காருக்கு மாருதின்னா பைக்குக்கு இவங்க தான்! அப்படி என்ன பண்ணாங்க தெரியுமா?

ஹீரோ நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் டூவீலர் விற்பனையில் மிகப்பெரிய அளவுக்கு வளர்ச்சியை சந்தித்துள்ளது. பண்டிகை காலம் நெருங்கும் நிலையில் அந்நிறுவனம் அதிக எண்ணிக்கையிலான வாகனங்களை விற்பனை செய்து யாரும் எதிர்பாராத அளவு வளர்ச்சியை சந்தித்துள்ளது. தொடர்ந்து இந்நிறுவனம் இந்தியாவில் அதிகமான டூவீலர்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

அக்டோபர் மாதம் பிறந்துள்ள நிலையில் வாகன தயார் நிறுவனங்கள் எல்லாம் கடந்த செப்டம்பர் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளன. அதன்படி ஹீரோ நிறுவனமும் தனது செப்டம்பர் மாத விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன் படி நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் 18.74சதவீத அளவுக்கு வளர்ச்சியை சந்தித்துள்ளது நமக்கு தெரியவந்துள்ளது. இந்நிறுவனம் டூவீலர் விற்பனையில் மட்டும் சிறிய அளவு சரீவை சந்தித்துள்ளது மற்ற அனைத்து விதமான விற்பனைகளிலும் வளர்ச்சியை பெற்றுள்ளது.

Hero MotoCorp Sales Sept 2024

ஹீரோ நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் மொத்தமாக 5,97,529 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4,94,270 பைக்குகளை மட்டுமே விற்பனை செய்தது. தற்போது கூடுதலாக ரூ 1,03,259 பைக்குகள் விற்பனையாகி 20.89 சதவீதம் அளவுக்கு இதன் விற்பனை வளர்ச்சி அடைந்துள்ளது.

அடுத்ததாக ஸ்கூட்டர் செக்மெண்டை பொறுத்தவரை கடந்த செப்டம்பர் மாதம் 39,521 வாகனங்கள் விற்பனையாகி உள்ளன. இதுவே கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 42,229 வாகனங்கள் விற்பனையாக இருந்தது தற்போது 2708 வாகனங்கள் குறைவாக விற்பனையாகி 6.41% அளவுக்கு விற்பனை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

Hero MotoCorp Sales Sept 2024

ஹீரோ நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் மொத்தம் உள்நாட்டு விற்பனையில் 6,16,706 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இதுவே கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5,19,789 வாகனங்களை விற்பனை செய்து இருந்தது. தற்போது கூடுதலாக 96,917 வாகனங்கள் விற்பனையாகி 18.65 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி ஏற்பட்டுள்ளது.

ஏற்றுமதியை பொருத்தவரை ஹீரோ நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் 20,344 வாகனங்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதுவே கடந்த 2023 ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16,710 வாகனங்களை ஏற்றுமதி செய்திருந்தது. தற்போது கூடுதலாக 3,634 வாகனங்கள் ஏற்றுமதியாகி உள்ளது. இது 21.75 % அளவிற்கு மிகப்பெரிய வளர்ச்சி ஆகும்.

Hero MotoCorp Sales Sept 2024

இதுவே கடந்த ஆகஸ்ட் மாத விற்பனையுடன் ஒப்பிட்டு பார்த்தோம் என்றால் கடந்த ஆகஸ்ட் மாதம் பைக்குகளில் 4,78,215 பைக்கில் விற்பனையாகி இருந்தன. அதை ஒப்பிடும்போது கடந்த மாதம் 1,19,314 பைக்குகள் அதிகமாக விற்பனையாகி 24.95 % வளர்ச்சியை பெற்றுள்ளது.

அதே நேரம் ஸ்கூட்டர்களில் 34,145 ஸ்கூட்டர்கள் விற்பனையாகி இருந்தன. அதை ஒப்பிடும்போது கடந்த செப்டம்பர் மாதம் 5376 ஸ்கூட்டர்கள் அதிகமாக விற்பனையாகி 15.74 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளது. இது நல்ல வளர்ச்சியாகும். ஆண்டு ஒப்பீட்டில் ஸ்கூட்டர் விற்பனை சரிவு ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இதுவே உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றிய ஏற்றுமதி ஒப்பிடும்போது கடந்த ஆகஸ்ட் மாதம் 4,92,263 வாகனங்கள் உள்நாட்டில் விற்பனையாகியுள்ளன. கடந்த மாதம் 1,24,443 வாகனங்கள் கூடுதலாக விற்பனையாகி 25.28% அளவுக்கு வளர்ச்சி பெற்று உள்ளது. ஏற்றுமதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 2097 வாகனங்கள் ஏற்றுமதியாகியுள்ளன அதைவிட கடந்த மாதம் 247 வாகனங்கள் கூடுதலாக ஏற்றுமதியாகி 1.23 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி பெற்று உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் டூவீலர் விற்பனையில் ஹீரோ நிறுவனம் முன்னணி நிறுவனமாக இருக்கிறது. தற்போது பண்டிகை கால நெரும்பு நேரத்தில் இப்படியான விற்பனை வளர்ச்சி பெற்று அந்நிறுவனம் பாசிட்டிவான வளர்ச்சியை பெற்றுள்ளது. இது அந்நிறுவனத்திற்கு நல்ல உள் சக்தியாக இருக்கிறது. தொடர்ந்து நிறுவனம் தனது விற்பனையை அதிகரிக்க பல்வேறு யுத்திகளையும் தள்ளுபடிகளையும் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Thursday, October 3, 2024, 11:19 [IST]
English summary
Hero motocorp sales sept 2024 6 37 lakh two wheeler sales
மேலும்... #hero motocorp #india
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X