ஹீரோவின் மூன்று சக்கரங்கள் கொண்ட ஸ்கூட்டர் வெளியீடு.. சறுக்கி விழாம டிராவல் பண்ணிக்கலாம்!
ஹீரோ (Hero) நிறுவனத்தின் மூன்று சக்கரங்கள் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. இந்த வாகனத்தின் சிறப்புகள் என்ன? இந்த வாகனத்தை எப்போது நிறுவனம் வெளியீடு செய்தது? இது விற்பனைக்கு வருவதற்கு ஏதேனும் சாத்தியம் இருக்கின்றதா? இதுபோன்ற அனைத்து முக்கிய விபரங்களையும் இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம், இப்போதைய நிலவரப்படி இந்தியாவில் ஒரே ஒரு எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை மட்டுமே விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. விடா வி1 (Vida V1) எனும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலையே அது விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த மாடலையே மூன்று சக்கரங்களைக் கொண்டதாக உருவாக்கி வெளியீடு செய்திருக்கின்றது, ஹீரோ நிறுவனம்.

அதாவது, விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை தழுவியே இந்த மூன்று சக்கரங்கள் கொண்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை அது உருவாக்கி இருக்கின்றது. அதேவேளையில் டிசைனில் எந்த மாற்றத்தையும் ஹீரோ செய்யவில்லை. முன் பக்கத்தில் ஒற்றை வீலுக்கு பதிலாக இரண்டு வீல்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுவே மிகப் பெரிய மாற்றமாக அந்த வாகனத்தில் தென்படுகின்றது. இத்துடன் முன் பக்க வீலின் சஸ்பென்ஷன் செட்-அப்பும் மாற்றப்பட்டு இருக்கின்றது. இந்த வாகனத்தை வெறும் கான்செப்ட் மாடல் (Concept Model)ஆக மட்டுமே தற்போது ஹீரோ நிறுவனம் தயார் செய்திருக்கின்றது. இந்த வாகனத்தை சமீபத்தில் நடைபெற்ற ஹீரோ வேர்ல்டு 2024 நிகழ்ச்சியின் வாயிலாகவே அது வெளியீடு செய்திருக்கின்றது.

Soure: Bikewale இந்த வாகனம் எப்போது விற்பனைக்கு வரும் என்பது தெரியவில்லை. எதிர்காலத்திலேயே மூன்று சக்கரங்கள் கொண்ட அந்த வாகனம் விற்பனைக்குக் கொண்டு வரப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இதன் வருகைக் குறித்த எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலையும் ஹீரோ வெளியிடவில்லை. ஹீரோ விடா ஸ்வே (Hero Vida Sway) எனும் பெயரிலேயே அந்த வாகனம் வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது.
இது ஓர் டிரைக் (Trike) ரக வாகனம் ஆகும். உலக நாடுகள் சிலவற்றில் இந்த வகை வாகனத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மிக சிறந்த ரைடிங் அனுபவத்தை டிரைக் ரக வாகனத்தில் நம்மால் பெற்றுக் கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
மிக முக்கியமாக சரிந்து விழுவது போன்ற அசம்பாவிதம் இந்த வாகனத்தில் பயணிக்கும்போது ஏற்படாது. இத்துடன், மிக சிறப்பான ஸ்டெபிளிட்டியையும் அது வழங்கும். நாங்கள் ஏற்கனவே கூறியதைப் போல விடா ஸ்வேவானது விடா வி1 ப்ரோவை தழுவியே உருவாக்கப்பட்டு இருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாக பாடி பேனல்கள், ஹெட்லைட் மற்றும் பெயிண்ட் பூச்சு என அனைத்தும் விடா வி1-இல் இருப்பதைப் போலவே காட்சியளிக்கின்றது.
இத்துடன், முன் பக்கத்தில் இடம் பெற்றிருக்கும் இரண்டு வீல்களிலும் டிஸ்க் பிரேக்குகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இது மிக சிறந்த பிரேக்கிங்கை வழங்கும். இதுபோன்று இன்னும் பல்வேறு சிறப்புகளை விடா ஸ்வே தனக்குள் தாங்கி இருக்கின்றது. ஆனால், இந்த வாகனத்தின் முழு சிறப்பம்சங்கள் பற்றிய விபரத்தை அந்நிறுவனம் வெளியிடவில்லை.
இதுபற்றிய விபரம் விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதேபோல், இந்த பைக் உற்பத்திச் செய்யப்படுமா மற்றும் எப்போது விற்பனைக்கு வரும் என்பது பற்றிய விபரத்தையும் ஹீரோ மோட்டோகார்ப் வெளியிடவில்லை. இருப்பினும் இப்போதே பலரின் எதிர்பார்ப்பையும், மனதையும் ஈர்க்கத் தொடங்கிவிட்டது ஹீரோ விடா ஸ்வே.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஹீரோ விடா வி1 எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சொல்லப்போனால் பிரீமியம் அம்சங்களை அதிகம் விரும்பும் இரண்டு சக்கர வாகன காதலர்கள் மத்தியில் விடாவிற்கு அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே ஹீரோ 3 சக்கரங்கள் கொண்ட விடா ஸ்வேவை உருவாக்கி இருக்கின்றது. இது விற்பனைக்கு நல்ல வரவேற்பைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.


Click it and Unblock the Notifications








