இதவிட கம்மி விலையில் யாரும் தரமாட்டாங்க! மலிவு விலையில் விற்கப்படும் 125சிசி பைக்குகள்! ஏழைகளுக்கான பைக்குகள்!
இரண்டு சக்கர வாகனங்களுக்கான மிகப் பெரிய சந்தையாக விளங்கிக் கொண்டிருக்கின்றது, இந்தியா. இதனால்தான், இந்தியாவின் இரண்டு சக்கர வாகன பிரிவில் ஸ்கூட்டர் மற்றும் பைக்குகள் மிகவும் பரந்த அளவிலான தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கின்றன. இன்றைய காலகட்டத்தில் இந்தியர்கள் மத்தியில் 125 சிசி பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் இரண்டு சக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இந்த பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிகவும் விலை குறைவான பைக் மாடல்களை பற்றியே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, இந்தியாவில் 125 சிசி பிரிவில் விற்பனைக்குக் கிடைக்கும் மிக மிக குறைவான டாப் 5 பைக் மாடல்களின் லிஸ்டையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

பஜாஜ் சிடி125எக்ஸ் (Bajaj CT125X): இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் விலை குறைவான 125 சிசி பைக்குகளில் இதுவும் ஒன்றாகும். அதேவேளையில், அதிக மைலேஜ் தரும் 125 சிசி பைக்காகவும் இது காட்சியளிக்கின்றது. இதன் ஆரம்ப விலை ரூ. 74,016 ஆகும். அதிகபட்ச விலை ரூ. 77,126 ஆகும்.
இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும். இந்த பைக் இரண்டு விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ஒன்று டிரம் பிரேக் தேர்வாகும். மற்றொன்று டிஸ்க் பிரேக் தேர்வாகும். இத்துடன் மூன்று வண்ண ஆப்ஷன்களும் இந்த பைக்கில் வழங்கப்படுகின்றன. 125 சிசி எஞ்சினே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.

இந்த எஞ்சின் அதிகபட்சமாக 124.4 சிசி திறன் கொண்ட சிங்கிள் சிலிண்டர் ஏர் கூல்டு மோட்டார் ஆகும். இந்த விலைக் குறைவானதாக இருந்தாலும் அதிக பயனளிக்கக் கூடியதாக தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. குறிப்பாக இந்தியாவின் அனைத்து சாலைகளையும் சமாளிக்கும் திறனை இந்த பைக்கிற்கு பஜாஜ் வழங்கி இருக்கின்றது.

ஹோண்டா ஷைன் (Honda Shine): மிகவும் ஸ்மூத்தான மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு உகந்த பைக்காக இது காட்சியளிக்கின்றது. இந்த பைக்கின் ஆரம்ப விலை ரூ. 79,800 ஆகும். இது டிரம் பிரேக்கின் விலை ஆகும். டிஸ்க் பிரேக் தேர்விற்கூ ரூ. 83,800 விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இந்த பைக்கில் 123.94 சிசி திறன் கொண்ட எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த எஞ்சின் அதிகபட்சமாக 10.59 பிஎச்பி பவரையும், 11 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பைக்கில் சிறந்த ரைடு அனுபவத்தை பெறும் விதமாக டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், பின் பக்கத்தில் டூயல் ஸ்பிரிங் சஸ்பென்ஷனும் வழங்கப்பட்டு இருக்கின்றது. ஐந்து விதமான வண்ண தேர்வுகளில் இந்த பைக் விற்பைக்குக் கிடைப்பது குறிப்பிடத்தகுந்தது.
ஹோண்டா எஸ்பி125 (Honda SP 125): ஹோண்டாவின் மற்றுமொரு மிக சிறந்த மற்றும் மலிவு விலை 125 சிசி பைக் மாடலாக எஸ்பி125 இருக்கின்றது. இந்த பைக்கின் விலை ரூ. 90,017 - ரூ. 90,567 ஆகும். இந்த பைக்கில் 124 சிசி மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இது அதிகபட்சமாக 10.72 பிஎச்பி பவரையும், 10.9 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த பைக்கை டிரம், டிஸ்க் மற்றும் ஸ்போர்ட் எடிசன் ஆகிய தேர்வுகளில் ஹோண்டா விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதில் அதிக விலைக் கொண்டதாக ஸ்போர்ட் எடிசனே இருக்கின்றது.
ஹீரோ சூப்பர் ஸ்பிளெண்டர் (Hero Super Splendor): ஹீரோ நிறுவனத்தின் அட்டகாசமான 125 சிசி பைக் மாடலாக இது இருக்கின்றது. இதன் விலை ரூ. 80,848 ஆகும் இது ஆரம்ப நிலை தேர்வான டிரம் வேரியண்டின் விலை ஆகும். இதன் டிஸ்க் பிரேக் வசதிக் கொண்ட தேர்வின் விலை ரூ. 84,748 ஆகும். இவை இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.
இந்த பைக்கில் 124.7 சிசி திறன் கொண்ட ஏர் கூல்டு சிங்கிள் சிலிண்டர் எஞ்சினே பொருத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 10.72 பிஎச்பி பவரையும், 10.6 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. டைமண்ட் சேஸிஸ் உடன் கூடிய டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் டூயல் ஸ்பிரிங் ஷாக் ஆகியவையும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
பஜாஜ் பல்சர் 125 (Bajaj Pulsar 125): இந்தியர்களின் மிகவும் பிரியமான பைக் மாடலாக பஜாஜ் பல்சர் இருக்கின்றது. இந்த பைக் மாடலிலும் பஜாஜ் 125 சிசி மோட்டார் ஆப்ஷனை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த பைக்கில் 125 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இந்த மோட்டார் அதிகபட்சமாக 11.64 பிஎச்பி பவரையும், 10.8 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இந்த பைக் ரூ. 80,416 தொடங்கி ரூ. 89,984 வரையிலான விலையில் விற்கப்படுகின்றது. இந்த பைக்கை ஸ்பிளிட் இருக்கை தேர்விலும் வாங்கிக் கொள்ள முடியும். அதன் விலை ரூ. 94,138 ஆகும். அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் 125 சிசி பிரிவு இரண்டு சக்கர வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனால்தான் முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு இந்த பிரிவை அலங்கரிக்கும் விதமாக இரண்டு சக்கர வாகனங்களை விற்பனைக்குக் களமிறக்கிக் கொண்டிருக்கின்றன. இவற்றில் மலிவு விலை 125 சிசி பைக்குகளையே இந்த பதிவில் பார்த்தோம்.


Click it and Unblock the Notifications









