வீட்டுல வச்சு புல்லட் பைக்கை தயாரிக்க முடியுமா? எவ்வளவு செலவாகும்? லட்ச கணக்குல எல்லாம் செலவாகாது!
வீட்டுல வச்சு கேக், பிஸ்கட் ரெடி பண்ணுற மாதிரி இப்பலாம் இந்தியர்கள் வாகனங்களை தயார் பண்ண தொடங்கி இருக்காங்க. அந்தவகையில், 1 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பில் விற்கப்படும் ஓர் பைக்கை இந்தியர் ஒருவர் வெறும் ரூ. 70 ஆயிரம் செலவில் வீட்டிலேயே தயார் செய்திருக்கின்றார். ராயல் என்பீல்டு புல்லட் (Royal Enfield Bullet) பைக்கே வீட்டிலேயே வைத்து அவர் தயார் செய்து உள்ளார். குறிப்பாக, இந்த பைக்கின் உருவாக்கத்திற்கு பெரும்பாலும் மரக் கட்டைகளே பயன்படுத்தப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகின்றது.
மேலும், வழக்கமான பெட்ரோல் எஞ்சினுக்கு பதிலாக இந்த பைக்கை அவர் மின்சாரத்தில் இயங்கும் வகையில் வடிமைத்து இருக்கின்றார். இன்னும் ராயல் என்பீல்டு நிறுவனமே எலெக்ட்ரிக் வாகனத்தை விற்பனைக்குக் கொண்டு வரவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. இப்போதே அது மின்சார இரண்டு சக்கர வாகனங்களை அறிமுகம் செய்வதற்கான பணியில் களமிறங்கி இருக்கின்றது.

இந்த மாதிரியான சூழலிலேயே ராயல் என்பீல்டு புல்லட் மோட்டார்சைக்கிளை பிரதிபலிக்கின்ற வகையில் ஓர் சூப்பரான எலெக்ட்ரிக் பைக் தனி நபரால் உருவாக்கப்பட்டு இருக்கின்றது. ஹரியானா மாநிலத்தைச் சேர்ந்த ஓர் எளிமையான நபரே இந்த புல்லட் எலெக்ட்ரிக் பைக்கை தயார் செய்தவர் ஆவார். இது அவரின் தனி திறனை வெளிக்காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது.
பொதுவாக எலெக்ட்ரிக் வாகனங்கள் அமைதியாகவும், ஸ்மூத்தாகவும் இயங்கும் திறன் கொண்டவை. ஆனால், இந்த வாகனம் புல்லட் பைக்கிற்கே உரித்தான அந்த டுபு-டுபு டவுண்டை வெளிப்படுத்தும் வகையில் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. ஆம், போலியான எக்சாஸ்ட் ஒலியை ஏற்படுத்தும் வசதி இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதற்காக ஓர் ஸ்பீக்கர் வாகனத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இது மரக் கட்டையால் தயார் செய்யப்பட்டு இருக்கும் போலியான ஃப்யூவல் டேங்கில் இடம் பெற செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர, இருக்கைக்கு அடியில் ஓர் சிறிய ஸ்டோரேஜ் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன், பேட்டரியை வைப்பதற்கு என இடமும் கொடுக்கப்பட்டு உள்ளது. இதுபோன்று இன்னும் பல வசதிகளை இந்த பைக் தாங்கி இருக்கின்றது.
இந்த எலெக்ட்ரிக் பைக்கிற்கு மின்சார திறனை வழங்கும் விதமாக நான்கு பேட்டரிகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இத்துடன், சார்ஜரும் இந்த பைக்கிலேயே வழங்கப்பட்டு இருக்கின்றது. வழக்கம் போல் பிளக் பாயிண்டில் கொடுக்கப்பட்டு இருக்கும் ஒயரை இணைத்தால் மட்டும் போதும். அது சுலபமாக சார்ஜ் செய்ய தொடங்கிவிடும்.
இதுபோன்று இன்னும் பல்வேறு தனி சிறப்புகளைத் தாங்கியதாகவே இந்த எலெக்ட்ரிக் பைக் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த பைக்கை வடிவமைத்ததற்காக பலர் ஹரியானைவச் சேர்ந்த அந்த இளைஞருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். குறிப்பாக, எலெக்ட்ரிக் புல்லட் பைக் குறித்த வீடியோ இணையத்தில் மிக வேகமாக வைரலாகிக் கொண்டிருக்கின்றது.
மூன்று நாட்களே ஆகின்ற நிலையில் இந்த வீடியோ 5.2 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்றிருக்கின்றது. மேலும் 1.90 லட்சம் லைக்குகளையும், 3 லட்சம் பகிர்வுகளையும் இந்த ஒற்றை வீடியோப் பெற்றிருக்கின்றது. இந்தியாவில் இதுபோன்று வீட்டிலேயே வைத்து வாகனங்கள் தயாரிக்கப்படுவது முதல் முறையல்ல. இந்தியாவில், குறிப்பாக, கேரளாவில் இதுபோன்ற சம்பவங்களை இளைஞர்கள் அடிக்கடி நிகழ்த்தி வருகின்றனர்.
மினி கார், மினி புல்லட் பைக் என பலவற்றை இளைஞர்கள் தயாரித்திருக்கின்றனர். இதேபோல், வழக்கமான வாகனங்களை அதிக ஆடம்பர அம்சங்கள் நிறைந்த வாகனமாக மாற்றிய சம்பவங்களும் நாட்டில் அரங்கேறி இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலிலேயே புல்லட் எலெக்ட்ரிக் பைக் ஹரியானாவில் தயார் செய்யப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ராயல் என்பீல்டு சீக்கிரமே எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அது கிளாசிக் 350 மாடலிலேயே அதன் முதல் எலெக்ட்ரிக் பைக்கை விற்பனைக்குக் களமிறக்கும் என கூறப்படுகின்றது. ஆனால், நிறுவனத்தால் இது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. விரைவில் இதுபற்றிய அனைத்து தகவல்களும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








