ஒரு மாசம் புல்லா 9 பேர் தான் இந்த ஸ்கூட்டரை வாங்கியிருக்காங்க! ஹீரோ நிறுவனத்திற்கு இப்படி ஒரு நிலைமையா?
ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனமாக இருக்கிறது. இந்நிறுவனம் கடந்த ஜூன் மாதம் அதிக வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இருந்தாலும், இந்நிறுவனத்தின் ஒரு தயாரிப்பை வாடிக்கையாளர்கள் மிக குறைவான எண்ணிக்கையிலேயே வாங்கி உள்ளார்கள். இது குறித்த விரிவான விவரங்களை காணலாம் வாருங்கள்.
ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனம் கடத்த ஜூன் மாதம் 4.90 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் 4.22 லட்சம் வாகனங்களை தான் விற்பனை செய்திருந்தது. தற்போது 16.09 சதவீதம் அளவிற்கு இந்நிறுவனத்தின் வாகன விற்பனை என்பது அதிகரித்துள்ளது.

ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் மற்றும் எச் எஃப் டீலக்ஸ் ஆகிய பைக்குகள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகின்றன.அதே நேரம் கிளாமர், எக்ஸ்ட்ரீம் 125 ஆர், பேசன் மற்றும் டெஸ்டினி 125 ஆகிய வாகனங்களின் விற்பனையும் கணிசமான அளவு அதிகரித்துள்ளது. இப்படியாக நிறுவனத்தின் தயாரிப்புகள் எல்லாம் மக்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்தி விற்பனை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் ஹீரோ நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பான மீஸ்ட்ரோ என்ற ஸ்கூட்டரை வாங்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த ஜூன் மாதம் மிக குறைவாகவே இருந்துள்ளது. மாதம் முழுவதும் இந்தியாவில் வெறும் 9ஸ்கூட்டர்களே மட்டுமே அந்நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதனால் இந்தியாவிலேயே மிகக் குறைவான எண்ணிக்கையில் விற்பனையான ஸ்கூட்டராக இந்த ஸ்கூட்டர் தான் இருக்கிறது.

கடந்த 2023ம் ஆண்டு ஜூன் மாதம் இந்த ஹீரோ மீஸ்ட்ரோ ஸ்கூட்டரை பொறுத்தவரை 2500 ஸ்கூட்டர்கள் விற்பனையாகி இருந்தன. தற்போது கடந்த ஜூன் மாதம் வெறும் 9 ஸ்கூட்டர்கள் விற்பனையாகி உள்ள நிலையில், 2491 ஸ்கூட்டர்கள் குறைவாக விற்பனையாகி 99.64 சதவீதம் அளவுக்கு விற்பனை வீழ்ச்சி அடைந்துள்ளது. இவ்வளவு விற்பனை குறைந்ததால் இந்நிறுவனம் இந்த மீஸ்ட்ரோ ஸ்கூட்டரை நிறுத்திவிட்டது என நீங்கள் நினைக்க வேண்டாம்.
மிஸ்ட்ரோ ஸ்கூட்டரை பொறுத்தவரை பல்வேறு விதமான வேரியண்ட்களை விற்பனையாகி வருகிறது. மீஸ்ட்ரோ ஜூம், மீஸ்ட்ரோ எட்ஜ் 125, மீட்ஸ்ரோ எட்ஜ் 110 ஆகிய ஸ்கூட்டர்கள் விற்பனையாகி வருகின்றன. ஸ்கூட்டர்களை வாங்கும் வாடிக்கையாளர்கள் பலர் தற்போது ஹீரோ மிஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர்களை வாங்கி வருகிறார்கள். இந்த புதிய வேரியண்டில் ஹெட்லைட் வடிவமைப்பு வித்தியாசமாக வழங்கப்பட்டுள்ளது. முன்பக்க ஏப்ரான் வடிவமைப்பும் ஸ்போர்ட்டியாக வழங்கப்பட்டு அதில் ஸ்போர்ட்டியான லுக் தரும் ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டுள்ளன.
இதில் புரொஜெக்டர் எல்இடி ஹெட்லைட்டுகள் வழங்கப்பட்டுள்ளது. முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டரும் மற்றும் நேவிகேஷன் சிஸ்டமும் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்கூட்டரில் ப்ளூடூத் ஆக்டிவிட்டி சிஸ்டமும் சப்போர்ட் செய்யும் வகையில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இதன் இன்ஜினை பொருத்தவரை 110.9 சிசி ஏர் கூலர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
இந்த ஸ்கூட்டர் மற்றும் 6 கிலோ வாட் பவரையும், 8.7 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 12.10 இன்ச் கொண்ட அலாய் வீலும் பொருத்தப்பட்டுள்ளது0 இந்த ஸ்கூட்டரின் இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. முன்பக்க டிஸ்க் ஒரு ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.
இந்த ஸ்கூட்டர் 112 கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. இந்த ஸ்கூட்டரில் மொத்தம் 5 லிட்டர் அளவுக்கு எரிபொருளை நிரப்பும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தின் வாகனத்தை மக்கள் பலர் வாங்க விரும்புகிறார்கள். இதனால் மீஸ்ட்ரோ ஸ்கூட்டரின் விற்பனை என்பது குறைந்துவிட்டது. அடுத்தமாதம் இந்த ஸ்கூட்டரை ஒருவர் கூட வாங்காத சூழ்நிலை ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அதிகமான ஸ்கூட்டர்களை விற்பனை செய்யும் ஹீரோ நிறுவனத்தில் இப்படி மக்களுக்கு பெரிய அளவில் ஈர்ப்பில்லாத வாகனங்கள் கூட இருக்கிறதா என்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இருந்தாலும், இதன் வெர்ஷன் மாறிவிட்டால் இருக்கும் சாக்குகளை விற்று தீர்க்கவே இந்த ஸ்கூட்டரை இன்னும் விற்பனையில் இருந்து நிறுத்தாமல் இன்னும் விற்பனையில் இருக்கிறது என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








