ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440-க்கு போட்டியாக விலை குறைவான ஹீரோ பைக்! கை விட்டு எண்ண கூடிய நாள்லையே அறிமுகமாகபோகுது

இந்தியாவின் முன்னணி இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் வெகு விரைவில் நாட்டில் புதுமுக பைக் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை உறுதிப்படுத்தக் கூடிய தகவலை தற்போது வெளியாகி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.

இரண்டு சக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமாக இந்தியாவைச் சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப் விளங்கிக் கொண்டிருக்கின்றது. ஏற்கனவே பரந்து விரிந்த அளவில் இருசக்கர வாகன மாடல்களை இந்த நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்ற சூழலில் தற்போது மேலும் ஓர் புதிய மாடலை விற்பனைக்கான இருசக்கர வாகன மாடல்களின் பட்டியலில் இணைக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Harley davidson x440

இதை உறுதிப்படுத்தும் விதமாக நிறுவனம் ஓர் டீசர் படத்தையும் வெளியிட்டு இருக்கின்றது. டீசரை மட்டுமில்லைங்க அது வெளியீடு செய்ய இருக்கும் நாளும் அறிவிக்கப்பட்டு உள்ளது. வருகின்ற 22 ஆம் தேதி அன்றே தன்னுடைய புதுமுக பைக்கை நிறுவனம் வெளியீடு செய்ய இருக்கின்றது.

ஆகையால் நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான முதல் பைக் மாடலாக அது இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இது ஓர் 440 சிசி பைக்காக இருக்கும் என்றும் தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இந்த தகவலை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.

தற்போது ஹீரோ மோட்டோகார்ப்பும் - ஹார்லி டேவிட்சன் இரு நிறுவனங்களும் இணைந்து இந்தியாவில் கூட்டணியின் கீழ் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த கூட்டணியின்கீழ் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்ட மோட்டார்சைக்கிளே எக்ஸ்440 ஆகும். இது ஓர் ரோட்ஸ்டர் வகை பைக் மாடலாகும்.

இந்த பைக் மாடலை தழுவியதாகவே ஹூரோவின் வரவிருக்கும் பைக் மாடல் இருக்கும் என வாகன உலகம் கணித்துள்ளது. மேலும், ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 பைக்கை தயாரிக்க பயன்படுத்தப்படும் அதே பிளாட்பாரத்தை பயன்படுத்தியே ஹூரோவின் புதிய பைக்கும் உருவாக்கப்பட்டு இருப்பதாக தகவல்கள் கசிந்துள்ளன.

இது எந்த அளவிற்கு உண்மை என்பது வருகின்ற ஜனவரி 22 ஆம் தேதி அன்றே தெரிய வரும். இருப்பினும், இந்த தகவல் இப்போது இருசக்கர வாகன காதலர்களின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கிவிட்டது. மிக முக்கியமாக ஹீரோ மோட்டோகார்ப் இருசக்கர வாகன காதலர்களின் கவனத்தை மிகப் பெரிய அளவில் கவர்ந்திருக்கின்றது.

ஹார்லி டேவிட்சனின் மலிவு விலை பைக் மாடல் இதுவே ஆகும். இந்த மோட்டார்சைக்கிள் ஒட்டுமொத்தமாக மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கிறது. டெனிம், விவிட் மற்றும் எஸ் ஆகியவையே அந்த தேர்வுகள் ஆகும். இதில் ஆரம்ப நிலை தேர்வகா டெனிம் உள்ளது.

இதற்கு ரூ. 2 லட்சத்து 29 ஆயிரமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. விவிட் தேர்விற்கு ரூ. 2 லட்சத்து 49 ஆயிரம் ரூபாயும் மற்றும் எஸ் தேர்விற்கு ரூ. 2 லட்சத்து 69 ஆயிரமும் விலை நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது. இந்த விலைகள் அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் மதிப்புகள் ஆகும்.

ஹார்லி டேவிட்சன் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் இவர்கள் இருவரும் இணைந்த பைக்கை பற்பல வசதிகள் கொண்ட வாகனமாக தயார் செய்திருக்கின்றனர். அந்தவகையில், இணைப்பு வசதிக் கொண்ட டிஎஃப்டி திரை மிக முக்கியமான அம்சமாக உள்ளது. இது இந்த பைக்கில் வழங்கப்பட்டு இருப்பது பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

அது வெறும் 3.5 அங்குலம் கொண்ட திரையாக இருந்தாலும், செயல்படுவதில் நம்மையே வியப்பில் ஆழ்த்தும். அந்தவகையில், இந்த திரை வாயிலாக செல்போனுக்கு வரும் அழைப்புகளை ஏற்கவும், மியூசிக்கைக் கன்ட்ரோல் செய்யவும் முடியும். இது தவிர, நேவிகேஷன் போன்ற முக்கிய தகவல்களைப் பெற்றுக் கொள்ள முடியும்.

இந்த பைக்கில் எஞ்சினைப் பொருத்த வரை 440சிசி, சிங்கிள் சிலிண்டர், ஏர் மற்றும் ஆயில் கூல்டு லாங் ஸ்ட்ரோக் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது அதிகபட்சமாக 27பிஎச்பி பவரையும், 38என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. 6ஸ்பீடு கியர்பாக்ஸே வழங்கப்பட்டு உள்ளது. இதுபோன்று இன்னும் பல சிறப்பம்சங்களை இந்த பைக் தாங்கி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதைப்போலவே அதிக வசதிகளைத் தாங்கியதாக ஹீரோவின் வரவிருக்கும் புதிய பைக் மாடல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 பைக்கிற்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இது ஓர் மலிவு விலை பைக் மாடல் என்பதாலும், ஹீரோவால் தயாரிக்கப்பட்ட ஹார்லி டேவிட்சன் பைக் என்பதாலும் இதற்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

More from DriveSpark

Article Published On: Monday, January 1, 2024, 16:29 [IST]
English summary
Hero launching new bike on january 22 in india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+