஷன்கள் உள்ளன. அதன்படி எல்1 மற்றும் எல்2 சார்ஜர் வழங்கப்படுகிறது. இதில் எல்1 சார்ஜர் மூலம் இந்த பைக்கை சார்ஜ் ஏற்றினால் 9.1 மணி நேரத்தில் பைக் முழுமையாக சார்ஜ் ஏற்றி விடும். இதுவே எல்2 சார்ஜரை பயன்படுத்தி சார்ஜ் ஏற்றினால் 2:22 நிமிடத்திலேயே முழு பைக்கும் சார்ஜ் ஏறிவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த எஸ்2 முல் ஹாலேண்ட் பைக்கின் வடிவமைப்பை பொறுத்தவரை இது ஒரு க்ரூஸர் ரக பைக் ஆகும். இதனால் இதன் பாடி வடிவமைப்பு அதற்கு ஏற்றார் போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் முன் பக்கம் வட்டமான எல்இடி லைட்டுகளால் ஆன ஹெட்லைட் பொருத்தப்பட்டுள்ளது.

harley davidson livewire s2 mulholland

இதன் சீட்டு உயரம் குறைவாக இருக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது.இதனால் உயரம் குறைந்தவர்கள் கூட இந்த பைக்கை எளிதாக பயன்படுத்திக்கொள்ள முடியும். ஹேண்டில் பார் இறுதியில் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன. க்ரூஸர் பைக் என்பதால் நீளமான சீட் வழங்கப்பட்டுள்ளது. இது ஒரு ரெட்ரோ வடிவ லுக்கில் இருக்கிறது.

இந்த பைக்கை தயாரிக்கும் போது அந்நிறுவனம் சுற்றுச்சூழலுக்கு தீங்கு ஏற்படுத்தாமல் இருப்பதற்காக பயோ காம்போசிடர்களைக் கொண்டு சில பாகங்களை உருவாக்கியுள்ளது. இதன்படி ஃபென்டர் பகுதி இப்படியான பொருளை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ரேடியேட்டர் மற்றும் வயரிங் ஆகியவை கடல்களில் மீனவர்கள் விட்டுச் சென்ற மீன்பிடி வலைகளை மீட்டெடுத்து அதன் மூலம் உருவாக்கியுள்ளார்கள். இந்த பைக்கின் சீட்டுகள் எல்லாம் பெட்ரோலியம் இல்லாத மறு உபயோகம் செய்யக்கூடிய சிலிகானை கொண்டு உருவாக்கியுள்ளார்கள்.

இந்த பைக்கின் சஸ்பென்ஷன் செட்டப்பை பொறுத்தவரை முன் பக்கம் ஹிட்டாச்சி நிறுவனத்தின் ஃபோர்க்குகள் பொருத்தப்பட்டுள்ளது. பின்பக்கம் மோனோஷாக் சஸ்பென் பொருத்தப்பட்டுள்ளது. இது ஃப்ரீ லோடு மற்றும் ரீபவுண்டு அட்ஜஸ்ட்மெண்ட் உடன் கூடியதாக இருக்கிறது. பிரேக்குகளை பொருத்தவரை பிரம்பே எம்4.32 கேளிபர்கள் கொண்ட பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. வீல்களை பொருத்தவரை முன்பக்கம் 19இன்ச் பின்பக்கம் 17இன்ச் கொண்ட அலுமினியம் வீல்கள் வழங்கப்பட்டுள்ளன. இந்த பைக் மொத்தம் 195 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது.

டிரைவர்ஸ்பார்க் கருத்து: ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் துணை நிறுவனமான லைவ் ஒயர் நிறுவனம் இந்த பைக்கை தற்போது பொதுவெளியில் காட்சிப்படுத்தியுள்ள நிலையில், இந்த பைக் விரைவில் அமெரிக்க மார்க்கெட்டில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் ஹார்லிடேவிட்சன் நிறுவனம் எலெக்ட்ரிக் பைக்கை கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை இதுவரை இல்லை.

More from DriveSpark

Article Published On: Monday, March 25, 2024, 10:53 [IST]
English summary
Harley davidson livewire s2 mulholland debut details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X