ஓஎன்டிசி நெட்வொர்க்கில் இணைந்த ஹீரோ.. இதுவே முதல் டூ-வீலர் நிறுவனம்.. இதனால வாடிக்கையாளர்களுக்கு என்ன நல்லது?
உலகின் மிகப் பெரிய இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp,) ஓஎன்டிசி நெட்வொர்க் (ONDC Network)-கில் இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இது ஓர் ஆன் லைன் விற்பனை தளம் ஆகும். வாடிக்கையாளர்கள் இணையத்தின் வாயிலாக தங்களுடைய தயாரிப்புகளை பெற்றுக் கொள்ளும் நோக்கிலேயே இந்த நிறுவனத்துடன் ஹீரோ இணைந்திருக்கின்றது.
இதில் ஏற்கனவே 12 மல்லியனுக்கும் அதிகமான விற்பனையாளர்கள் தங்களை இணைத்துக் கொண்டு தங்களின் தயாரிப்புகளை பிரபல இ-காமர்ஸ் தளங்கள் வாயிலாக விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. இத்தகைய நிறுவனத்துடனேயே தற்போது ஹீரோ மோட்டோகார்ப் தன்னை இணைத்திருக்கின்றது. இதன் வாயிலாக நிறுவனத்தின் ஒரிஜினல் பாகங்கள் வாடிக்கையாளர்களிடம் தங்குதடையின்றி சென்று சேரும் சூழல் உருவாகி இருக்கின்றது.

ஆமாங்க, ஹீரோ மோட்டோகார்ப் இந்த நிறுவனத்துடனான இணைவின் வாயிலாக தன்னுடைய இரண்டு சக்கர வாகனங்களுக்கான பாகங்கள், அணிகலன்கள் மற்றும் பல முக்கிய கூறுகளை ஹீரோ மோட்டோகார்ப் விற்பனைச் செய்ய இருக்கின்றது. இப்போதைய நிலவரப்படி நிறுவனத்தின் பாகங்கள் சர்வீஸ் மையங்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட உதிரி பாக விற்பனையகங்களில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது.
ஆனால், இனி நிறுவனத்தின் உதிரி பாகங்கள் பேடிஎம் மற்றும் மைஸ்டோர் போன்ற தளங்கள் வாயிலாகவும் விற்பனைக்குக் கிடைக்கும். இந்தியாவில் 115 மில்லியனுக்கும் அதிகமான ஹீரோ நிறுவனத்திற்கு இருக்கின்றனர். இவர்கள் அனைவராலும் எளிதில் பலனடைய முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது. குறிப்பாக, செகண்ட் குவாலிட்டி சந்தையில் அதிகம் புழக்கத்தில் இருப்பதை இதன் வாயிலாக ஹீரோ தவிர்க்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும், ஓஎன்டிசி நெட்வொர்க்கில் இணையும் முதல் இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் ஹீரோ மோட்டோகார்ப்-பே ஆகும். ஆகையால், விரைவில் ஹீரோவைத் தொடர்ந்து ஹோண்டா, சுஸுகி, யமஹா, கேடிஎம் மற்றும் பஜாஜ் போன்ற நிறுவனங்களும் ஓஎன்டிசி நெட்வொர்க்கில் இணையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்தியாவில் இப்போதைய நிலவரப்படி ஹீரோ மோட்டோகார்ப் பிராண்டின்கீழ் ஸ்பிளெண்டர் பிளஸ், ஸ்பிளெண்டர் பிளஸ் எக்ஸ்டெக், எச்எஃப் டீலக்ஸ், எச்எஃப்100, கிளாமர், பேஷன் பிளஸ், சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக், கிளாமர் எக்ஸ்டெக், பேஷன் எக்ஸ்டெக், சூப்பர் ஸ்பிளெண்டப், எக்ஸ்ட்ரீம் 125ஆர், எக்ஸ்ட்ரீம் 200எஸ் 4வி, எக்ஸ்ட்ரீம் 125ஆர்,
எக்ஸ்ட்ரீம் 200எஸ் 4வி, எக்ஸ்பல்ஸ் 200டி 4வி, எக்ஸ்ட்ரீம் 160ஆர், எக்ஸ்ட்ரீம் 160ஆர் 4வி, எக்ஸ்பல்ஸ் 200 4வி ஆகிய பைக் மாடல்களையும், டெஸ்ட்டினி, பிரைம், ஜூம், பிளஷ்ஷர் பிளஸ் எக்ஸ்டெக் மற்றும் டெஸ்ட்டினி 125 எக்ஸ்டெக் ஆகிய ஸ்கூட்டர் மாடல்களையும் ஹீரோ விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இதுதவிர, சமீபத்தில் மேவ்ரிக் 440 எனும் மோட்டார்சைக்கிளையும் ஹீரோ விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. இந்த பைக்கின் டெலிவரி பணிகள் சென்ற மாதம் 15 ஆம் தேதி அன்றே தொடங்கியது. இந்த பைக் பேஸ் (Base), மிட் (Mid) மற்றும் டாப் (Top) ஆகிய என 3 விதமான வேரியண்டுகளில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
பேஸ் ரூ. 1.99 லட்சத்திற்கும், மிட் தேர்வு ரூ. 2.14 லட்சத்திற்கும் மற்றும் டாப் வேரியண்ட் ரூ. 2.24 லட்சத்திற்கும் விற்கப்படுகின்றது. அனைத்தும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும். 440 சிசி சிங்கிள் சிலிண்டர் மோட்டாரே மேவ்ரிக் 440 பைக்கில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இது ஓர் ஏர் மற்றும் ஆயில் கூல்டு மோட்டார் ஆகும். இந்த மோட்டார் அதிகபட்சமாக 27 பிஎச்பி பவரையும், 36 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஹீரோ தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு மிக சிறப்பான சேவையை வழங்கும் பொருட்டு ஓஎன்டிசி உடன் இணைந்திருக்கின்றது. இதன் வாயிலாக வாடிக்கையாளர்கள் மிகப் பெரிய அளவில் பலனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








