டியோ கொஞ்சம் ஓரமா போறியா! ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் அறிமுகம்! விலை இவ்ளோ கம்மியா!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் மலிவு விலை ஸ்கூட்டர் மாடல்களில் ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனத்தின் பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் (Pleasure Plus Xtec)-ம் ஒன்றாகும். இந்த மாடலிலேயே ஹீரோ நிறுவனம் ஸ்போர்ட்ஸ் எனும் புதிய வேரியண்டை விற்பனைக்கு அறிமுகம் செய்திருககின்றது.

ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட்ஸ் (Hero Pleasure Plus Xtec Sports) எனும் பெயரிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும். இதற்கு அறிமுகமாக 79 ஆயிரத்து 738 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலை ஆகும்.

Hero pleasure plus xtec sports launched

எக்ஸ்டெக் கன்னெக்ட் மற்றும் எக்ஸ்டெக் ஸ்டாண்டர்டு ட்ரிம்களுக்கு இடையிலேயே இந்த தேர்வு நிலை நிறுத்தப்பட்டு இருக்கின்றது. இது வழக்கமான தேர்வுகளில் இருந்து பலநிலைகளில் மாறுபட்டுக் காட்டிசியளிக்கின்றது. குறிப்பாக அழகிய வண்ண பூச்சை இந்த தேர்வுக் கொண்டிருக்கின்றது. அப்ராக்ஸ் ஆரஞ்சு மற்றும் நீல நிறத்தாலேயே இந்த தேர்வு அலங்கரிக்கப்பட்டு இருக்கின்றது.

இத்துடன், சைடு பேனல்களில் 18 என்கிற நம்பரும் வழங்கப்பட்டு இருக்கின்றன. இந்த நம்பர் முன் ஏப்ரான் (apron) மற்றும் ஃபெண்டர் (fender)-களிலும் காண முடிகின்றது. இந்த வேலைப்பாடு ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட் வேரியண்டிற்கு அதிக அழகை சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது.

Hero pleasure plus xtec sports rear

இதுபோன்று அலங்கரிப்பு விஷயத்தில் மட்டுமே இந்த புதிய ஸ்போர்ட்ஸ் வேரியண்டிற்கும், வழக்கமான வேரியண்டிற்கும் இடையில் வித்தியாசமாக இருக்கின்றது. ஆமாங்க, எஞ்சின், சஸ்பென்ஷன் மற்றும் பிரேக்கிங் சிஸ்டம் ஆகிய விஷயத்தில் வழக்கமான ஹீரோ பிளஷ்ஷர் மற்றும் பிளஷ்ஷர் ஸ்போர்ட்ஸ் வேரியண்ட் ஆகியவை ஒரே மாதிரியானதாகக் காட்சியளிக்கின்றன.

110.9 சிசி எஞ்சினே இந்த ஸ்கூட்டரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 8 பிஎச்பி பவரையும், 8.7 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. மேலும், இந்த ஸ்கூட்டரில் நவீன கால சிறப்பம்சங்களும் மிக தாராளமாக வழங்கப்பட்டு இருக்கின்றன.

Hero plea sure plus xtec sports side design

அந்தவகையில், நடுத்தர டிஜிட்டல் திறன் மற்றும் ப்ளூடூத் இணைப்பு வசதிக் கொண்ட திரை ஒன்று இந்த ஸ்கூட்டரில் வழங்கப்பட்டு உள்ளது. இது ஓர் எல்சிடி திரை ஆகும். இந்த திரை வாயிலாக செல்போனுக்கு வரும் அழைப்பு மற்றும் குறுஞ்செய்திகளை நம்மால் அறிந்துக் கொள்ள உதவும்.

இத்துடன், புரஜெக்டர் வகை எல்இடி ஹெட்லைட்டும் அதிக வெளிச்சத்தை வழங்கும் விதமாக வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுவே ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்கூட்டரின் மிக முக்கியமான சிறப்பம்சங்களில் ஒன்றாகும். இதுபோன்று இன்னும் பல சிறப்புகளையும் ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்கூட்டர் தன்னுள் தாங்கி இருக்கின்றது.

இதன் வருகை டிவிஎஸ் ஜுபிடர், ஹோண்டா ஆக்டிவா மற்றும் டியோ ஆகிய ஸ்கூட்டர்களுக்கு மிகப் பெரிய போட்டியாக அமையும். குறிப்பாக, ஸ்போர்ட்ஸ் லுக்கை அதிகம் விரும்பும் இரண்டு சக்கர வாகன காதலர்கள் மனதை இந்த ஸ்கூட்டர் மிகப் பெரிய அளவில் கவரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் அடிப்படையிலேயே ஹீரோ நிறுவனம் தற்போது ஹீரோ பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்து வைத்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்கூட்டர் மாடலாக ஹோண்டா ஆக்டிவா இருக்கின்றது. இதற்கு போட்டி அளிக்கும் நோக்கிலேயே ஹீரோ நிறுவனம் பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் ஸ்போர்ட் வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. இத்துடன், மற்றுமொரு புதுமுக மாடலையும் அது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த வாகனத்திற்கான பேடண்ட் பதிவை சமீபத்திலேயே ஹீரோ செய்தது. கூடிய விரைவிலேயே இந்த புதுமுகத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, March 26, 2024, 19:53 [IST]
English summary
Hero launched pleasure plus xtec sports variant in india at inr 79738
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X