ரொம்ப லென்த்தான உருவம் கொண்ட இ-ஸ்கூட்டர்.. இவ்ளோ நீளமா இருப்பத பாத்தா மூனு என்ன நாளு பேரே போலாம் போலையே..

உலக புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன நிறுவனங்களில் ஹார்லி டேவிட்சன் (Harley Davidson)-ம் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் ஓர் அங்கமாக இயங்கி வருகின்றது லிவ்-வயர் (LiveWire). ஹார்லி டேவிட்சனின் துணை நிறுவனமான இதுவே ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வெளியிட்டு இருக்கின்றது. இது ஓர் மின்சாரத்தில் இயங்கும் மேக்ஸி ரக ஸ்கூட்டர் (Electric Maxi Scooter) ஆகும். இதையே லிவ்-வயர் உலக அளவில் வெளியீடு செய்திருக்கின்றது. இதுவே நிறுவனத்தின் முதல் மேக்ஸி ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும்.

இதனால்தான் இந்த வாகனம் பலரின் கவனத்தை தற்போது கவர்ந்திருக்கின்றது. இதனால் மட்டுமில்லைங்க அதன் தனித்துவமான தோற்றம் காரணமாகவும் இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பலரின் கவனத்தைக் கவர்ந்திருக்கின்றது. குறிப்பாக, அந்த வாகனம் அதிகம் நீளம் கொண்டதாகக் காட்சியளிக்கின்றது. வெளியாகி இருக்கும் படங்களை வைத்து பார்க்கையில் ஓர் சிறிய உருவம் கொண்ட காரின் நீளத்திற்கு இணையான நீளத்தையே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கொண்டிருக்கும் என தெரிகின்றது.

Livewire unveils electric maxi-scooter concept

அதன் துள்ளியமான நீளம் என்ன என்கிற தகவலை ஹார்லி டேவிட்சனின் லிவ்-வயர் அறிவிக்கவில்லை. மேலும், இப்போதைக்கு முன் மாதிரி (Concept) மாடலாக மட்டுமே வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. விரைவிலேயே இதனை உற்பத்திக்கு நிலைக்கு உயர்த்தி அதனையும் வெளியீடு செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்று.

ஏனெனில் இந்த கான்செப்ட் மாடலே பலரின் கவனத்தை ஈர்த்துவிட்டதாக தற்போது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. நிறுவனத்தின் அசத்தலான தயாரிப்பான எஸ்2 ஆரோவ் பவர்-டிரெயின் (S2 Arrow powertrain)-னேக் கொண்டே இந்த வாகனத்தை லிவ்-வயர் தயார் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆகையால், ஆக சிறந்த திறன் வெளிப்பாட்டை வெளியேற்றக் கூடியதாக இந்த வாகனம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Livewire unveils electric maxi-scooter concept type 02

நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பான எஸ்2 டெல் மார் (S2 Del Mar) எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளிலேயே இந்த பவர்டிரெயின் முதன் முதலில் பயன்படுத்தப்பட்டது என்பது கவனிக்கத்தகுந்தது. தொடர்ந்து, இந்த வாகனத்தை லிவ்-வயர் நிறுவனம் வேறு முன்னணி இரண்டு சக்கர வாகன உற்பத்தியாளருடன் இணைந்து தயாரித்து இருப்பதும் தெரிய வந்திருக்கின்றது.

தாய்வான்-னைச் சேர்ந்த கிம்கோ (KYMCO) எனும் பிராண்டுடன் இணைந்தே இந்த வாகனத்தை அது தயார் செய்திருக்கின்றது. ஆனால், என்ன மாதிரியான வசதிகள் எல்லாம் அதில் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது பற்றிய விபரங்களை இவர்கள் வெளியிடவில்லை. மிக முக்கியமாக என்ன மாதிரியான திறன் கொண்ட பேட்டரி பேக் வழங்கப்பட்டு இருக்கின்றது, அதன் ரேஞ்ச் மற்றும் சார்ஜிங் திறன் பற்றிய விபரங்களையும் வெளியிடவில்லை.

Livewire unveils electric maxi-scooter concept type 01

உற்பத்திக்கு நிலைக்கு லிவ்-வயரின் இந்த மேக்ஸி ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உயர்த்தப்படும்போது இதுபற்றிய விபரங்கள் அனைத்தும் வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், எப்போது இதை உற்பத்திக்கு அனுப்பி வைப்பார்கள் என்பது தெரியவில்லை. அதேவேளையில், தற்போது சந்தையில் மின்சார வாகனங்களுக்கான தேவை மிகப் பெரிய அளவில் வளர்ந்துக் காணப்படுகின்றது.

ஆகையால், விரைவிலேயே ஹார்லி டேவிட்சன் இந்த வாகனத்தை உற்பத்தி செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே மிகவும் முரட்டுத் தனமான தோற்றம் கொண்டிருக்கும் இந்த வாகனம் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த மேக்ஸி ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு வரும்பட்சத்தில் பிஎம்டபிள்யூ சிஇ 04 (BMW CE 04)-க்கு போட்டியாக அமையும்.

லிவ்-வயர் மேக்ஸி ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை போலவே முற்றிலும் மாறுபட்ட தோற்றம் கொண்ட ஓர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரே இந்த சிஇ 04 ஆகும். ஸ்கேட் போர்டின் தோற்றத்தைப் பிரதிபலிக்கும் வகையிலேயே இந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை பிஎம்டபிள்யூ மோட்டாராட் தயார் செய்திருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. இந்த வாகனம் தற்போது இந்தியாவில் விற்பனையில் இருக்கின்றது என்பதும் கூடுதலாக கவனிக்கத்தகுந்த தகவல் ஆகும். ஆனால், லிவ்-வயர் எலெக்ட்ரிக் மேக்ஸி-ஸ்கூட்டர் இந்தியாவில் விற்பனைக்கு வருவது சந்தேகமே.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: உலக அளவில் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த சூழலை தங்களுக்கு சாதகமாக்கிக் கொள்ளும் பொருட்டு லிவ்-வயர் நிறுவனம் இந்த மேக்ஸி ரக எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தயார் செய்திருக்கின்றது. இது 2026 ஆம் ஆண்டிலேயே விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 12, 2024, 22:26 [IST]
English summary
Harley davidson s sub brand livewire unveils electric maxi scooter concept
மேலும்... #harley davidson #electric bike
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X