இந்த ஆண்டு தீபாவளியை இந்த பைக் உடன் கொண்டாடிட வேண்டியதுதான்... ஹார்லி-டேவிட்சனில் விலை குறைவான பைக்!!

ஹார்லி-டேவிட்சன் (Harley-Davidson) நிறுவனத்தின் விலை குறைவான பைக்காக எக்ஸ்440 (X440) இந்தியாவில் விற்பனை செய்யப்படுகிறது. ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்துடன் இணைந்து இந்த பைக்கை ஹார்லி-டேவிட்சன் உருவாக்கியது. கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த பைக்கில் புதிய கலர் ஆப்ஷன்களை வரவிருக்கும் தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்களை முன்னிட்டு ஹார்லி-டேவிட்சன் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த புதிய நிறங்களில் ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்கின் விலைகள் எவ்வளவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்பதையும், இந்த பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களையும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

பிரபல அமெரிக்க பைக் நிறுவனமான ஹார்லி-டேவிட்சன் இந்திய சந்தையில் நேரடி வணிகத்தை சில வருடங்களுக்கு முன்னர் நிறுத்தியது. அதனை தொடர்ந்து, ஹீரோ மோட்டோகார்ப் உடன் இணைந்த ஹார்லி-டேவிட்சன் தற்போது ஹீரோ நிறுவனத்தின் மூலமாக இந்தியாவில் தனது பைக்குகளை விற்பனை செய்வதையும், அவற்றிற்கான சர்வீஸ்களை வழங்குவதையும் மேற்கொண்டு வருகிறது.

x440 gets new colour options

இந்த கூட்டணியின் முயற்சியில், கடந்த 2023ஆம் ஆண்டில் இந்தியாவில் விலை குறைவான ஹார்லி-டேவிட்சன் பைக்காக எக்ஸ்440 அறிமுகம் செய்யப்பட்டது. இந்த நிலையில் இந்த பைக்கின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் முயற்சியாக புதிய பெயிண்ட் ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக் மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

டெனிம், விவிட் மற்றும் எஸ் என்பன அந்த 3 வேரியண்ட்கள் ஆகும். இதில், விவிட் மற்றும் எஸ் வேரியண்ட்களில் மட்டுமே புதிய கலர் ஆப்ஷன்கள் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. எக்ஸ்440 விவிட் வேரியண்ட்டிற்கு கோல்டுஃபிஷ் சில்வர் (Goldfish Silver) மற்றும் மஸ்டர்ட் (Mustard) என 2 புதிய பெயிண்ட் ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

x440 gets new colour options

இந்த புதிய கலர் ஆப்ஷன்களில் எக்ஸ்440 விவிட் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2 லட்சத்து 59,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்கின் எண்ட்ரீ-லெவல் டெனிம் வேரியண்ட்டிலும் மஸ்டர்ட் என்கிற கலர் ஆப்ஷன் ஏற்கனவே வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் அதற்கும், தற்போது விவிட் வேரியண்ட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மஸ்டர்ட் கலர் ஆப்ஷனுக்கும் இடையே வித்தியாசம் உள்ளது.

இந்த ஹார்லி-டேவிட்சன் பைக்கின் டாப் எஸ் வேரியண்ட்டை இனி பஜா ஆரஞ்ச் நிறத்திலும் வாங்கலாம். இந்த நிறத்தில் பைக்கின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.2 லட்சத்து 79,500 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய பெயிண்ட் ஆப்ஷன்களை தவிர்த்து, ஹார்லி-டேவிட்சன் எக்ஸ்440 பைக்கின் தோற்றம் மற்றும் மெக்கானிக்கல் பாகங்களில் எந்த மாற்றமும் இல்லை.

x440 gets new colour options

நியோ-ரெட்ரோ ரோட்ஸ்டர் ஸ்டைல் பைக்கான எக்ஸ்440 பைக்கில் வயர்-ஸ்போக் சக்கரங்கள் பொருத்தப்படுகின்றன. விருப்பப்படுவோர் கூடுதல் தொகையை செலுத்தி அலாய் சக்கரங்களையும் பெற்றுக் கொள்ளலாம். இந்த பைக்கின் முன் சக்கரம் 18 இன்ச்சிலும், பின் சக்கரம் 17 இன்ச்சிலும் வழங்கப்படுகின்றன. சஸ்பென்ஷனுக்கு முன் சக்கரத்தில் யுஎஸ்டி ஃபோர்க்குகள் வழங்கப்படுகின்றன.

தொழிற்நுட்ப அம்சங்களாக, எல்இடி ஹெட்லைட்கள் மற்றும் ப்ளூடூத் கனெக்ட்டிவிட்டி உடன் ஃபுல் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் திரையை பெறும் இந்த விலை குறைவான ஹார்லி-டேவிட்சன் பைக்கில் 440சிசி ஆயில்-கூல்டு என்ஜின் பொருத்தப்படுகிறது. அதிகப்பட்சமாக 27 பிஎச்பி மற்றும் 38 என்.எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ மோட்டோகார்ப் உடன் ஹார்லி-டேவிட்சன் உருவாக்கிய எக்ஸ்440 பைக்கிற்கு இந்திய மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதனை மேலும் தொடர வேண்டுமென்றால், இவ்வாறான புது, புது பெயிண்ட் ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்படுவது அவசியமாகும். தீபாவளியை டார்க்கெட் செய்து புதிய கலர் ஆப்ஷன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இவை பலன் தருமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 22, 2024, 8:00 [IST]
English summary
Harley davidson x440 bike gets new colour options check all details here
மேலும்... #harley davidson #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X