இந்த ஹீரோ ராயல் என்பீல்டை வீட்டுக்கு அனுப்பாம விடாது போலிருக்கே.. இவ்ளோ சீக்கிரமே டெலிவரியை தொடங்க போகுதா!

இந்தியாவில் ராயல் என்பீல்டு (Royal Enfield)க்கு போட்டி அளிக்கும் விதமாக ஹோண்டா, ஜாவா மற்றும் யெஸ்டி உள்ளிட்ட நிறுவனங்கள் அதன் டூ-வீலர்களைத் தயாரித்துக் கொண்டிருக்கின்றன. இவர்களின் வரிசையில் இணையும் விதமாக சமீபத்தில் ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிருவனம், ஓர் தரமான தயாரிப்பை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது.

ஹீரோ மேவ்ரிக் 440 (Hero Mavrick 440) பைக்கே அதுவாகும். ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தின் மலிவு விலை பைக் மாடலான எக்ஸ்440 தழுவி ஹீரோவிற்காக உருவாக்கப்பட்டதே இந்த பைக் மாடல் ஆகும். இந்த பைக் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து புக்கிங் பணிகளும் தொடங்கின.

Hero mavrick 440

ஆன்-லைன் மற்றும் ஹீரோ மோட்டோகார்ப் டூ-வீலர் விற்பனையகங்கள் வாயிலாகவும் இப்பைக்கிற்கான புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. இந்த பைக்கை ஏராளமான இந்தியர்கள் புக் செய்ய தொடங்கி இருக்கின்றனர். இந்த நிலையிலேயே மேவ்ரிக் 440 பைக்கை புக் செய்து அதை கைகளில் பெறுவதற்காக ஆவலோடு காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் தகவலை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது வெளியிட்டு இருக்கின்றது.

அதாவது, இந்த பைக்கின் டெலிவரி பணிகள் எப்போது தொடங்கும் என்கிற தகவலையே அது வெளியிட்டு இருக்கின்றது. வருகின்ற ஏப்ரல் 15 ஆம் தேதி அன்றே இந்த பைக்கின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட இருக்கின்றன. ஹீரோவின் மற்ற தயாரிப்புகளுக்கு கிடைத்துக் கொண்டிருப்பதைப் போலவே இந்த பைக்கிற்கும் இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Hero mavrick 440 engine

இதை உறுதிப்படுத்தும் விதமாக அதன் ஸ்டைல் மற்றும் சிறப்பம்சங்கள் அமைந்திருக்கின்றன. ஹீரோ நிறுவனம் இந்த பைக்கை நியோ ரெட்ரோ டிசைனில் உருவாக்கி இருக்கின்றது. இத்துடன் டிராக்டபிள் மோட்டாரையும் இந்த பைக்கில் வழங்கி இருக்கின்றது. இந்த பைக் சாலையில் தோன்றும்போது மிகவும் முரட்டுத் தனமானதாக இருக்கக் கூடும்.

இதற்கேற்பவே அதன் வெளிப்புற தோற்றம் அமைந்திருக்கின்றது. வட்ட வடிவ எல்இடி ஹெட்லைட், எல்இடி டிஆர்எல்கள், எல்இடி டெயில் லைட்டுகள், குமிழ் வடிவிலான ஃப்யூவல் டேங்க் மற்றும் கட்டுமஸ்தான பாடி பேனல்கள் ஆகியவை பைக்கை அலங்கரிக்கும் விதமாக பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, மெட்டல் பாடி பேனல்களும் இந்த பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன.

Hero mavrick 440 tracking shot

ஆகையால், இந்த பைக்கின் தோற்றம் இன்னும் முரட்டுத் தனமானதாக காட்சியளிக்கின்றது. இதேபோல், சிறப்பம்சங்கள் விஷயத்தில் இந்த பைக் மின்னுகின்றது. அந்தவகையில், ஓர் சூப்பரான வசதிகள் தாங்கிய எல்சிடி இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்டர் ப்ளூடூத் இணைப்பு வசதியுடன் வழங்கப்பட்டு இருக்கின்றது. இதுதவிர, இணைப்பு வசதியும் இந்த பைக்கில் வழங்கப்படுகின்றது.

ஆனால், டாப் வேரியண்டுகளில் மட்டுமே கிடைக்கும். எஞ்சினைப் பொருத்த வரை இந்த பைக்கில் 440 சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் ஏர் மற்றும் ஆயில் கூல்டு மோட்டார் ஆகும். 27 பிஎச்பி பவரையும், 36 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டதே இந்த மோட்டார் ஆகும்.

Hero mavrick 440 wheeling shot

ஹார்லி டேவிட்சன் எக்ஸ்440 பைக்கிலும் இதே மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. ஆனால், அது மேவ்ரிக்கைக் காட்டிலும் 2என்எம் வரை அதிக டார்க்கை வெளியேற்றும். இந்த பைக்கிற்கு சற்று குறைவான விலையையே ஹீரோ நிர்ணயம் செய்திருக்கின்றது. போட்டியாளர்களுக்கு கடுமையான போட்டியை வழங்க வேண்டும் என்பதற்காக இதற்கு ஆரம்ப விலையாக ரூ. 1.99 லட்சம் மட்டுமே நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இதன் அதிகபட்ச விலையே ரூ. 2.24 லட்சம் மட்டுமே ஆகும். அனைத்தும் டெல்லி எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த பைக்கின் வருகை இந்தியாவில் தற்போது விற்பனையில் இருக்கும் 500 சிசி மற்றும் பிற பவர்ஃபுல்லான மோட்டார்சைக்கிள்களுக்கு போட்டியாக அமைந்திருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹீரோ நிறுவனத்தின் ஸ்பிளெண்டர் மற்றும் பேஷன் ஆகிய பைக் மாடல்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதேமாதிரியான வரவேற்பையே இந்த பைக்கும் பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இது எதிர்பார்ப்பு மட்டுமே ஆகும். ஆகையால், இது வெற்றி காணுமா இல்லை, வந்த தடம் தெரியாமல் ஓடி போகுமா என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Tuesday, February 20, 2024, 20:31 [IST]
English summary
Hero mavrick delivery date announced here is more details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X