பிலிப்பைன்ஸில் கொடி நாட்டிய ஹீரோ.. டூ-வீலர் உலகின் ஜாம்பவான் என்பதை ரொம்ப ஸ்ட்ராங்கா உறுதிப்படுத்திட்டாங்க!

இரண்டு சக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனம் என்பதை ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் மீண்டும் ஒரு முறை உறுதி செய்திருக்கின்றது. இந்த நிறுவனம் ஏற்கனவே உலக நாடுகள் பலவற்றில் தன்னுடைய தயாரிப்புகளை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே மேலும் ஓர் புதிய நாடாக தன்னுடைய பட்டியலில் பிலிப்பைன்ஸ்-ஐ ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் இணைத்து உள்ளது. இந்த நாட்டில் தன்னுடைய கால் தடத்தைப் பதிப்பதற்காக அதே நாட்டைத் தாயமாகக் கொண்டு இயங்கும் டெர்ரா-ஃபர்மா மோட்டார்ஸ் கார்பரேஷன் (Terrafirma Motors Corporation) எனும் நிறுவனத்துடனேயே ஹீரோ கை கோர்த்திருக்கின்றது.

இந்திய சந்தைக்காக எப்படி உலக புகழ்பெற்ற ஹார்லி டேவிட்சன் (Harley Davidson) நிறுவனம் ஹீரோ உடன் இணைந்து செயல்படுகின்றதோ, அதேபோல், ஹீரோ பிலிப்பைன்ஸ் சந்தைக்காக டெர்ரா-ஃபர்மா மோட்டார்ஸ் உடன் இணைந்திருக்கின்றது. மேலும், இந்த இணைவின் வாயிலாக ஹீரோ தன்னுடைய உலக அளவிலான இருப்பை மேலும் விரிவாக்கம் செய்திருக்கின்றது.

Hero motoCorp philippines

டிஎம்சி, ஹீரோ பைக்குகளை அசெம்பிள் செய்தல் மற்றும் விநியோகம் செய்தல் போன்ற அனைத்து பணிகளையும் மேற்கொள்ளும் என்பது குறிப்பிடத்தகுந்தது. இதுதவிர நாட்டில் விற்பனைச் செய்யப்படும் வாகனங்களுக்கான சர்வீஸ் பணிகளும் டிஎம்சி தலைமையிலேயே மேற்கொள்ளப்படும் என்பது தெரிய வந்திருக்கின்றது. 2022 ஆம் ஆண்டிலேயே ஹீரோ மற்றும் டிஎம்சி உடனான இணைவு அரங்கேறிவிட்டதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையிலேயே இப்போது இந்த இணைவு செயல்பாட்டில் களமிறங்கி இருக்கின்றது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ஹீரோ நிறுவனம் அதன் முக்கிய தயாரிப்புகள் சிலவற்றையே விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. அந்தவகையில், எக்ஸ்பல்ஸ் 200 4வி (Xpulse 200 4V), ஹங்க் 160ஆர் 4வி (Hunk 160R 4V) மற்றும் ஜூம் 110 (Xoom 110) ஸ்கூட்டர் போன்ற முக்கிய மாடல்களையே அது விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது.

இருப்பதிலேயே குறைவான விலையில் ஜூம் 110 ஸ்கூட்டரே பிலிப்பைன்ஸில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. அதற்கு 69,900 பிலிப்பைன்ஸ் பெசோ விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. அதேவேளையில், பிராண்டின் காஸ்ட்லியான தயாரிப்பாக பிலிப்பைன்ஸில் எக்ஸ்பல்ஸ் 200 4வி-யே காட்சியளிக்கின்றது. அதற்கு 1.40 லட்சம் பிலிப்பைன்ஸ் பெசோ நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

நடுநிலை விலைக் கொண்டதாக ஹங்க் 160ஆர் 4வி காட்சியளிக்கின்றது. இதற்கு 99,900 பிலிப்பைன்ஸ் பெசோ நிர்ணயிக்கப்பட்டு இருக்கின்றது. டிஎம்சி நிறுவனம் பிலிப்பைன்ஸ்-இல் மிகப் பெரிய வலை அமைப்பைக் கொண்டுய இயங்கி வருகின்றது. குறிப்பாக, மிகப் பெரிய ஆலையைக் கொண்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது.

சுமார் 6 ஆயிரம் சதுர அடி அளவிலேயே அதன் ஆலை உள்ளது. இந்த ஆலை ஆண்டு ஒன்றிற்கு 1 லட்சத்து 50 ஆயிரம் யூனிட்டு வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டது என்பது குறிப்பிடத்தகுந்தது. ஹீரோ நிறுவனம் தற்போது உலக அளவில் 48 நாடுகளில் தன்னுடைய கால் தடத்தைப் பதித்து இருக்கின்றது என்பது கவனிக்கத்தகுந்தது.

நிறுவனத்தின் தொழில்நுட்ப மையம் இந்தியா மற்றும் ஜெர்மனியில் செயல்பட்டு வருகின்றது. இதேபோல், உற்பத்தி ஆலை இந்தியா, கொலம்பியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளில் இயங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே தன்னுடைய வர்த்தக பணியை புதிதாக பிலிப்பைன்ஸ் நாட்டில் ஹீரோ தொடங்கி இருக்கின்றது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியர்கள் பலரின் ஃபேவரிட் டூ-வீலர் பிராண்டா ஹீரோ மோட்டோகார்ப் இருக்கின்றது. நம்பகத் தன்மை, குறைவான விலை மற்றும் பராமரிப்பும் குறைவு என்பதாலே இந்த நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதேமாதிரியான டிமாண்டையே பிலிப்பைன்ஸிலும் ஹீரோ பெறும் என நம்பப்படுகின்றது. ஆனால், இதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

More from DriveSpark

Article Published On: Thursday, August 1, 2024, 17:59 [IST]
English summary
Hero motocorp launches its two wheelers in philippines to boost global presence
மேலும்... #hero motocorp
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X