ஒரு லெஜண்ட் என்பதை நிரூபிச்சுட்டாங்க!.. சைக்கிள் மாதிரியான லுக்கில் ராயல் என்பீல்டு இ-பைக்! டாப் தகவல்கள்!

பிரபல இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ராயல் என்பீல்டு (Royal Enfield) உலக சந்தைக்கான எலெக்ட்ரிக் பைக் (Electric Bike) மாடலை வெளியீடு செய்திருக்கின்றது. ஃப்ளையிங் ஃப்ளியா சி6 (Royal Enfield Flying Flea C6) எனும் மாடலையே அது வெளியீடு செய்திருக்கின்றது. இத்தாலியில் உள்ள மிலன்-இல் தொடங்கி இருக்கும் உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சி 'இஐசிஎம்ஏ 2024' (EICMA 2024) வாயிலாகவே இந்த பேட்டரியில் இயங்கும் மின்சார பைக்கை ராயல் என்பீல்டு வெளியீடு செய்திருக்கின்றது.

இந்த மாடலை மட்டுமில்லைங்க ஃப்ளையிங் ஃப்ளியா எஸ்6 (Flying Flea S6) எனும் ஸ்கிராம்ப்ளர் (Scrambler) வகை மின்சார பைக்கையும் ராயல் என்பீல்டு காட்சிப்படுத்தி இருக்கின்றது. ஆமாங்க, இந்த கண்காட்சியைப் பயன்படுத்தி ராயல் என்பீல்டு நிறுவனம் அதன் இரண்டு மின்சார பைக் மாடல்களை வெளியீடு செய்திருக்கின்றது.

Royal enfield flying flea c6 electric motorcycle unveiled

மிகப் பெரிய எதிர்பார்ப்புகள் நிலவி வந்தநிலையிலேயே இந்த எலெக்ட்ரிக் பைக்குகளை ராயல் என்பீல்டு காட்சிப்படுத்தி இருக்கின்றது. இந்த பதிவில் ராயல் என்பீல்டு உலகிற்கு முதல் முறையாக அறிமுகம் செய்திருக்கும் ஃப்ளையிங் ஃப்ளியா சி6 எலேக்ட்ரிக் பைக் பற்றி அறிந்துக் கொள்ள வேண்டிய முக்கிய தகவல்களையே வழங்கி இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஃப்ளையிங் ஃப்ளியா பெயருக்கு பின்னால் இருக்கும் சிறப்பு: இந்த பெயருக்கு சொந்தமான பைக் ஓர் 125சிசி, சிங்கிள் சிலிண்டர் எஞ்சின் கொண்ட மோட்டார்சைக்கிள் ஆகும். உலக போர் 2 இல் இந்த பைக் மிகப் பெரிய பங்களிப்பை வழங்கியது. இத்தகைய பைக்கிற்கு புகழாரம் சூட்டும் விதமாகவே ஃப்ளையிங் ஃபிளியா எனும் பெயரை தன்னுடைய மின்சார பைக்குகளுக்கு ராயல் என்பீல்டு பயன்படுத்தி இருக்கின்றது. போரின் போது செய்திகளை பகிர்ந்துக் கொள்ள இந்த பைக்குகள் பயன்படுத்தப்பட்டன.

Royal enfield flying flea c6 battery-compartment

ஃப்ளையிங் ஃப்ளியா சி6 ஸ்டைல்: ராயல் என்பீல்டு நிறுவனம் பெயரை மட்டுமல்ல ஸ்டைலையும் இந்த எலெக்ட்ரிக் பைக்கிற்கு கடத்தி இருக்கின்றது. உலக போர் இரண்டில் பயன்படுத்தப்பட்ட ஃப்ளையிங் ஃப்ளியாவை மிகப் பெரிய அளவில் ஃப்ளையிங் ஃப்ளியா சி6 பிரதிபலிக்கும் வகையில் இருக்கின்றது. அதேநேரத்தில், இதன் லுக் மிகவும் தனித்துவமானதாகவும் காட்சியளிக்கின்றது.

வட்ட வடிவ லைட்டுகள் முன் மற்றும் பின் பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதைத்தொடர்ந்து, நவீன கால சைக்கிள்களில் பயன்படுத்துவதைப் போன்ற அலுமினியம் ஃப்ரேமே இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. மேலும், ஒருவர் மட்டுமே அமர்ந்துச் செல்கின்ற வகையில் ஒற்றை இருக்கை இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுமாதிரியான மிகவும் எளிமையான தோற்றமே அதற்கு வழங்கப்பட்டு இருக்கின்றது. இருப்பினும், அது மிகவும் ஆடம்பரமானதாகக் காட்சியளிக்கச் செய்கின்றது.

Royal enfield flying flea c6 instrument console

ஃப்ளையிங் ஃப்ளியா சி6 சிறப்பம்சங்கள்: டிஎஃப்டி திரை இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது ஓர் தொடுதிரை வசதிக் கொண்ட வட்ட வடிவ திரை ஆகும். இதுதவிர, டிராக்சன் கன்ட்ரோல், கார்னரிங் ஏபிஎஸ் மற்றும் எலெக்ட்ரானிக் பார்க்கிங் அம்சமும் இதில் கொடுக்கப்பட்டு இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, பாதுகாப்பான ரைடிங் அனுபவத்தை பெறும் விதமாக இந்த பைக்கின் இரு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

ரேஞ்ச் மற்றும் பிற முக்கிய விபரங்கள்: இப்போதைய நிலவரப்படி இந்த பைக்கை ராயல் என்பீல்டு நிறுவனம் வெளியீடு மட்டுமே செய்திருக்கின்றது. இந்த வாகனம் பற்றிய மற்ற முக்கிய விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. விரைவிலேயே ராயல் என்பீல்டு அனைத்து முக்கிய விபரங்களையும் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எப்போது அறிமுகம்? இந்த பைக் 2026 ஆம் ஆண்டிலேயே விற்பனைக்கு வரும் என தற்போது வெளியாகிக் கொண்டிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. தற்போது சந்தையில் மின்சார வாகனங்களுக்கான தேவை அதிகரித்துக் காணப்படுவதனால், 2026க்கு முன்னதாகவேகூட இந்த பைக்கை ராயல் என்பீல்டு விற்பனைக்குக் கொண்டு வந்துவிடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ராயல் என்பீல்டு நிறுவனம் இந்த மின்சார பைக்கை விற்பனைக்குக் கொண்டு வரும் எனில் ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் ரோட்ஸ்டர் எலெக்ட்ரிக் பைக்கிற்கு மிகப் பெரிய போட்டியாக அமையும். அதற்கு மட்டுமல்ல டார்க் க்ரடோஸ், ரிவோல்ட் ஆர்வி, அல்ட்ராவைலட் உள்ளிட்ட மின்சார பைக்குகளுக்கும் போட்டியாக மாறும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, November 5, 2024, 5:00 [IST]
English summary
Here is top things to know about royal enfield flying flea c6 electric motorcycle
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X