ஹீரோவின் இந்த பைக் ஸ்பிளெண்டருக்கே டஃப் கொடுக்கும் போலையே!.. அட்டகாசமான லைட்டுடன் புதிய கிளாமர் 125 அறிமுகம்!

ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் அதன் 2024 கிளாமர் 125 (2024 Glamour 125) பைக்கை இந்தியாவில் புதிய சிறப்பு அம்சங்களுடன் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. புதிய சிறப்பம்சங்கள் மட்டுமின்றி கூடுதல் நிற தேர்வு சேர்ப்பு மற்றும் கணிசமான புதுப்பித்தல் ஆகிய வேலைப்பாடுகளையும் இந்த பைக்கில் ஹீரோ பார்த்திருக்கின்றது. எனவே, ரூ.1,000ஆயிரம் வரை இந்த பைக்கின் விலை உயர்ந்திருக்கின்றது. இந்த விலை உயர்வுடனேயே புதிய கிளாமர் 125 பைக் தற்போது நாட்டில் விற்பனைக்கு வந்திருக்கின்றது. இதுபற்றிய கூடுதல் விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

கிளாமர் 125 பைக்கின் ஹெட்லேம்ப் முன்பைவிட தற்போது கூடுதல் அழகானதாகக் காட்சியளிக்கின்றது. இதற்கு அதில் செய்யப்பட்டு இருக்கும் மாற்றமே காரணம். இது ஓர் எல்இடி ஹெட்லைட் ஆகும். நீண்ட தூரத்திற்கு வெளிச்சத்தைப் பரப்பி தெளிவான பார்வையை வழங்கும். எனவே, புதிய கிளாமர் 125 பைக்கில் மேற்கொள்ளப்பட்டு இருக்கும் மிக முக்கியமான அப்டேட்டாக இது பார்க்கப்படுகின்றது.

2024 hero glamour launched

இந்த லைட் வாகனத்தின் அனைத்து விதமான வேகங்களிலும் ஒரே மாதரியான வெளிச்சத்தையே வழங்கும் என நிறுவனம் தெரிவித்து இருக்கின்றது. லைட்டின் இந்த திறனுக்கு அதன் டிசி சிஸ்டமே காரணம் என கூறப்படுகின்றது. எனவே அதிக இருட்டான சாலையிலும் தெளிவான வெளிச்சத்துடன் பாதுகாப்பான பயணத்தை இந்த பைக்கில் மேற்கொள்ள முடியும் என தெரிகின்றது.

இத்துடன் ஹசார்டு லைட் வசதியும் இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சத்தின் வாயிலாக பிற ரைடர்களையும் நம்மால் வரும் ஆபத்து மற்றும் இடையூறுகள் பற்றிய எச்சரிக்கையை வழங்க முடியும். தொடர்ந்து, கடுமையான மழை மற்றும் பனி நேரங்களிலும் இது மிகப் பெரிய உதவியாக இருக்கும் என ஹீரோ தெரிவித்து இருக்கின்றது.

Hero glamour engine

இதைத்தொடர்ந்து, பைக்கின் மைலேஜை அதிகரிக்கச் செய்யும் விதமாக ஸ்டாப், ஸ்டார்ட் சுவிட்ச் அம்சம் இதில் வழங்கப்பட்டு இருக்கின்றது. சாவியை பயன்படுத்தாமலேயே பைக்கை ஆஃப் செய்துக்கொள்ள இந்த சுவிட்ச் உதவியாக இருக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. குறிப்பாக, சிக்னலுக்காக நீண்ட நேரமாக காத்திருக்கும்போது இதன் உதவி மிக பெரியதாக இருக்கும்.

நிற தேர்வை பொருத்த வரை ஏற்கனவே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருந்தவற்றுடன் புதிதாக பிளாக் மெட்டாலிக் சில்வர் (Black Metallic Silver) நிறம் சேர்க்கப்பட்டு இருக்கின்றது. இது கேண்டீ பிளேஸிங் ரெட் (Candy Blazing Red), பிளாக் ஸ்போர்ட்ஸ் ரெட் (Black Sports Red) மற்றும் பிளாக் டெக்னோ ப்ளூ (Black Techno Blue) ஆகியவற்றுடன் இணைந்து விற்பனைக்குக் கிடைக்கும்.

Hero glamour cluster

இரண்டு விதமான வேரியண்டுகளில் இந்த பைக் விற்பனைக்குக் கிடைக்கும். டிரம் மற்றும் டிஸ்க் ஆகியவையே அவை ஆகும். எஞ்சினைப் பொருத்த வரை இந்த பைக்கில் 124.7 சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் கூல்டு, 4 ஸ்ட்ரோக் எஞ்சினே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 10.72 பிஎச்பி பவரையும், 10.6 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

இந்த பைக்கில் சிறந்த ரைடு அனுபவத்திற்காக டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், ஷாக் அப்சார்பர் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டு இருக்கின்றது. இத்துடன் சிறந்த பிரேக்கிங் அனுபவத்திற்காக ஏற்கனவே கூறியதைப் போல டிஸ்க் பிரேக் ஆப்ஷன் வழங்கப்படுகின்றது. ஆரம்ப நிலை தேர்வில் டிரம் பிரேக்கே வழங்கப்பட்டு இருக்கும். இதன் விலை ரூ. 83,598 ஆகும். டிஸ்க் பிரேக் கொண்ட ஹீரோ கிளாமர் 125-க்கு ரூ. 57,598 விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ நிறுவனம் இந்த பைக்கை அதிகம் மைலேஜை விரும்பும் இளைஞர்களுக்கு ஏற்ற பைக்காக தயார் செய்திருக்கின்றது. ஆமாங்க, இளைஞர்களின் மனதைக் கவரும் பொருட்டே புதிய நிற தேர்வு சேர்ப்பு மற்றும் கவர்ச்சியான எல்இடி லைட் சேர்ப்பு உள்ளிட்ட வேலைகளை பார்த்திருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Friday, August 23, 2024, 11:10 [IST]
English summary
Hero glamour 2024 launched india with new features here is price and more details
மேலும்... #hero motocorp #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X