ஆக்டிவா கொஞ்சம் ஓரமா போ! டெஸ்டினி-யை வேற லெவலுக்கு ரெடி பண்ணிட்டாங்க! நாளைக்கு அறிமுகமாகுமா?.. இல்லையா?...
ஹீரோ (Hero) நிறுவனம், அதன் புகழ்பெற்ற ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றான டெஸ்டினி 125 (Destini 125)-யை வெற லெவலுக்கு அப்டேட் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக ஹீரோ நிறுவனம் புதுப்பிக்கப்பட்ட டெஸ்டினி 125-இன் டீசர் படங்களை சமீபத்தில் வெளியிட்டது. இந்த படத்தின் வாயிலாக டெஸ்டினி 125 புதுப்பிக்கப்பட்டு இருப்பது மட்டும் உறுதி செய்யப்படவில்லை, அது வேற லெவலுக்கு தயாராகி இருப்பதும் உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த புதுப்பிக்கப்பட்ட டெஸ்டினி 125 ஸ்கூட்டரே நாளைய தினம் (செப்டம்பர் 7) இந்தியாவில் அதிகாரப்பூர்வ அறிமுகத்தைக் காண இருக்கின்றது.
இதன் வருகை இந்தியாவின் புகழ்பெற்ற ஸ்கூட்டர் மாடல்களில் ஒன்றான ஹோண்டா ஆக்டிவா (Honda Activa), டிவிஎஸ் ஜுபிடர் (TVS Jupiter), சுஸுகி அக்செஸ் (Suzuki Access) மற்றும் யமஹா ரே இசட்ஆர் (Yamaha Ray ZR) போன்ற ஸ்கூட்டர் மாடல்களுக்கு மிகப் பெரிய போட்டியாக அமைய இருக்கின்றது. அந்த அளவிற்கே மிகவும் தரமான ஸ்கூட்டராகவே டெஸ்டினி 125 தயார் செய்யப்பட்டு இருக்கின்றது. இதுபற்றிய கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க போகின்றோம்.

சமபீத்திலேயே டிவிஎஸ் நிறுவனம் அதன் புதுப்பிக்கப்பட்ட ஜுபிடர் 110 ஸ்கூட்டர் மாடலை நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த நிலையிலேயே ஹீரோ-வும் அதன் டெஸ்டினி 125 ஸ்கூட்டரை புதுப்பித்திருக்கின்றது. புதுப்பித்தலின்கீழ் மிகப் பெரிய மாற்றங்களை இந்த ஸ்கூட்டரில் ஹீரோ செய்திருக்கின்றது. மிக முக்கியமாக புதிய டிசைனை இந்த ஸ்கூட்டருக்கு ஹீரோ வழங்கி இருக்கின்றது.
மிக முக்கியமாக இதன் ஹெட்லேம்ப் மிகப் பெரிய மாற்றத்திற்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றது. எல்இடி ரக லைட்டே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன், எச் எனும் வடிவத்திலான பகல் நேரத்தில் ஒளிரும் லைட்டும் இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஹீரோ என்பதை இது குறிக்கும் விதமாகவே இத்தகைய லைட் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
இதேபோல், பின் பக்கத்திலும் எச் எனும் எழுத்தை பிரதிபலிக்கக் கூடிய ஸ்டாப் லைட்டே இதில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதேபோல், இதன் பாடி பேனல்களிலும் மிகப் பெரிய மாற்றத்தை ஹீரோ செய்திருப்பது தெரிய வந்திருக்கின்றது. தற்போது வெளியிடப்பட்டு இருக்கும் டீசர் படங்களின் வாயிலாகவே இது உறுதியாகி இருக்கின்றது.
தொடர்ந்து, குறுகிய எக்சாஸ்ட் இதில் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரிய வந்திருக்கின்றது. இதுதவிர, புதிய தொழில்நுட்ப வசதிகள் சிலவற்றையும் இந்த வாகனத்தில் எதிர்பார்க்கலாம் என தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. அந்தவகையில், ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட டிஜிட்டல் திரை இந்த ஸ்கூட்டரில் எதிர்பார்க்கப்படுகின்றது.
இதுதவிர, யுஎஸ்பி சார்ஜர், பின்னிருக்கை பயணிகளுக்கான பேக் ரெஸ்ட், பெரிய ஸ்டோரேஜ் உள்ளிட்டவையும் டெஸ்டினி 125 ஸ்கூட்டரில் எதிர்பார்க்கப்படுகின்றன. ஆனால், இந்த ஸ்கூட்டரின் எஞ்சின், சஸ்பென்ஷன் செட்-அப் மற்றும் பிரேக்கிங் சிஸ்டம் போன்ற ஹார்டுவேர் விஷயங்களில் எந்தவொரு பெரிய அளவிலான மாற்றமும் இருக்காது என கூறப்படுகின்றது.
அதே 124.6 சிசி, ஏர் கூல்டு, சிங்கிள் சிலிண்டர் எஞ்சினே இந்த ஸ்கூட்டரில் இடம் பெற இருக்கின்றது. சிவிடி கியர்பாக்ஸ் கொண்ட இந்த எஞ்சின் அதிகபட்சமாக 9 பிஎச்பி பவரையும், 10.4 என்எம் டார்க்கையும் வெளியேற்றும். டிஸ்க்-டிரம் பிரேக் மற்றும் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் மோனோஷாக் ஆகியவையே இதில் எதிர்பார்க்கப்படுகின்றது.
சமீபத்திய தகவல்: நாளை இந்த அப்டேட் செய்யப்பட்ட டெஸ்டினி 125 ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்படும் என தகவல் வெளியிடப்பட்டநிலையில், தற்போது இதன் அறிமுக நாளில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வருகின்ற திங்கள்கிழமை அன்றே ஹீரோ இதனை அறிமுகம் செய்யும் என்றும் புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ நிறுவனத்தின் மிக முக்கியமான தயாரிப்புகளில் ஒன்றாக டெஸ்டினி 125 ஸ்கூட்டர் இருக்கின்றது. இந்தியாவில் 125 சிசி ரக வாகனங்களுக்கு மிகப் பெரிய வரவேற்பு நிலவிக் கொண்டிருக்கின்றது. இந்த தேவையை பூர்த்தி செய்யும் நோக்கிலேயே டெஸ்டினி 125-யை சந்தையில் அறிமுகப்படுத்தியது. மேலும், தற்போது போட்டியை அதிகரிக்க செய்யும் நோக்கில் அதன் புதிய வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








