சைடுல இருந்து பார்க்கும்போது இன்னும் ஸ்டைலாக இருக்கு! புக்கிங் துவங்கிட்டாங்க... விலை எவ்வளவு தெரியுமா?

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தில் இருந்து சமீப காலமாக நல்ல வரவேற்பை பெற்றுவரும் பைக்குகளுள் ஒன்று, எக்ஸ்பல்ஸ் 200 (Xpulse 200) ஆகும். இதன் காரணமாகவே இந்த பைக்கை குறிப்பிட்ட கால இடைவெளியில் அவ்வப்போது ஹீரோ நிறுவனம் மறக்காமல் அப்டேட் செய்துவிடுகிறது. அல்லது, குறைந்தப்பட்சம் கஸ்டமர் (Customer)-களை கவரும் பொருட்டு ஸ்பெஷல் எடிசன் (Special Edition)-கள் அறிமுகம் செய்யப்படுகின்றன. அந்த வகையில் தற்போது, ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் புதியதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஸ்பெஷல் எடிசனை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஒவ்வொரு வருட இறுதி மற்றும் துவக்கத்தில் தான் வாகன விற்பனை சிறப்பாக இருப்பது வழக்கம். அதாவது, அந்த சமயத்தில்தான் மக்களுக்கு புதிய வாகனம் வாங்க வேண்டும் என்கிற எண்ணமே தோன்றுகிறது. குறிப்பாக, வருட இறுதி டிசம்பர் மாதத்தில் கிறித்துமஸ், புத்தாண்டு போன்ற பண்டிகைகள் அடுத்தடுத்து வருவதால், வாகனங்கள் அதிகமாக வாங்கப்படுகின்றன.

hero xpulse 200 dakar edition

இதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு, சில நிறுவனங்கள் சலுகைகளையும், புதிய ஸ்பெஷல் எடிசன்களையும் அறிமுகம் செய்கின்றன. அந்த வகையில், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது அதன் எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் புதிய ஸ்பெஷல் எடிசனை அறிமுகம் செய்துள்ளது. ஏற்கனவே கூறியதுபோல், ஹீரோவில் இருந்து நாளுக்கு நாள் பிரபலமாகிவரும் பைக்குகளுள் எக்ஸ்பல்ஸ் 200 ஒன்றாகும்.

ஹீரோ மோட்டோகார்பின் அட்வென்ச்சர் (Adventure) ரக பைக்கான எக்ஸ்பல்ஸ் 200 ஆனது இந்தியாவின் விலை குறைவான அட்வென்ச்சர் பைக்காக விளங்குகிறது. இதன் காரணமாகவே, ஸ்போர்ட்ஸ் மற்றும் நாக்டு பைக்குகளை வாங்கிக் கொண்டிருந்த நம் நாட்டு இளம் தலைமுறையினர் கொஞ்சம் வித்தியாசமாக இருக்கட்டுமே என்று ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கை வாங்க ஆரம்பித்துள்ளனர்.

hero xpulse 200 dakar edition

இத்தகைய ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கில் புதியதாக டக்கார் எடிசன் (Dakar Edition) ரூ.1.67 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வழக்கமான எக்ஸ்பல்ஸ் 200 பைக்குடன் ஒப்பிடுகையில், தோற்றத்தில் வித்தியாசமாக இருப்பதுடன், புதிய டக்கார் எடிசன் ஆனது ஆஃப்-ரோடு (off-Road) பயணங்களுக்கு மேலும் ஏற்றதாக உருவாக்கப்பட்டுள்ளது.

டக்கார் ராலி (Rally), இந்த பெயரை எங்கேயோ கேள்விப்பட்டது போல் உங்களில் சிலருக்கு தோன்றலாம். டக்கார் ராலி ஆனது உலகளவில் பிரபலமான மோட்டார்சைக்கிள் பந்தயங்களுள் ஒன்றாகும். கரடு, முரடான பாதைகள் மற்றும் பாலைவன மணலில் நடத்தப்படும் பைக் பந்தயம் தான் டக்கார் ராலி ஆகும். அதன் நினைவாகவே எக்ஸ்பல்ஸ் 200 டக்கார் எடிசன் உருவாக்கப்பட்டுள்ளது. மற்றப்படி, இந்த பைக்கை டக்கார் பந்தயத்தில் எல்லாம் பயன்படுத்த முடியாது.

hero xpulse 200 dakar edition

டக்கார் போட்டியில் பயன்படுத்த வேண்டுமென்றால், இந்த பைக்கில் பல மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும். இருப்பினும், தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ள எக்ஸ்பல்ஸ் 200 டக்கார் எடிசன் பைக்கின் பெட்ரோல் டேங்கில் 'டக்கார்' லோகோ கொடுக்கப்பட்டுள்ளது. டக்கார் ராலி போட்டிகளில் ஹீரோ மோட்டோகார்ப் ஆனது முன்னணி குழுவாக உள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2023ஆம் ஆண்டு நடைபெற்ற டக்கார் ராலி போட்டியில் 2வது இடத்தை ஹீரோ பிடித்தது.

புதிய எக்ஸ்பல்ஸ் 200 டக்கார் எடிசனில் கொண்டுவரப்பட்டுள்ள மற்றொரு முக்கியமான அப்டேட் என்னவென்றால், முன்பக்க டெலெஸ்கோபிக் ஃபோர்க் சஸ்பென்ஷன் செட்-அப் ஆனது 250மிமீ டிராவல் உடன் முழுவதும் அட்ஜெஸ் செய்யக்கூடியதாக வழங்கப்பட்டுள்ளது. இதனால், 270மிமீ-இல் பைக்கிற்கு பெரிய கிரவுண்ட் கிளியரென்ஸ் (Ground Clearance) கிடைத்துள்ளது. மேலும், இந்த புதிய டக்கார் எடிசனில் 3 ஏபிஎஸ் மோட்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ எக்ஸ்பல்ஸ் 200 பைக்கை அதன் ஆஃப்-ரோடு திறனுக்காகவே ஏற்கனவே நிறைய பேர் வாங்கி வருகின்றனர். அப்படியிருக்கையில், அந்த விஷயத்தில் மேலும் மேம்படுத்தப்பட்ட டக்கார் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது, நிச்சயமாக எக்ஸ்பல்ஸ் 200 பைக்கின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் என்பது உறுதி.

More from DriveSpark

Article Published On: Thursday, December 19, 2024, 11:37 [IST]
English summary
Hero motocorp launches xpulse 200 dakar edition check price all details here
மேலும்... #hero motocorp #new launches #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X