பெட்டி கடைல கடலை மிட்டாய் கணக்கா விக்குது... ஹீரோ டூவீலர்கள் மேல் மக்கள் ஏன் பைத்தியமா இருக்காங்க தெரியுமா?

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் டூவீலர் நிறுவனங்களில் ஒன்று ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp). நடப்பு 2024ம் ஆண்டு மே மாதத்திற்கான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதம் 4,98,123 டூவீலர்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது, கடந்த 2023ம் ஆண்டு மே மாதம் 4,89,336 ஆக மட்டுமே இருந்தது. இது 1.79 சதவீத வளர்ச்சி ஆகும்.

இதன் மூலம் நடப்பு 2024ம் ஆண்டு மே மாதம் இந்திய சந்தையில் அதிக டூவீலர்களை விற்பனை செய்த நிறுவனங்களின் பட்டியலில் ஹீரோ மோட்டோகார்ப் முதலிடத்தை பிடித்து அசத்தியுள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் ஹோண்டா (Honda), டிவிஎஸ் (TVS), பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) மற்றும் சுஸுகி (Suzuki) ஆகிய நிறுவனங்கள் உள்ளன.

Hero Splendor Plus Xtec 2 0

இந்த நிறுவனங்கள் முதல் 5 இடங்களில் உள்ள நிலையில், ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனம், 6வது இடத்தை பிடித்துள்ளது. சரி, ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு வருவோம். இந்திய சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் பல்வேறு பிரபலமான பைக்குகள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனை செய்து வருகிறது.

பைக்குகளை பொறுத்தவரையில், ஸ்பிளெண்டர் ப்ளஸ், ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக், சூப்பர் ஸ்பிளெண்டர், சூப்பர் ஸ்பிளெண்டர் எக்ஸ்டெக், க்ளாமர், க்ளாமர் எக்ஸ்டெக், ஹெச்எஃப் டீலக்ஸ், ஹெச்எஃப் 100, பேஷன் ப்ளஸ், பேஷன் எக்ஸ்டெக் ஆகிய மாடல்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

Hero Splendor Plus Xtec 2 0 Side Design

இதுதவிர செயல்திறன் மிக்க எக்ஸ்ட்ரீம் 125 ஆர், எக்ஸ்ட்ரீம் 200 எஸ் 4வி, எக்ஸ்ட்ரீம் 160 ஆர், எக்ஸ்ட்ரீம் 160 ஆர் 4வி, எக்ஸ்பல்ஸ் 200 4வி மற்றும் எக்ஸ்பல்ஸ் 200டி 4வி ஆகிய பைக்குகளையும் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்து கொண்டுள்ளது. ஸ்கூட்டர்களை பொறுத்தவரையில், மொத்தம் 4 மாடல்கள் உள்ளன.

அவை டெஸ்ட்டினி ப்ரைம், ஷூம், ப்ளஸர் ப்ளஸ் எக்ஸ்டெக் மற்றும் டெஸ்ட்டினி 125 எக்ஸ்டெக் ஆகிய மாடல்களை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. புதிய அறிமுகங்களை பொறுத்தவரையில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் சமீபத்தில் ஸ்பிளெண்டர் ப்ளஸ் எக்ஸ்டெக் 2.0 (Hero Splendor Plus Xtec 2.0) பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய மாடலில், 100 சிசி சிங்கிள் சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 7.09 பிஹெச்பி பவர் மற்றும் 8.05 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் இந்த இன்ஜின் ட்யூனிங் செய்யப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 4 ஸ்பீடு கியர் பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: சிறப்பான மைலேஜ், சரியான விலை நிர்ணயம், தரமான இன்ஜின் மற்றும் நாடு முழுக்க சேல்ஸ் மற்றும் சர்வீஸ் சென்டர்கள் உள்ளிட்ட காரணங்களால்தான், ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் டூவீலர்களை வாடிக்கையாளர்கள் விரும்பி வாங்குகின்றனர். வரும் காலங்களில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் வளர்ச்சி சதவீதம் மேலும் உயரலாம் என நாங்கள் கருதுகிறோம்.

More from DriveSpark

Article Published On: Saturday, June 8, 2024, 23:57 [IST]
English summary
Hero motocorp sales report may 2024 full details
மேலும்... #hero motocorp #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+