அடுத்த வாரத்தின் முதல் வேலை நாளுக்காக நிறைய பேரு காத்திருக்காங்க! அதுல நீங்களும் ஒருத்தரா!

ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் வெகு விரைவில் அதன் புதுமுக பைக் மாடலான மேவ்ரிக் 440 (Mavrick 440)-இன் டெலிவரி பணிகளை இந்தியாவில் தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹீரோவும், ஹார்லி டேவிட்சனும் இணைந்து ஹார்லி டேவிட்சனுக்காக உருவாக்கிய ஓர் பைக் மாடலே எக்ஸ்440 (X440) ஆகும்.

இந்த பைக் மாடலை தழுவி உருவாக்கப்பட்டதே மேவ்ரிக் 440 ஆகும். இதன் டெலிவரி பணிகளே வரும் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதனால், அந்த பைக்கை புக் செய்துக் காத்திருந்தவர்கள் மகிழ்ச்சியில் மூழ்கி இருக்கின்றனர்.

Hero maverick delivery starts on monday

இந்த பைக்கை ஹீரோ நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதத்தில்தான் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த நிலையிலேயே இரண்டு மாத கால தாமதத்திற்கு பின்னர் டெலிவரி பணிகளை இப்போது தொடங்கும் பணயில் ஹீரோ நிறுவனம் தற்போது களமிறங்கி இருக்கின்றது. ஹீரோ மேவ்ரிக் 440 இந்தியாவில் மூன்று விதமான தேர்வுகளில் விற்பனைக்குக் கிடைக்கும்.

பேஸ் (Base), மிட் (Mid) மற்றும் டாப் (Top) ஆகியவையே அந்lத வேரியண்டுகள் ஆகும். இந்த பைக்கின் ஆரம்ப நிலை தேர்வான பேஸ் மாடலுக்கு ரூ. 1.99 லட்சமும், மிட் தேர்விற்கு ரூ. 2.14 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இதன் அதிகபட்ச விலை ரூ. 2.24 லட்சம் ஆகும். இது டாப் வேரியண்டின் விலை ஆகும். மேலும், அனைத்து விலைகளும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பைக்கிற்கான புக்கிங் பணிகள் ஏற்கனவே இந்தியாவில் தொடங்கிவிட்டது என்பது கவனிக்கத்தகுந்தது. நிறுவனத்தின் பிரீமிய டீலர்கள் வாயிலாகவே இந்த பைக் விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது.

ஹீரோ நிறுவனம் இந்த பைக்கை முன் கூட்டியே புக் செய்தவர்களைச் சிறப்பிக்கும் விதமாக ரூ. 10 ஆயிரம் மதிப்புள்ள கிட்-ஐ இலவசமாக வழங்க இருப்பதாக அறிவித்து இருக்கின்றது. மார்ச் 15 க்குள் மேவ்ரிக் பைக்கை புக் செய்தவர்களுக்கு மட்டுமே இது கிடைக்கும்.

மிகவும் கவர்ச்சியான தோற்றம் கொண்ட பைக் மாடலே ஹீரோ மேவ்ரிக் ஆகும். இந்த பைக்கில் 440 சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் ஏர் மற்றும் ஆயில் கூல்டு மோட்டார் ஆகும். 27 பிஎச்பி பவரையும், 36 என்எம் டார்க்கையும் வெளியேற்றும்.

ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 பைக்கிலும் இதே மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆனால், இந்த மோட்டார் மேவ்ரிக்கைக் காட்டிலும் 2 என்எம் டார்க்கை அதிகமாக வெளியேற்றும். ஹீரோ மேவ்ரிக்கின் அதிக கவர்ச்சியான தோற்றத்திற்கு அதன் அணிகலன்களே காரணமாக இருக்கின்றது. இதனால்தான் நிறுவனத்துடைய அதிக கவர்ச்சியான பைக்காகவும் மேவ்ரிக் காட்சியளிக்கின்றது.

வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி டெயில் லைட்டுகள், குமிழ் வடிவிலான ஃப்யூவல் டேங்க் மற்றும் கட்டுமஸ்தான பாடி பேனல்கள் ஆகியவையே மேவ்ரிக்கிற்கு அதிக அழகைச் சேர்க்கும் வகையில் அமைந்திருக்கின்றது. இதுதவிர, மெட்டல் பாடி பேனல்களும் இந்த பைக்கில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ நிறுவனம் இந்திய சாலைகளுக்கு ஏற்ற பைக்காக இதனை தயார் செய்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இதன் அடிப்படையில் 43 மிமீ டெலிஸ்கோபிக் ஃபோர்க் முன் பக்கத்திலும், 7 ஸ்டெப் அட்ஜஸ்டபிள் ட்வின் ஷாக் பின் பக்கத்திலும் வழங்கப்பட்டு இருக்கின்றது.

இத்துடன் மிக சிறந்த பிரேக்கிங் வசதிக்காக இந்த பைக்கில் 320 மிமீ டிஸ்க் முன் பக்கத்திலும், பின் பக்கத்தில் 240 மிமீ டிஸ்க்கும் வழங்கப்பட்டு இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்துடன் டூயல் சேனல் ஏபிஎஸ் சிஸ்டமும் வழங்கப்படுகின்றது. இந்த பைக்கிற்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால், அதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Friday, April 12, 2024, 11:38 [IST]
English summary
Hero maverick delivery starts on monday
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+