ரோட்ல போனா எல்லாரும் திரும்பி பாப்பாங்க! ஹீரோ மேவ்ரிக் 440 பைக் ஓட்டி பார்க்க எப்படி இருக்குது தெரியுமா?

ஹீரோ நிறுவனம் மேவ்ரிக் 440 என்ற புதிய பைக்கை அறிமுகப்படுத்தி இருந்தது. இந்த பைக் மார்க்கெட்டில் உள்ள ராயல் என்ஃபீல்டு ,ஹார்லி டேவிட்சன் உள்ளிட்ட பல முக்கிய நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கு போட்டியாக களமிறங்கியுள்ளது. இந்த பைக்கின் வருகை ஹீரோ ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ள நிலையில் இந்த பைக் குறித்த விரிவான விவரங்களை அதன் ரசிகர்கள் எல்லாம் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இந்த பைக்கை ஓட்டி பார்க்க ஹீரோ நிறுவனம் எங்கள் டிரைவ்ஸ்பார்க் குழுவை அழைத்திருந்தது. அதன் பேரில் எங்கள் குழுவினர் குஜராத் மாநிலம் புஜ் பகுதிக்கு சென்று ஹீரோ மேவ்ரிக் 440 பைக்கை ஓட்டி பார்த்தனர். இப்படியாக ஓட்டி பார்க்கும்போது எங்களுக்கு கிடைத்த அனுபவத்தை விரிவான விமர்சனமாக வீடியோவாக வழங்கியுள்ளோம். இந்த வீடியோவை நீங்கள் கீழே காணலாம்.

ஹீரோ மேவ்ரிக் பைக் இன்ஜினை பொறுத்த வரை 440சிசி திறன் கொண்ட இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 26பிஎச்பி பவரையும் 37என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் இரண்டு பக்கமும் வீலில் ஏபிஎஸ் உடன் கூடிய டிஸ்க் பிரேக் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பைக் மொத்தம் 191கிலோ எடை கொண்டதாக இருக்கிறது. மொத்தம் 13.5லிட்டர் அளவு டேங்க் கொள்ளளவு உள்ளதாக இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது.

hero mavrick 440

இந்த பைக்கின் விலையை பொறுத்த வரை ரூபாய் 1.99 லட்சம் முதல் ரூபாய் 2.24 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. மார்க்கெட்டில் உள்ள பல சிறந்த பைக்குகளுக்கு போட்டியாக இந்த பைக் விற்பனையாகி வரும் நிலையில் ஹீரோ நிறுவனம் இந்த பைக்கின் இன்ஜினை அந்நிறுவனம் தயாரிக்கும் ஹார்லி டேவிட்சன் எக்ஸ் 440 பைக்கின் இன்ஜினை தழுவி உருவாக்கப்பட்டுள்ள இன்ஜின் ஆகும்.

More from DriveSpark

Article Published On: Monday, February 19, 2024, 16:53 [IST]
English summary
Hero mavrick 440 watch review video in tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+